3-7 வயது குழந்தைகளுக்கான 13 சிறந்த விளையாடுகள்

போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். இது கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும், ஆனால் ஒரு எளிதான உறவை பராமரிக்க உதவுகிறது.
விளையாட்டுக்காக உங்கள் குழந்தையை ஊக்குவிக்கும் வழிகள்
மன அழுத்தமின்றி விளையாட்டுகளுக்கு குழந்தையை ஊக்குவிக்க 13 வழிகள் இங்கே. இங்கே படியுங்கள்
- ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும்(Encourage & Support) - பெற்றோர் தங்கள் குழந்தைக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று நம்பிக்கை. நம்பிக்கைக்கான எதிரிகள் சோர்வு மற்றும் பயம் ஆகும். எனவே குழந்தைகள் விளையாட முயற்சிக்கும்போது ஒரு பெற்றோராக உற்சாகம் மற்றும் ஆதரவு அளிப்பது உங்கள் கடமை.
- முதிர்ந்த ஏற்றுக்கொள்ளல்(Mature Acceptance) - பிள்ளைகளிடம் விளையாட்டு என்பது உடலுக்கும் மனதுக்குமான பயிற்சிதான் வெற்றி பெறுவதற்காக அல்ல என்று உணர்த்த வேண்டும். அதுவே அவர்களை பிற்காலத்தில் வெற்றி தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு கொண்டு வரும்.
- விளையாட்டு தேர்வு(Games Choice) - உங்கள் குழந்தை ஆர்வமாக இருக்கும் விளையாட்டுகளை கண்டறிந்து அவற்றை விளையாட ஊக்குவியுங்கள். மாறாக, அவர்களுக்கு ஆர்வம் இல்லாத விளையாட்டில் கட்டாயமாக ஈடுபடுத்தி அதிகமான மனஅழுத்தம் கொடுக்காமல் பொறுமையாக கையாளுங்கள்.
- விரைவான புள்ளி-அவுட் தவறுகள்(Quick Point-out Mistakes) - உங்கள் குழந்தை விளையாட்டில் செய்யும் தவறை நீங்கள் உடனடியாக சுட்டிக்காட்டிவிட்டால், அவர்கள் எந்தவொரு திறமையையும் வளர்த்துகொள்ளமாட்டார்கள். எனவே அவர்கள் செய்யும் தவறை அவர்களையே கண்டறிய கற்றுக்கொடுங்கள்.
- எதிர்பார்க்க வேண்டாம்(Don't Expect Quick Results) - உங்கள் குழந்தை வயதுவந்தோரைப் போல் செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். அந்த எதிர்பார்ப்பு குழந்தைகளில் தன்னம்பிக்கையை குறைக்கலாம். மேலும் அவர்களின் அந்த வயதிற்கு ஏற்ற இயல்பை அது மந்தப்படுத்திவிடும்.
- எப்போதும் பதிலளிக்கவும்(Always Respond) - சில நேரங்களில் குழந்தைகள் முடிவில்லாத சந்தேகங்கள் அல்லது கேள்விகள் கேட்கலாம், ஆனால் அதை ஊக்குவித்து அவர்களுக்கு அந்த விளையாட்டின் மேல் ஆர்வத்தை தூண்டும்படி பதிலளியுங்கள்.
- பொறுமையுடன் விளையாடுங்கள்(Play with Patience) - குழந்தைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு குறுக்கு வழியை கற்றுத்தராமல் பொறுமையுடன் முழுமையாக விளையாட கற்றுக்கொடுங்கள். குறுக்கு வழியில் விளையாட பழகும் குழந்தைகள் பிற்காலத்தில் தோல்வியை மட்டுமே சந்திப்பர். வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய தெரியாது.
- அறிவைத் தூண்டும்(Stimulate Knowledge) - குழந்தைகளின் அறிவுத்திறனை தூண்டும் வகையில் புது புது விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள். அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு சவால் வைத்து அவர்களுடைய அறிவாற்றலை தூண்டுங்கள்.
- விமர்சனத்தைத் தவிர்க்கவும்(Avoid Criticism & Effective feedback) - உங்கள் குழந்தையின் முயற்சியை விமர்சிப்பதை விட பெரிய அவநம்பிக்கை வேறு எதுவும் இல்லை. பயனுள்ள பின்னூட்டங்களை அளிப்பதும் பரிந்துரை செய்வதும் நல்லது - ஆனால் அவர்கள் மோசமாக விளையாடுகிறார்கள் என்று கூறாதீர்கள்.
- கணினி நேரத்தைத் தவிர்க்கவும்(Minimize Screen-time) - கணினி திரையில் உங்கள் குழந்தையை அதிக நேரம் அனுமதிக்காதீர்கள். கணினியில் நெரம் செலவிடுவதால் பிற்காலத்தில் உடல்நிலை பின்னடைவது மட்டும் அல்லாமல் மனநிலை பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். மாறாக, சக குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அவர்களை ஈடுபடுத்துங்கள்.
- தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்(Educate Learn from Mistakes) - தவறுகளிலிருந்து கற்றல் நம்பிக்கையை வளர்க்கிறது. ஆனால், ஒரு பெற்றோராக, அவர்கள் செய்யும் தவறை கற்றுக்கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள். அடுத்த முறை எவ்வாறு சிறப்பாக அணுகலாம் என்பதைப் புரிந்து கொள்ள உதவுங்கள்.
- முயற்சிகளைப் போற்றுங்கள(Admire Efforts) - உங்கள் குழந்தைகள் விளையாடும்போது அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அருகில் இருந்து அவர்களை நீங்கள் பாராட்டும் பொழுது அவர்களின் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும்.
- படைப்பாற்றலை ஊக்குவிக்கவும்(Encourage Creativity) - குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள். அது பிற்காலத்தில் அவர்களின் படைப்பாற்றலை மிகவும் அதிகப்படுத்தும். படைப்பாற்றல் மிக்க குழந்தைகள் கல்வியிலும் சிறந்து விளங்குவர்.
3-7 வயதிற்கான விளையாட்டுகள்:
ஓடி பிடித்து விளையாடுதல், ஒளிந்து பிடித்தல், பொருட்களை உயரமாக கட்டுமானம் செய்து விளையாடுதல், மறைத்து வைத்த பொருட்களை கண்டறிதல், வரைய கற்றுக்கொடுத்தல், பிற குழந்தைகளுடன் வெளியுலகில் விளையாடுதல், மண் சிற்பங்கள் செய்தல், கோர்வையாக வார்த்தைகள் கூறி விளையாடுதல், பரமபதம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தல்.
மனநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்
பொதுவாக நிறைய குழந்தைகள் விளையாடுகையில் தவறு ஏற்பட்டால் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை வளர்த்தல், தெரிந்தே செய்தால் அறிவுரை கூறுதல் போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் வழங்குவர். விளையாடும்போது போட்டி மட்டுமே இருக்கவேண்டுமேயொழிய முடிந்து செல்லும்போது பொறாமை என்பது இல்லாத அளவில் விடை பெறுதல் வேண்டும் என்று கற்றுக்கொடுப்பர்.
இன்றைய சூழலில் விளையாட்டு என்பதில் சன்மானம் வழங்குதல், வெற்றியை மட்டுமே ஊக்குவித்தல் என்பது வந்து விட்ட பிறகு பொறாமை குணம், தன்னம்பிக்கை இழத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் போதல் போன்றவையே பெரும்பாலும் உருவாகின்றன. இதில் முதல் தவறு பெற்றோர்களிடம்தான் இருக்கிறது. அதை நாமும் உணர வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் விளையாட பயிற்சிக்கவேண்டும். பிறகு வெற்றியோ தோல்வியோ தானாகவே வந்தடையும்.
கல்வியும் விஷய ஞானம் பெறுவதற்கேயன்றி வெற்றி பெறுவவதற்காக அல்ல என்பதை சொல்லிக்கொடுங்கள். தயவுசெய்து பிள்ளைகளிடம் விளையாட்டிலும் சரி கல்வியிலும் சரி வெற்றி என்ற இலக்கைத் தினிக்காதீர்கள். மாறாக நோக்கத்தை மட்டுமே எடுத்துச் சொல்லுங்கள். தோல்வியை காணாமல் வெற்றியை மட்டும் பார்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்காது என்பதை சொல்லிக்கொடுங்கள்.
உங்கள் பெற்றோர் கடமை என்ன:
பெற்றோர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று குழந்தைகளை தங்களுடனேயே வைத்திருக்காமல் பிறருடன் பழகவும் விளையாடவும் கற்றுக்கொடுக்கப்பது. அவர்கள் விளையாடாமல் மந்தமாக இருந்தால், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்பட வேண்டும். அதை விட அவசியமானது, குழந்தைகளை தனிமையில் விளையாட விடாமல், அவர்கள் அருகில் இருந்து அவர்களுடன் விளையாடுங்கள்; அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
“குழந்தைகளை கண்காணிப்புடன் நன்கு விளையாட பழக்குவது, பிற்காலத்தில் அவர்கள் சிறந்த சாதனையாளராக மாற உதவும்”
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...