எனது மகள் 4மாதங்கள் ஆகின்றது . அவள் மலம் கழிக்கும் போது கட்டியாகவும் மற்றும் புளித்த வாடை வருகிறது. தாய்ப்பால் பத்தாத காரணத்தினால் பிஸ்கட் மற்றும் பசும்பால் தருகிறோம்.
Translated to English
My daughter is 4 months old. When she stools her stupor and fermentation comes. We are fed with biscuits and cowans for breastfeeding.

Created by
Updated on Jan 18, 2019
Answer:
வணக்கம் ரேவதி, மலம் கட்டியாக இருப்பதற்கு பிஸ்கட் காரணமாக இருக்கலாம். மாட்டுப்பாலை அடிக்கடி மாற்றினாலும் அதாவது ஒரு மாட்டுப்பாலாக இல்லாமல் இருந்தாலும் இப்படி ஆகும்.முதல் ஆறு மாதம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்தது. தாய்ப்பால் அதிகம் சுரக்கும் உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். பூண்டு, சின்ன வெங்காயம், பாசிப்பருப்பு, காய்கறிகள், பாலக் கீரை, பால் சுரா புட்டு, சத்து மாவுக் கஞ்சி போன்ற சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். பிஸ்கட் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. cerelac அல்லது குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு ஃபார்முலா பால் கொடுக்கலாம். 5 மாதம் ஆகும் போது இட்லி, ராகிப்பால், சத்து மாவுக் கஞ்சி, வேக வைத்த காய்கறிகள் இப்படி உங்கள் குழந்தைக்கு மெல்ல மெல்ல கொடுக்க தொடங்கலாம்.