உங்கள் குழந்தைக்கு நீர்ச்சத்து குறையாமல் வைக்கும் பானங்கள் natural drinks

All age groups

Parentune Support

4.6M பார்வை

5 years ago

உங்கள் குழந்தைக்கு நீர்ச்சத்து குறையாமல் வைக்கும் பானங்கள் natural drinks
உணவுப்பழக்கம்
பருவ கால மாற்றம்
தண்ணீர்

உங்கள் குழந்தையை கொளுத்தும் வெயிலில், வேர்வையும், வெப்பமும் நம்மை மிகவும் சங்கடமாகவும்,சோர்வடையவும் செய்கிறது. குழந்தைகளுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும், அவர்களை நீங்கள் அதிக நேரம் வீட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆனால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நீங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் என்றால் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை தரலாம். இங்கே, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்களை வீட்டில் எபப்டி தயார் செய்து கொடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.  

Advertisement - Continue Reading Below

வியர்வையின் மூலம் நிறைய நீர் உடம்பிலிருந்து இழக்கப்படுகிறது. இதனை ஈடுகட்ட நாம் என்ன செய்யலாம் என்றால் நீர்ச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக தரவேண்டும். உங்கள் பிள்ளைக்கு  தண்ணீரைக் அதிகமாக குடிக்க கொடுங்கள்.(தண்ணீர் வெப்பத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் ) தண்ணீர் மட்டுமல்ல சோடியம், பொட்டாசியமும் வியர்வையில் இழக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் வியர்வை காரணமாக ஏற்படும் கனிம இழப்புகளை ஈடுகட்ட தண்ணீர் மட்டுமே போதுமானது அல்ல, ஏனெனில் மற்ற திட உணவுகள் உட்கொள்ளப்படுவதால் ஊட்டச்சத்து இழப்பு ஈடுசெய்யப்படுகிறது. இருப்பினும், இந்த கோடை காலங்களில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் உணவு சாப்பிடுவது குறைவாகவே இருக்கும். அதிக வெப்பத்தால் உணவில் ஆர்வம் இல்லாமலும் / பசியின்மையும்  போன்றவைகள் குழந்தைகளுக்கு ஒரு பொதுவான புகார். எனவே தண்ணீருடன், சிறிய அளவில்  எலக்ட்ரோலைட்டுகளும் கலந்து  நீங்கள் கொடுக்கலாம்.

இளநீர் / எலுமிச்சை நீர்-            இளநீர், மற்றும் எலுமிச்சையில் இயற்கையாகவே பொட்டாசியமும் சோடியமும் நிறைந்துள்ளது.   வியர்வையின் மூலம் வெளியேறிய நீரின் இழப்பை ஈடுசெய்ய முடியும். இதன் மூலமாய்  தேவையான நீர்ச்சத்தும்,  குழந்தைகள் சோர்வடையாமலும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

உதவிக்குறிப்பு:  ஐஸ்கிரீம் அச்சுகளில் தேங்காய் தண்ணீரை ஊற்றி, சிறு சிறு துண்டுகளாக்கிய பழங்கள் / பெர்ரி / லிச்சிகளைச் சேர்த்து  உறைய வைத்து குழந்தைகளுக்கு ஐஸ் ஆக கொடுக்கலாம்.

சூப்பர் குளிரூட்டிகள்-  பார்லிநீர், மோர், வில்வ பழ சர்பத் இவைகள் உடலுக்கு குளிர்ச்சி தரும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இவைகள்  போதுமான நீர்ச்சத்து, எலக்ட்ரோலைட்டுகள், கலோரிகளை வழங்குகின்றன.  மேலும் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. 

Advertisement - Continue Reading Below

வில்வ பழத்தில் சர்பத் செய்யும் முறை:  பழுத்த வில்வ பழத்தை உடைத்து விழுதுகளை வெளியே எடுக்கவும். விழுதை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பிறகு, நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது சர்க்கரை, புதினா இலைகளை சேர்த்து குளிர்ச்சியாக குடிக்க கொடுக்கலாம்.

மில்க் ஷேக் - குழந்தைகள் வெப்பம் காரணமாக சில நேரங்களில் போதுமான  திட உணவை  எடுத்துக்கொள்வதில்லை. எனவே பால் மற்றும் வாழைப்பழம், சப்போட்டா அல்லது மாம்பழம்  போன்ற பழங்களை பாலில் கலந்து கொடுப்பதால் (மில்க் ஷேக்)   போதுமான சக்தி, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். ஊட்டச்சத்தை மேலும் அதிகரிக்க ஊறவைத்த பாதாம் பிஸ்தாவை சேர்க்கவும்.  குழந்தைக்கு பால் அதிகம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் தயிர் சேர்க்கலாம், அது அதே நன்மைகளையும் குளிர்ச்சியையும்  தரும். ஒரு மில்க் ஷேக் செய்ய  நீங்கள் ஆப்பிள், திராட்சை அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்த பழத்தையும் சேர்க்கலாம்.

மாங்காய் (பன்னா) ஜூஸ்  - மாங்காய், ஃபால்சா மற்றும் புளி போன்ற புளிப்பு உணவுகளை பன்னா தயாரிக்க பயன்படுத்தலாம். இவை எலக்ட்ரோலைட்டுகளுடன் வைட்டமின் சி யையும் வழங்குகின்றன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இங்கே இந்த பழங்களின் விழுதுகளை சர்க்கரை / உப்பு மற்றும் தண்ணீரில் சேர்க்கப்படுகிறது. சுவை அதிகரிக்க புதினா இலைகளையும் சேர்க்கலாம்.

 உதவிக்குறிப்பு:  உங்கள் பிள்ளைக்கு ஐஸ் லாலிகளை உருவாக்க ஐஸ்கிரீம் அச்சுகளில் பன்னாவை உறைய வைக்கவும்.

ஆரோக்கியமாக இருக்க  திரவ உணவுகள் மற்றும் கோடையில் உட்கொள்ள வேண்டிய இன்னும் சில உணவுகள் உள்ளன.

முலாம்பழங்கள்-  தர்பூசணி, கிர்ணி பழம், முலாம்பழம், ஆகியவை மிக அதிக நீர் தன்மை  கொண்ட பழங்கள். இவை நார்ச்சத்துக்கு சிறந்த தேர்வாகும், மேலும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இந்த பழங்களின் நீர் மற்றும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கும் உதவுகின்றன, மேலும் குழந்தையின் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

உதவிக்குறிப்பு:  ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி முலாம்பழத்தின் விழுதை எடுத்து  சிறிய ஸ்கூப் செய்யவும் அல்லது நட்சத்திரம், பிரமிடு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வெட்டவும். பிரகாசமான வண்ணங்கள் மற்றும் அழகான வடிவங்கள் குழந்தைகளை ஈர்ப்பது உறுதி.

பூசணிக்காய், புடலங்காய், சாம்பல்பூசணி, மற்றும் சுரைக்காய்கள் அதிக நீர் உள்ளடக்கிய காய்கறிகளாகும். இந்த காய்கறிகள் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை, அவை உங்கள் குழந்தையின் வயிற்றை இதமாக வைத்திருக்க உதவும்.

அரிசி: மிகவும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தானியங்களில் ஒன்றாகும். பருப்பு சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் சாதம் அல்லது  கிரேவி  (வெப்பமான கோடை மதியங்களுக்கு சரியான தேர்வு) செய்து கொடுக்கலாம். புலாவை தயாரிக்க நறுக்கிய காய்கறிகளைச் அரிசியுடன் சேர்த்து சமைக்கலாம் மற்றும் புதினா ரைத்தாவுடன் பரிமாறலாம்.


இன்னும் சில குறிப்புகள்:

  1. குளிர்சாதன பெட்டியில் எப்பொழுதும்  (ஹைட்ரேட்டிங் பானம்) எலுமிச்சை ஜூஸ், மாங்காய் ஜூஸ், வில்வப்பழம் சர்பத் ஏதாவது ஒன்றை செய்து வைக்கலாம். (முன்னுரிமை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்கலாம் )
  2. வெளியில் பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கும் பானங்கள்  மற்றும் பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் அவற்றைத் தவிர்க்கவும், மேலும் அவை உடலுக்கு கெடுதலும் சக்தியை குறைக்க கூடியதாகவும், மந்தமாகவும் இருக்கும்.
  3. கார்பனேட்டட் பானங்களை தவிர்த்திடுங்கள்.
  4. உங்கள் பிள்ளைக்கு தொண்டை புண் அறிகுறிகளைக் காட்டினால், மேலே குறிப்பிட்டுள்ள ஊட்டமளிக்கும் பானங்கள் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவருக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்காமல்  வழங்கலாம்.
  5. வெளியில் செல்லும்போது  குழந்தைக்கு எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் / அல்லது  எலுமிச்சை நீர்  கொண்டு செல்லுங்கள்.

இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நீர்ச்சத்தை அதிகரிக்கும் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...