டீன் ஏஜ் பிள்ளைகளிடம் கண்டிப்பு மட்டுமல்ல அளவற்ற அன்பையும் பெற்றோர் எப்படி வெளிப்படுத்துவது?

Aug 03, 2022, 3:00 pm - 4:00 pm

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்கள்

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

பொதுவாக பெண் பிள்ளைகள் 10 அல்லது 11 வயதில் அவர்களின் உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. இது குறைந்தது 8 வயது முதல் கூடுதலாக 13 வயது வரையிலும் பாலியல் வளர்ச்சி தொடர்கிறது. மார்பகம் வளர்ச்சியடையும். மார்பகத்தின் முலைக்காம்புகள் பெரிதாகி, அதை சுற்றிய இடம் கறுப்பாக மாறும், உடலமைப்பிலும், உயரத்திலும் மாற்றங்கள் ஏற்படும். கருப்பையும், பென்ணுறுப்பும் அளவில் அதிகரிக்கிறது. அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்பு பகுதிகளில் முடி வளரும். முகப்பரு வரும். உடல் வனப்பு அதிகரிக்கும். மாதவிடாய் தொடங்க ஆரம்பிக்கும். இனப்பெருக்கத்திற்கு தயாராகும் நிலையை தான் பூப்பெய்தல் என்கிறோம்.

வயிற்று வலி, உடல் அலுப்பு வரத் தொடங்கும். ஒருவித கூச்சம், பயம், தயக்கம் காணப்படும். பெண் பிள்ளைகள் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கும் காரணத்தால் தங்களுடைய உணர்வுகளை, விருப்பங்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்க தயங்குவார்கள். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தன் வயதுடைய எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு ஏற்படும். படிப்பு, இசை, விளையாட்டு, ஓவியம் என்று தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதை மேம்படுத்துவதில் தீவிரம் காட்ட துவங்குவார்கள். பெற்றோரை விட சக நண்பர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில் சொளகரியமாக எண்ணுவார்கள்.

ஆண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

ஆண் பிள்ளைகள் பருவம் அடைவதை அவர்களின் உடலளவிலான மாற்றங்களின் மூலம் வெளிப்படுகின்றன. பொதுவாக இவர்கள் 11 அல்லது 12 வயதிலிருந்து மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மேலும் குறைந்தது 8 வயது முதல் 16 வயது வரையிலும் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லா பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான  மாற்றங்கள், ஒரே காலகட்டத்தில் நடைபெறுவது இல்லை. அரும்பு மீசை, குறுந்தாடி வளரும். இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடையும். உடல் அமைப்புகளின் மாற்றத்தினால் சிறுவர்கள் ஆண்களாக உருமாறுவார்கள். பிறப்புறுப்பு, அக்குள், முகம் ஆகிய இடங்களில் முடி வளரும். குரல் கனமாக மாறும், உயரம் கூடும்.

பெற்றோர்கள் சாலையில் தங்களின் கையை பிடித்து நடப்பதை விரும்ப மாட்டார்கள். தனியாகவோ, தனி அறையிலோ தூங்க ஆர்வம் காட்டுவார்கள். தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் மீது வெறித்தனமான ஈடுபாட்டை காட்டுவார்கள். பாலியல் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கூச்சம், தயக்கம், முன்கோபம், முரட்டுத்தனம் வெளிப்படும். தங்கலின் குறிக்கோளை நிர்ணயிக்க முயற்சி செய்வார்கள்.

தோழமையான அணுகுமுறை

பெற்றோர்கள் நாம் வளரும் போது நமக்கு விதித்த விதிமுறைகளும், நமக்கு கிடைத்த அனுபவங்களையும் இன்றைய இளைஞர்களின் அளவு கோலாக நிர்யணப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. இன்றைய இளைஞர்கள் நம்மை விட அதிகமக இந்த உலகை தெரிந்து வைத்திருக்கிறார்கள். நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களை நம்மை விட கூடுதலாகவே அவர்கள் அறிந்து வைத்திருப்பதை ஏற்று கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது தோழமையான அணுகுமுறை மட்டுமே. தோற்றத்தில் பக்குவமாக தெரிந்தாலும், இன்னும் அவர்கள் தங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யும் குழந்தைகள் தான். பெற்றோர்கள் நமக்கு இந்த டீன் ஏஜ் பருவத்தை ஒருவித பயத்தையும், நெருக்கடியும் கொடுக்கும் பருவமாக நினைக்கிறோம். நம் பிள்ளைகள் தவறான பாதையில் சென்றுவிடக்கூடாது என்று அவர்களுக்கு பல எல்லைகளை உருவாக்கி நாம் காவல் காப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம்.

  • டீன் ஏஜ் பிள்ளைகளிடம் கண்டிப்பு மட்டுமல்ல அளவற்ற அன்பையும் பெற்றோர் எப்படி வெளிப்படுத்துவது?
  • டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும்?
  • டீன் ஏஜ் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உறவை எப்படி பலப்படுத்துவது போன்ற பல சந்தேகங்களுக்கான பதில்களை

அறிய Dr. சித்ரா அரவிந்த் உளவியல் நிபுணருடன் நேரலையில் இணைந்திடுங்கள். உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

 

Dr. Chitra Aravind, Founder - MANAS

Dr. Chitra Aravind, RCI Certified consultant psychologist. She is a founder of MANAS, psychological health services, various counseling, training, and human resource services were undertaken. It has touched the lives of various corporate, educational institutions, social bodies, and the general public. He has been practicing in the field of psychology for almost 20 years.

Register Now
Skip

Please complete the form to send your question to Dr. Chitra Aravind

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}