
கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது?
Nov 05, 2021, 3:00 pm - 4:15 pm
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவைப்படுகிறது. நம்முடைய அம்மா, பாட்டி காலம் போல் இப்போது சூழல் இல்லை. கருத்தரிப்பது முதல் பிரசவம் வரை பல்வேறு பிரச்சனைகளை இந்த கால பெண்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். தாமதமாக வயது, உடல் ஆரோக்கியம், மனநிலை, குடும்ப சூழல், வேலை, நிதி என ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். வயது அதிகரிக்கும் போது நம் உடலின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. சிலருக்கு சுகமான பிரசவ காலமாக அமைந்துவிடுகிறது, சிலருக்கு பிரசவ காலம் முழுவதும் ஏதாவது சிக்கல் இருந்து கொண்டே இருக்கின்றது.
கர்ப்ப கால மன அழுத்தம் என்பது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். இதில் கவலை அல்லது மன அழுத்தமும் ஒன்று. இது சாதாரணமானது. இந்த மன அழுத்தத்துக்கு காரணம் கர்ப்பம். அரிதாக சில நேரங்களில் இந்த மன அழுத்தம் மக்களுக்கு நன்மை கூட செய்யலாம். ஆனால் அதிகமாக மன அழுத்தம் கொண்டிருப்பது குழந்தைக்கும் சுகாதார பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
குடும்பத்தில் எதிர்பாராமல் உண்டாகும் மரணம், கடந்தகால பிரச்சனை, மனச்சோர்வு மற்றும் பிற மன நோய் வருத்தங்கள் உணர்ச்சி அழுத்தங்கள் கர்ப்பகாலத்தில் அதிக மன அழுத்தத்தை உண்டு செய்யும். இப்படி பல காரணங்கள் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிக்கு மன அழுத்தத்தை உண்டு செய்கின்றன.
நாள்பட்ட மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் உண்டாக்கலாம் என்பது தவறான கருத்து. மன அழுத்தம் ப்ரீக்ளாம்ப்சியாவை உண்டாக்காது. ஆனால் இது இரத்த அழுத்தத்தில் குறுகிய காலத்தில் கூர்மையை உண்டாக்கும்.
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் உள்ள அனைவருக்கும் ப்ரீக்ளாம்ப்சியா உண்டாகாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ப்ரீக்ளாம்ப்சிய இரத்த அழுத்தம் மற்றும் உறுப்புகளை பாதிக்கும் கர்ப்பகால சிக்கல் ஆகும். இது குழந்தை பிரசவத்தில் முன்கூட்டிய சிக்கலை உண்டாக்கும். சுமார் 5% பெண்கள் இதை கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் சொல்கிறது. அதே நேரம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ப்ரீக்ளாம்சியா இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டமாக இருந்தால் அது கருச்சிதைவு அபாயத்தை உண்டாக்கலாம். அதிக அழுத்தம் கொண்ட பெண்களின் ஆரம்ப கால கருச்சிதைவுக்கு இரண்டு மடங்கு மன அழுத்தம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
Sreevidya Iyer, Psychologist/ counsellor/ REBT therapist.
Psychologist/ counsellor/ REBT therapist.


| Nov 05, 2021
helo madam, எனக்கு 7 மாசம் ஆகுது, வீட்டுல support பண்ண யாரும் இல்ல. வேலையும் செஞ்சுட்டு, என்னையும் பதுக முடியல, எல்லார் மேலையும் கோபம் வருது. திடீர்னு சந்தோஷமா இருகு, அப்புறம் கவலையா இருக்கு, திடீர்னு ரொம்ப அழனும் போல இருக்கு மேடம், என்ன செய்துன்னு கூட சொல்ல தெரியல. நான் happy யா இருக்கனும்னு நினைக்கிறேன்? ஏன் இப்படி இருக்கு? எப்படி சரி செய்யறது?


| Nov 05, 2021
Hi mam! enaku delivery aana piraku romba erichal, kovam sometimes aggressive ah behave panna thonudhu idhu normala? veetula ellaarum enna pathi thappa nenaikuranga? ellaarukum thappaa theriyudhu, yarukita kekanum kuuda theriyala enaku... romba kastamaa iruku, intha environment innum enna pressure panra mathiri iruku.. idju solution enna ? intha beautiful period ah miss panna kuudathumu nenakiren..
Please complete the form to send your question to Sreevidya Iyer
hello madam, nan 6 months pregnant, enaku anxiety issue iruku, athanala mood swings, kopam athikama varudhu, ithai eppadi handle pannaum? tips ethavathu sollunga madam.