கர்ப்ப கால வாந்தியை தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியம்

Pregnancy

Radha Shri

6.2M பார்வை

6 years ago

கர்ப்ப கால வாந்தியை தடுக்க உதவும்  சில  வீட்டு வைத்தியம்
வீட்டு வைத்தியம்

கர்ப்ப காலத்தில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வருவது இயற்கையானது. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்கொள்வதில் வித்தியாசம் இருக்கின்றது. இதில் வேலைக்கு போகிறவர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் வெவ்வேறு விதமான மனநிலை இருக்கும். சிலருக்கு 3 அல்லது 4 மாதம் வரை இருக்கும், சிலருக்கு கர்ப்ப காலம் முழுவதும் இந்த மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களை தாய்மை உணர்வோடு ஏற்றுக் கொள்வதற்கு சில புரிதல் தேவைப்படுகிறது.

Advertisement - Continue Reading Below

பெரும்பாலும் முதல் கர்ப்பமாகும் போது எனக்கும் மட்டும் ஏன் இப்படி வாந்தி வருகிறது என்று யோசிப்பதும் உண்டு. தொடர்ந்து உடல் சோர்வாக இருப்பதை அவ்வளவு எளிதில் நம்முடைய மனம் ஏற்றுக் கொள்வதில்லை. கூடவே பிடித்த உணவே இப்போது வெறுப்போடு பார்க்க தோன்றும். சாப்பிட பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாது. இது ஒருவித மகிழ்ச்சி கலந்த சோர்வும், அவதியும் கொண்டிருக்கு ஒரு உணர்வு.

நான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளேன். ஒன்றரை மாதம் முழுவதும் கடுமையான வாந்தி இருந்தது. இதை நான் சில வீட்டு வைத்தியம் மற்றும் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்கொண்டேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதையெல்லாம் தாண்டி இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மனநிலை நமக்கும் நம் கருவில் வளரும் குழந்தைக்கும் அவசியமாகிறது அதற்காக எந்த அளவும் முயற்சியும், மாற்றமும் நாம் எடுக்க தயாராக இருந்தால் இதை எளிதாக எதிர்கொள்ளலாம்.

 

கர்ப்ப கால வாந்தியை எதிர்கொள்வதற்கான சில வழிகள்

கர்ப்பத்தில் வாந்தியைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே. இதை படிக்கவும்

Advertisement - Continue Reading Below
  • காலை எழுந்தவுடன் பால், காபி, டீ போன்றவற்றை தவிர்ந்த்து விடுங்கள். அதற்கு பதிலாக சத்து மாவு கஞ்சி அல்லது கூழ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். டீ, காபி இன்னும் அதிகமாக வாந்தி உணர்வை தூண்டும். மற்றும் இது நமக்கும் நம் குழந்தைக்கும் ஆரோக்கியம் இல்லை. மசக்கை முடிந்தவுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பிக்கலாம்.
  • உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கிறதோ, எந்த வகையில் சாப்பிட பிடிக்கிறதோ அப்படி சமைத்து சாப்பிடுங்கள். மசாலா, காரம், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  • வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பதால் உடலும், மனமும் சோர்வாகத்தான் இருக்கும். ஆனாலும் அவ்வப்போது காற்றாட சிறிது நடைப்பயணம் மேற்கொள்வது ரிலாக்ஸாக இருக்கும். வாந்தியையும் கட்டுப்படுத்தும்.
  • மயக்கமாக இருக்கும் போது மிதமான சூட்டில் தண்ணீரில் க்ளூகோஸ் கலந்து குடிக்கலாம். அதே போல் எழுமிச்சை சாறு தண்ணீரை சற்று மிதமான சூட்டில் அடிக்கடி பருகலாம்.
  • நாக்கிற்கு ருசியாக இருக்கிறது என்று சில பேர் ஊறுகாய் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். ஊறுகாய் அதிகம் சேர்க்கக்கூடாது. ருசிக்காக சிறிது சாப்பிடலாம். ஊறுகாய் அதிகம் சாப்பிடுவது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும்.
  • காலை, மதியம், இரவு என மூன்று வேலை உணவு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் சிறிய இடைவேளைகளில் சாப்பாடு, காய்கறி சூப், பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ், பச்சப்பயிறு, கொண்டைக்கடலை என கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். அதற்காக எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது என சாப்பிடாமல் இருக்கக்கூடாது. கஞ்சி, கூழ், சூப், பழச்சாறு, நட்ஸ் என ஏதாவது சத்தான உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
  • எனக்கு வாந்தி அதிகமாக இருந்த போது நான் இட்லி, சத்து மாவுக் கஞ்சி, எழுமிச்சை சாதம், புளி சாதம், ரசம், பாசிப்பருப்புடன் காய் கூட்டு, இடியாப்பம், காய்கறி சூப், பழங்கள் பெரிய நெல்லிக்காய் இதைத்தான் அதிகமாக எடுத்துக் கொண்டேன். எளிதாக செரிக்கக்கூடிய உணவுகள் வாந்தியை கட்டுப்படுத்தும்.
  • சாப்பிட்டவுடன் அதீத சோர்வாக இருக்கும். உடனே படுக்கவோ, சாயவோ செய்யாதீர்கள். வாந்தி வரும். அல்லது தூங்கி எழுந்தவுடன் வாந்தி வரும். அதனால் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உட்காருங்கள்.
  • சோர்வாக இருந்தலும் உட்கார்ந்து கொண்டே ஏதாவது வேலை செய்ய முயற்சி செய்யுங்கள். கிராஃப்ர்ட், எழுதுவது, வரைவது என மூளைக்கு சிறிது வேளை கொடுத்துப் பாருங்கள் நமது மனநிலையில் வித்தியாசம் தெரியும்.

பயம் வேண்டாம்

முக்கியமாக பயப்படாதீர்கள். வாந்தி, மயக்கம், சோர்வு இதல்லாம் கர்ப்ப காலத்தில் வருவது இயற்கை மற்றும் ஆரோக்கியமும் கூட. ஆனால் ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல் வாந்தி வருகிறது அல்லது வாந்தி எடுத்தவுடன் அடி வயிற்றில் கடுமையான வலி தொடர்ந்து இருப்பது, வாந்தியில் இரத்தம் வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்களாக எந்த மருந்து மாத்திரையும் மருத்துவர் அறிவுரை இல்லாமல் எடுக்காதீர்கள். மருத்துவரிடம் கேட்டால் வாந்தியை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் அதையும் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வாந்தியை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம் தேர்வு செய்யலாம்.

வாந்தியை கட்டுப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்தியம்

உங்கள் கர்ப்ப நேர வாந்தியைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே. இதை படிக்கவும்

  • இஞ்சி டீ – இயற்கையாக வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சி சிறந்தது. இஞ்சி டீ குடிக்கலாம். தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து அருந்தலாம். இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.
  • எழுமிச்சை பழம் – எழுமிச்சை பழச்சாரும் வாந்தியை கட்டுப்படுத்த உதவும். ஒரு நாள் முழுவதும் மிதமான சூடான தண்ணீரில் எழுமிச்சை பழச்சாறும், சிறிது கல் உப்பும் கலந்து வைத்து கொண்டு அருந்தலாம். எழுமிச்சை சாதம் சாப்பிடலாம். நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த லெமன் டீ குடிக்கலாம்.
  • தண்ணீர் - தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாந்தி எடுக்கும் போது உண்டாகும் உடல் நீர் வறட்சியை மற்றும் மலச்சிக்கலை போக்க தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வாந்தி எடுத்த பின்னும் மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது.
  • இளநீர் மற்றும் மோர் - காலை உணவுக்குப் பிறகு 11 மணியளவில் இளநீர், மோர் குடிக்கலாம். உடல் நீர் வறட்சியை போக்கும் சிறந்த ஆகாரங்கள் இது.
  • பெருஞ்சீரம் – வாந்தி உணர்வு ஏற்படும் போது தண்ணீரில் சிறிது பெருஞ்சீரம் கொதிக்க வைத்து தேன் கலந்து அல்லது எதுவும் கலக்காமலும் சாப்பிடலாம்.
  • பட்டை அல்லது கிராம்பு – பட்டை அல்லது கிராம்பை தனியாக எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

 

மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பாருங்கள். நீங்களும் வாந்தியை தைரியமாக எதிர்கொள்வதோடு உங்களுடைய கர்ப்ப காலம் முழுவதும் இனிமையாக அமையும்.

 

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...