உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான 5 வைட்டமின்கள்

All age groups

Parentune Support

2.7M பார்வை

3 years ago

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான 5 வைட்டமின்கள்
நோய் எதிர்ப்பு சக்தி
Nurturing Child`s Interests

எல்லா குழந்தைகளுடைய அம்மாக்களுக்கும் இருக்கிற ஒரு பெரிய கவலை தன்னுடைய குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் சரியான அளவுல இருக்குதாங்கிறது தான். 

குழந்தைகளோட சீரான ஆரோக்கியத்துக்கு அவங்களுக்கு தேவையான அளவுல வைட்டமின்கள் உடல்ல இருக்குதுறது ரொம்ப முக்கியம். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்களைப் பற்றியும் நம்மோட உணவுப் பழக்கத்துல வைட்டமின் தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணலாம்னும் இப்போ பார்க்கலாம். 

உங்கள் குழந்தைக்குத் தேவையான 5 வைட்டமின்கள்.

Advertisement - Continue Reading Below

வைட்டமின்கள் என்பது நம் உடலுக்குத் தேவையான அமின் என்னும் வேதிப்பொருள் இனத்தைச் சேர்ந்தது. வைட்டமின்களை உடலில் நாம் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது. அதனால் நம் அன்றாட உணவில் அவற்றை சேர்த்துக் கொள்வது அவசியமா இருக்குது. 

வைட்டமின் ஏ

குழந்தைகளோட ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானதாகும். எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியில் இந்த வைட்டமின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரல், மீன் எண்ணெய், முருங்கைக் கீரை, வெண்ணெய், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் ஏ சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

வைட்டமின் பி

Advertisement - Continue Reading Below

அடிக்கடி குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போகுதேன்னு கவலைப்படுறீங்களா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் பி உதவுகிறது. இதயத்தில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் வைட்டமின் பி பயன்படுகிறது. வைட்டமின் பி குறைவதால் வயிற்று மந்தமும் அஜீரணமும் உண்டாகலாம். அதனால் இறைச்சி, தானியங்கள், பயிறு வகைகள் போன்ற வைட்டமின் பி அதிக அளவில் இருக்கிற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அஜீரண கோளாறுகளை சரி செய்ய முடியும்.

வைட்டமின் சி

ஆரோக்கியமான சருமத்திற்கும், ரத்தக்குழாய்கள் வலுவடைவதற்கும் வைட்டமின் சி தேவையானதாக இருக்கிறது. ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் சி குறை உள்ள குழந்தைகள் மன அமைதி இழந்து காணப்படுவார்கள். அவர்களுக்கு மேலே சொன்ன காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான சருமத்துடனும் இருப்பார்கள்.

வைட்டமின் டி

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வைட்டமின் டி துணை புரிகிறது. காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி யை நம் உடலே தயாரித்துக் கொள்ளும். மீன் எண்ணெய், முட்டை ஆகியவற்றிலும் வைட்டமின் டி அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு தினமும் உணவில் ஒரு முட்டை சேர்த்துக் கொடுப்பது, கொஞ்ச நேரம் சூரிய ஒளியில் அவர்களை விளையாட விடுவது ஆகியவை அவர்களுக்கு விட்டமின் டி போதிய அளவில் கிடைப்பதற்கு உதவி செய்யும்.

வைட்டமின் ஈ

உடலில் ரத்தத்தின் சுழற்சியை சீராக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தந்து உடலை பாதுகாக்க வைட்டமின் ஈ உதவுகிறது. வைட்டமின் ஈ குறைபாட்டால் தசைகள் பலவீனம் அடையும். இதனைத் தவிர்க்க பாதாம் பருப்பு, கோதுமை, கீரை வகைகள் போன்ற வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ள உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு அத்தியாவசியமான இந்த வைட்டமின்கள் தினமும் சேர்ப்பதன் மூலம் அவர்களது ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...