0-1 வயது குழந்தைகளின் மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி

Jul 27, 2022, 6:00 pm - 7:00 pm

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்தில் தொடங்கி, முதுமை வரை தொடர்கிறது. குழந்தை வளரும் போதே நல்ல அறிவாற்றலோடு சிறந்த மூளை வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் எல்லா பெற்றோர்களும் நினைக்கின்றோம். ஒரு கட்டிடத்தைப் போல, அதற்கு வலுவான அடித்தளம் தேவை. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பற்றி நாம் அறியப்படாத தகவல்கள் ஏராளம் உள்ளது.

  • குறிப்பாக பிறந்தது முதல் 1 வயது வரை உள்ள குழந்தையின் வளர்ச்சியில் வலுவான அடித்தளத்திற்கும், ஆரோக்கியமான மூளையை உருவாக்கவும் அன்பான, நிலையான, நேர்மறையான உறவுகள் உதவுகிறது.
  • உங்கள் குழந்தையின் மூளையை மன அழுத்தம் போன்ற எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
  • உங்கள் தினசரி நடைமுறைகள் முதல் உங்கள் குழந்தை தொடர்பு கொள்ளும் நபர்கள் வரை தினசரி அனுபவங்கள் உங்கள் குழந்தையின் மூளையை வடிவமைக்க உதவுகின்றன

குழந்தையின் மூளை எப்படி செயல்படுகிறது?

மூளை என்பது பல்வேறு பகுதிகளால் ஆனது, அவை நாம் கேட்பது, நடப்பது முதல் பிரச்சனை தீர்க்கும் வரை மற்றும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஆளவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் மில்லியன் கணக்கான மூளை செல்கள் அல்லது நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்கள் சினாப்சஸ் எனப்படும் சிறிய இடைவெளிகளில் இரசாயன செய்திகளை அனுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன.

செய்திகள் மீண்டும் மீண்டும் உள்வாங்கப்படுவதால், அதிகமான இணைப்புகள் உருவாக்கப்பட்டு "நரம்பியல் பாதைகள்" உருவாகின்றன. இந்த பாதைகளை மூளையின் "வயரிங்" என்று சொல்கிறார்கள். வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில், இந்த இணைப்புகள் மிக வேகமாக வளர்கின்றன.

எனவே இந்த வளர்ச்சி எப்படி நடக்கிறது? இங்குதான் பெற்றோரின் பங்கு மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது. உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியமான வழிகளில் வளர நீங்கள் உதவலாம். இதற்கு விலை உயர்ந்த பொம்மைகள் அல்லது உபகரணங்கள் தேவையில்லை, நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது!

மூளை வயரிங் அமைப்பு எப்படி வடிவமைக்கப்படுகிறது: அதாவது, உங்கள் 0-3 வயது குழந்தையின் மூளை எவ்வாறு வளர்கிறது - அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் பள்ளியில் நன்றாக செய்யும் திறனை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கும். பிற்கால வாழ்க்கையில், அது அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை,  மற்றவர்களுடன் அவர்கள் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் பாதிக்கலாம்.

0-1 வயது குழந்தைகளின் மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி. ஒவ்வொரு மாதமும் என்னென்ன வளர்ச்சி நடக்கும்? என்பதை அறிய ஸ்ரீவித்யா வெங்கட்ராமன் குழந்தை மனநல ஆலோசகருடன் நேரலையில் இணைந்திடுங்கள்.

Sreevidya Iyer, Psychologist/ counsellor/ REBT therapist.

Psychologist/ counsellor/ REBT therapist.

Register Now
Skip

Please complete the form to send your question to Sreevidya Iyer

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}