கொரோனா தொற்றிலிருந்து குணமாக உதவும் உணவு மற்றும் ஊட்டச்சத்து – குடும்பத்திற்கான முழு டயட் டிப்ஸ்

Jan 29, 2022, 3:00 pm - 4:00 pm

கோவிட்-19 தொற்றின் தாக்கத்திலிருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. ஆனால் அதற்குள் அடுத்தது ஓமிக்ரான் புதிய மாறுபாடு மற்றும்  மூன்றாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக நம்முடைய அன்றாட நடவடிக்கைகள் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது சற்று நிம்மதி அளித்தது. அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி ஆழமாக தெரிந்து வைத்திருந்தாலும், அவ்வப்போது தவிர்க்கவும் செய்தோம். ஆனால் மறுபடியும் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது.

இன்றைய சூழ்நிலையில்  குடும்பமாக நாம் அனைவரும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்காததால் நிச்சயமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்வது மட்டுமில்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் முறையாக பின்பற்றினால் மட்டுமே நம்மையும் நம் குடும்பத்தையும் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.

ஆரோக்கியமான பழக்கங்களை பேணுங்கள்

COVID-19 தொற்றுநோய், நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலை  நமக்கு அளித்துள்ளது. ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல் (COVID-19 மற்றும் காய்ச்சல் உட்பட) மற்றும் வழக்கமான மருத்துவ சோதனைகள் மற்றும் உடல்நலப் பரிசோதனைகள் போன்ற நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் குடும்பம் அதை உருவாக்க முடியும்.

விதவிதமான உணவுகளின் கலவையை சாப்பிடுங்கள் உதாரணத்திற்கு கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி; அல்லது மாவுச்சத்து கிழங்குகள் அல்லது வேர்கள், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் பயறு மற்றும் பீன்ஸ்), காய்கறிகள், பழங்கள் ஆகிவயை. அசைவ உணவுகள் (எ.கா. இறைச்சி, முட்டை மற்றும் பால்.

காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உண்ணுங்கள்

 • பல்வேறு வகையான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிகளுக்கு சர்க்கரைகள், கொழுப்புகள் அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகளை விட காய்கறிகளையும் பழங்களையும் தேர்வு செய்யவும்,
 • காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக சமைப்பதைத் தவிர்க்கவும் இது முக்கியமான வைட்டமின்களை இழக்க செய்கின்றது.

உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக பயன்படுத்துங்கள்

 • உணவுகளை தயாரிக்கும் போது, உப்பு மற்றும் உயர் சோடியம் காண்டிமென்ட்கள் (எ.கா. சோயா சாஸ் மற்றும் மீன் சாஸ்) அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்
 • உப்பு மற்றும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகளை (எ.கா. தின்பண்டங்கள்) தவிர்க்கவும்.
 • செயற்கை குளிர்பானம் அல்லது சோடா மற்றும் பிற பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். இதில் சர்க்கரை அதிகம் (எ.கா. பழச்சாறுகள், சிரப், மணமூட்டி பால் வகைகள் மற்றும் யோகர்ட்)
 • இனிப்பு சிற்றுண்டிகளுக்கு (குக்கீகள், கேக்குகள் மற்றும் சாக்லேட்) பதிலாக பழங்களைத் தேர்வு செய்யவும்

மேலும் இது போன்ற உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் என்னென்ன? கொரோனா தொற்றிலிருந்து குணமாக உதவும்  என்னென்ன உணவு முறை பின்பற்ற வேண்டும்? உங்கள் குடும்பத்திற்கான முழு டயட் டிப்ஸ் பற்றிய அனைத்து ஆலோசனைகளையும் அறிய Rachel Deepthi தாய் மற்றும் குழந்தை  ஊட்டச்சத்து நிபுணருடன் நேரலையில் இணைந்திடுங்கள். உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

Rachel Deepthi, Nutritionist

Registered Dietitian. Specialized in Maternal and child health nutrition, diabetes management, sports nutrition & weight management. 

 

Pay 99 to register now

| Jan 28, 2022

hello madam, en sister ponnu adikadi sick agura, veeta vitu veliya poi vilayadurathila, 3 1/2 age agudhu, ella foods sapdurathila, eppadi healthy ya kodukiradhu? daily eppadi nutirtious ah kodukiradhu? food options kodunga pls

 • Report

| Jan 29, 2022

Hello madam Bayangarama இருமல் இருக்கு... ena panalum sariya pogala... adhuku ethavadhu tips... ipo kids ku lam school open pana poranga.. epdi kuzhandhaigala healthy ya pathukradhu... school ku poga start panita foods sariya sapda matanga... so ena madri foods immune boost pandra madri kudukalam... cold cough vandhalum COVID ah nenachu bayapadnuma... how to handle the kids health.. please tell us some suggestions

 • Report

| Jan 29, 2022

Hi mam, ippo than symptoms theriya arambikudhu, throat pain, head ache athikagama iruku, enna foods sapidanum? recover aga help panra diet solunga madam...

 • Report

| Jan 29, 2022

Madam, என் பொன்னுக்கு loose motion, fever இருக்கு, ஒண்ணும் சாப்பிடறதில்ல, எப்படி சாப்பிட வைக்கிறது? குழந்தைகளுக்கு கொரோனா இருந்தா என்னென்ன foods கொடுக்கலாம்? ரொம்ப tired ah இருக்கா, energy boost பண்ற foods suggest பண்ணுங்க pls..

 • Report

| Jan 29, 2022

வணக்கம் மேடம்... என் பையனுக்கு 4 நாளா நெஞ்சுசளியா இருக்கு. அவன் பாட்டிக்கு கொரோனா இருந்துச்சு, இவனுக்கு result negative than. but சளி தான் அதிகமா இருக்கு.. சாப்பிட ரொம்ப கஷ்டப்படுறான்.. biscuits கேக்கிறான்.. வேறதுவும் சாப்பிட பிடிக்கலனு சொல்றான்.. என்ன சாப்பாடு கொடுக்கலாம்? என்ன கசாயம் கொடுக்கலாம்?

 • Report

| Jan 29, 2022

En husband kum mother in law kum covid positive enakum en pasagalukum negative.. nanga eppadi protective ah irukanum. Home quarantine lairukum pothu eppadi foods edukanaum.. protect panna enna nutritious foods edukanum. Pls madam diet plan kodutheengﹰNa useful ah irukum. Thank you

 • Report

| Jan 29, 2022

Hello Doctor!

 • Report
Skip

Please complete the form to send your question to Rachel Deepthi

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}