குழந்தைகளுக்கு உணவில் இரும்பு ஏன் தேவைப்படுகிறது?

All age groups

Sagar

6.0M பார்வை

6 years ago

குழந்தைகளுக்கு உணவில் இரும்பு ஏன் தேவைப்படுகிறது?

குழந்தைகள் மிக வேகமாக வளர்வார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே, அதனால் தான் குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் அக்கரை காட்டி உணவுகளை அதற்கேற்ப தயாரித்து கொடுத்து வருகின்றனர் நமது தாய்மார்கள். சத்தான உணவு இந்த சமயத்தில் தான் குழந்தை உடலில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உணவு மூலம் கிடைக்கும் சத்துக்களில் இரும்பு சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தொடர்ச்சியாக பெறப்படும் இரும்பு சத்தால் அறிவாற்றல் அதிகரிக்க செய்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் புரதம் உடம்பில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது இரும்பு சத்து.

Advertisement - Continue Reading Below

குழந்தைகளுக்கு இரும்பு ஏன் தேவைப்படுகிறது

சுமார் 6.9 mg அளவு  இரும்பு சத்து குழந்தைகளுக்கு தினசரி தேவை, உண்மை என்னவென்றால் 50 சதவிகித குழந்தைகளுக்கு போதிய இரும்பு சத்து கிடைப்பதில்லை, இரும்பு சத்து குறைவதானால் குழந்தைகளுக்கு  சோர்வு உண்டாகி ரத்த சோகை ஏற்பட்ட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் தாய் பால் மூலம் தேவையான இரும்பு சத்து கிடைத்து விடுகிறது, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த சோகை இருந்தால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்வது நல்லது.

அதேபோல் தாய் பால் அல்லாமல் பார்முலா பால் அருந்தும் குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகம் கிடைக்கக்கூடிய பாலை தேர்ந்தெடுப்பது சிறந்தது. 6 மாதத்திற்கு பிறகு திட உணவை சாப்பிட ஆரம்பம் ஆகும் போது இன்னும் வேகமான வளர்ச்சியை அடைய தொடங்குகிறார்கள்.  மாறி வரும் உணவு பழக்கங்களை கவனத்தில் கொண்டு குழந்தை பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியம்.

வயதுவாரியாக ஒரு நாளைக்கு தேவைப்படும் இரும்பிச்சத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  வயது ஒரு நாளைக்கு தேவைப்படும் இரும்புச்சத்து           
7 முதல் 12 மாதங்கள்11mg
1 முதல் 3 ஆண்டுகள்7mg
4 முதல் 8 ஆண்டுகள்10mg
9 முதல் 13 ஆண்டுகள்8mg
14 முதல் 18 வயது11mg (சிறுவர்களுக்கு) 15mg (சிறுமிகளுக்கு)

இரும்புச்சத்து குறைப்பாட்டின் அறிகுறிகள்

குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்காத போது அவர்களிடம் தெரியும் அறிகுறிகள் என்னென்ன

  • மெதுவாக எடை அதிகரிப்பது
  • வெளிறிய தோல்
  • பசியின்மை
  • எரிச்சல் (பிடிவாதம், அடம்)

இரும்புச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருப்பார்கள். இரும்புச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு பள்ளியிலும் பாதிக்கப்புகள் இருக்கும். கவனக்குறைவு, ஞாபக சக்தி குறைவு மற்றும் அகடமிக்கிலும் அவர்களுடைய செயல் திறன் மோசமாகும். மேலும் அவர்களை பலவீனமாகவும், சோர்வாகவும் உணரவைக்கும்.

இரும்பு வகைகள்

பொதுவாக நமது உணவில் இரண்டு வகையான இரும்பு சத்துக்கள் உள்ளன, காய்கள், பழங்களில் Non heme  எனும் வகையும், இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் Heme மற்றும் Non heme  எனும் இரண்டு வகையான இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது .சைவ உணவுகளை உண்ணும் குழந்தைகள் அதிகப்படியான இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும், Non heme இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள vitamin C வகைகள்

  1. ஆரஞ்சு பழம்
  2. திராட்சை
  3. பப்பாளி
  4. தக்காளி  
  5. ஸ்ட்ராபெர்ரி
  6. பெல் மிளகுத்தூள்
  7. பப்பாளி
  8. பரங்கி

இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற பலவற்றில் இரும்பு சத்து உள்ளது.

Advertisement - Continue Reading Below

இரும்பு மூலங்கள் என்றால் என்ன?

இறைச்சி

இறைச்சி மற்றும் கோழி இரும்பின் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது. அவை பெரிய அளவிலான ஹீம் இரும்பு கொண்டிருக்கும். இலகுவான இறைச்சியை நன்கு வேகவைத்து குழந்தைகள் உண்ணும் பதத்தில் காரம் மற்றும் சுவைக்கேற்ப சமைத்து கொடுக்க வேண்டும், கொழுப்புள்ள பகுதிகளை நீக்கிவிட்டு கொடுக்கவேண்டும்.

சிறு தானியங்கள்

சிறு தானிய வகைகளில் இரும்பு சத்துக்கள் அதிகப்படியாக உள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது 2 முறையாவது உணவில் சேர்ப்பது சிறந்தது.

பீன்ஸ் வகைகள்

இறைச்சி சாப்பிடாத குழந்தைகளுக்கு பீன்ஸ் வகைகள் ஒரு வரப்பிரசாதம், விட்டமின்களும் மினரல்களும் அதிகம் உள்ள சோயா பீன்ஸ், ராஜ்மா பீன்ஸ், பட்டாணி போன்ற பல வகைகளில் கொட்டிக்கிடக்கின்றன.

கீரை

கீரைகளில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன, அரை கப் பாலக் கீரையில் சுமார் 3mg இரும்பு சத்து உள்ளது, ஒவ்வொரு கீரைக்கும் தனிச்சிறப்பு உண்டு, அதனை ஆராய்ந்து சம அளவில் குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே கொடுத்து பழக்கப்படுத்திவிட வேண்டும்.

உலர் பழங்கள்

உலர் பழங்களில் குழந்தைகளுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் உள்ளன, மலச்சிக்களைப் போக்கும் இந்த பழங்களை சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுத்துப்  பழக்க வேண்டும், கால் கப் உலர் திராட்சையில் மட்டும் 1mg இரும்பு சத்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உருளை கிழங்கு தோல்

பொதுவாக நாம் உருளை கிழங்கு  தோலை அகற்றிவிட்டு சமைப்பது வழக்கம், உருளை கிழங்கு தோலில் பல வகையான சத்துக்கள் நிரம்பியுள்ளன, கிழங்கை காட்டிலும் அதன் தோளில் மட்டும் 5 மடங்கு இரும்பு சத்து இருப்பதாக கூறப்படுகிறது.  

இரும்புச் சத்து ஏன் தேவைப்படுகிறது?

ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படாது. மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம். உங்கள் குழந்தைக்கு ரத்த சோகை இருக்கும்பட்சத்தில் ரத்த பரிசோதனைக்கு பிறகு மருத்துவர் சில இரும்பு சத்துமிக்க சப்ளிமெண்ட்ஸ்களை பரிந்துரைப்பார். அவர் கூறிய அளவின்படி அதனை கொடுக்க வேண்டும் அளவிற்கு அதிகமான இரும்பு சத்து சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வதால் வேறு பல உடல் பிரச்சனைகள் வரவாய்ப்புள்ளது, ஆகையால் மிகுந்த கவனத்துடன் ஆவாரை குழந்தைகளுக்கு தருவது நல்ல பலன் தரும்.

 

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...