12- 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி – எப்போது கிடைக்கும்?

11 to 16 years

Radha Shri

3.1M பார்வை

4 years ago

12- 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி –  எப்போது கிடைக்கும்?

கோவிட் தடுப்பூசி 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புடைய இந்த கோவிட் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் நல்ல பலனைக் காட்டியுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தடுப்பூசியை பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Advertisement - Continue Reading Below

குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி – எப்போது கிடைக்கும்?

ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம்

பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் இந்த ஜைகோவ்-டி(ZyCoV-D)  மருந்தை கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அனுமதி கேட்டுள்ளது. இதற்கு அடுத்த மாதத்திற்குள் கோவிட் -19 க்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி (ZyCoV-D) மருந்துப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

  • முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனைக் காட்டியுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
  • இந்த மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் நல்ல பலனை அளித்தால் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி விரைவில் கிடைக்கக்கூடும்.
  • அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்துக்கு நடுவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
  • மூன்றாம் கட்ட பரிசோதனை சில காலம் கூடுதலாக எடுத்தால் இன்னும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
  • மத்திய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றபிறகு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கொள்கைகள் வகுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூன்று டோஸ்களை கொண்டது

ஜைகோவ்-டி (ZyCoV-D) மருந்து மூன்று டோஸ்களைக் கொண்டுள்ளது.

  • முதல் டோஸ் எடுத்தபின் 28 நாட்கள் கழித்து 2- வது டோஸும் அடுத்தது 56 நாட்கள் கழித்து மூன்றாவது டோஸும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  18 வயது மேற்பட்டவர்களுக்கு வழங்குவது போல் இல்லாமல் இந்தத் தடுப்பூசி நீடில் லெஸ் தொழில்நுட்பத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது.
  •  தடுப்பு மருந்தை ஊசி மூலம் தசைக்குள் செலுத்தாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
Advertisement - Continue Reading Below

ZyCoV-D தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்துக்கு நடுவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Zydus Cadila ஆண்டுக்கு 120 மில்லியன் டோஸ் வரை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. தடுப்பூசி தடுப்பாட்டை தடுப்பதற்காக,  ஒரு வருடத்தில் 40 மில்லியன் மக்களுக்கு ZyCov-D இன் மூன்று தடுப்பூசிகள் போடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும், மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 50 மில்லியன் டோஸை நாட்டிற்கு வழங்குவதாக நம்புகிறது.

ZyCov-D தடுப்பூசி பாதுகாப்பானதா?

ZyCov-D தடுப்பூசி, 1, 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைகளில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தியுள்ளது. இதில் ஆயிரம் பேர் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

டிசம்பர் 2020 இல், பரிசோதனையின் முதல் இரண்டு கட்டங்கள் தடுப்பூசி "பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது" என்று காட்டியது என்று Zydus குழுமத் தலைவர் கூறினார்.

இதுவரை நடந்த பரிசோதனை தரவுகளின்படி, தடுப்பூசி பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில், பெற்றவர்களுக்கு கோவிட் -19 இன் அறிகுறி வழக்குகளில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் அளவு குறைக்க முடிந்தது. இது 3 கட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி போடப்பட்ட 79 முதல் 90 ஆர்டி-பிசிஆர் கோவிட் -19 வழக்குகளை கொண்ட தகவல்கள் என்று சைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்வில் பட்டேல் கூறினார். பரிசோதனை தரவுகளின்படி, கோவிட் -19 இன் கடுமையான அறிகுறிகளை மக்கள் தடுக்கவும், மரணத்தைத் தடுக்கவும் மூன்று டோஸ்கள் சிறந்ததாகவும் அவர் கூறுகிறார்.

மூன்றாம் அலை

ஏற்கனவே கொரோனாவின் முதல் மட்டும் இரண்டாம அலையின் தாக்கத்தை நாம் சந்தித்துள்ளோம். இந்நிலையில் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு தாக்கம் அதிகம் வர வாய்ப்புள்ளதாக தகவல்களை வருவதால் தடுப்பூசி ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளை மூன்றாம் அலையில் இருந்து பாதுகாப்பதில் பெரியவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கிய பங்கு வகிக்கின்றது.

பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா?

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கும் தடுப்பூசி அவசியமாகின்றது. ஏற்கனவே, குழந்தைகள் பள்ளியும் செல்ல முடியாமல், ஆன்லைன் வகுப்பிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் ஏற்படுகின்றது.

இதே போல் குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளும் மிக மிக சுருங்கியுள்ளது. பள்ளி, வெளிப்புற செயல்பாடுகள், சிந்திக்கும் திறன், உடல்/மன ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால் குழந்தைகளின் சூழல் மாற வேண்டும். அதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் தடுப்பூசி போடுவது மிக அவசியமாகின்றது.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தடுப்பூசியைப் பற்றி மேலும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும். எங்கள் நிபுணர்கள் மூலம் உங்களுக்கு பதில் அளிக்க உள்ளோம்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...