நவராத்திரி மூன்றாம், நான்காம் நாட்கள் - பிரசாத வகைகள் மற்றும் செய்முறை

நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று அம்பாளை, இந்திராணியாக அலங்கரித்து வழிபாடு செய்தல் வேண்டும். அம்பாள் இந்திராணி மாஹேந்திரி, சாம்ராஜ்யனி என்றும் அழைக்கப்படுகிறாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி, யானை வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும்.
நவராத்திரி மூன்றாம் நாள் விசேஷங்கள்:
கோலம். - அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள்.
ராகம் - ஆனந்த பைரவி
மலர் - செண்பகம்
பழம் - பலாப்பழம்
நைவேத்தியம் - மொச்சை சுண்டல், சர்க்கரைப் பொங்கல்
மொச்சை சுண்டல்
மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது
தேவையான பொருட்கள்:
- மொச்சை - ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் சாறு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
- கடுகு - அரை டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - ஒன்று
- கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
- அரிசி – 1 கப்
- பாசிப்பயறு – 1/4 கப்
- பால் – 4 கப்
- வெல்லம் – 1 கப்
- முந்திரி – 3 தேக்கரண்டி
- உலர்திராட்சை – 3 தேக்கரண்டி
- ஏலக்காய் – 5
- நெய் – 1/4 கப்
- தேங்காய் – 1/2 கப்
செய்முறை:
- முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும். நன்றாக மசித்து விடவும்.
- நெய், வெல்லம்(பாகு எடுத்து சேர்த்தால் சுவை) சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும்.
- பின்னர், மற்றொரு வானலியில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை, தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.
நவராத்திரி நான்காம் நாள் விஷேசம்
நவராத்திரி யின் முதல் மூன்று தினங்களில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அந்தவகையில் நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.
கோலம் - அட்சதை படிக்கட்டு
ராகம் - பைரவி
மலர். -மரிக்கொழுந்து
பழம் - கொய்யாப்பழம்
நைவேத்தியம் - கதம்ப சாதம்
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள் :
- பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
- கடலைப் பருப்பு - 1/2 கப்
- துவரம் பருப்பு - 1 கப்
- தண்ணீர் - 5 கப்
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 6 பல்
- புளி - எலுமிச்சையளவு
- எண்ணெய் - 4 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- முருங்கைக் கீரை - 1 கப்
- அரைக் கீரை - 1 கப்
- முருங்கைக்காய் - 1
- அவரைக்காய் - 10
- கொத்தவரங்காய் - 10
- கத்தரிக்காய் - 2
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
- கடுகு,
- உளுத்தம் பருப்பு,
- கறிவேப்பிலை
வறுத்து அரைக்க :
- தேங்காய் துருவல் - கால் கப்
- வத்தல் மிளகாய் - 4
- கடலைபருப்பு - 2 ஸ்பூன்
- தனியா - 4 ஸ்பூன்
செய்முறை :
- அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.
- முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும்.
- வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- புளியை கரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் கழுவிய அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடைசியாக வறுத்து அரைத்த பொடியை போட்டு 2 நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் .ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாதத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
- சுவையான கதம்ப சாதம் தயார்.
நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று மற்றும் நான்காம் நாள் பிரசாதங்களை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்துக்களும் எங்களின் அடுத்த பதிவை சிறப்பாக உதவும். (நவராத்திரி ஐந்தாம், ஆறாம் நாள் பிரசாத வகைகள் - http://www.parentune.com/parent-blog/navratri-fifth-and-sixth-day-offerings-and-foods/6817)
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...