ஓமிக்ரானுக்கு எதிராக உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

Dec 14, 2021, 3:00 pm - 4:15 pm

இன்று நாம் அனைவரும் மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக கால்கடுக்க தவம் கிடக்க காரணமே ஊட்டச்சத்து குறைவான உணவுகளை அதிகம் உண்பதால் தான்.ஊட்டச்சத்து இல்லா உணவுகளை உண்பதால் தான் கருவில் இருக்கும் குழந்தை முதல் கண் மூட காத்திருக்கும் முதியவர்கள் வரை ஒருவரையும் விடாமல் நோய் தொற்றி கொண்டு உள்ளது.

இந்தியாவில் மட்டும்  60 சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆறு வயதுக்கு உட்பட்ட இருபது லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் ( யூனிசெப்பின் அறிக்கை ) என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஊட்டச்சத்துள்ள உணவின் அவசியத்தை ஆறாம் வகுப்பில் அறிவியல் புத்தகத்தில் படித்ததோடு சரி நம் வாழ்வியல் புத்தகத்தில் அதன் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் புதைத்து விடுகின்றோம்.

சரிவிகித உணவு:

கார்போஹைட்ரைட்டுகள்,புரதங்கள் ,தாதுக்கள், கொழுப்புகள்,உயிர் சத்துக்கள் மற்றும் நீர் இந்த ஆறு மூலக்கூறுகள் நிறைந்த உணவுகளையே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் என்கிறோம்.சரிவிகித உணவை ஒரு மனிதன் சரியான அளவில் எடுத்து கொள்ளும் போது அவனுக்கு அனைத்து சத்துக்களும் மிக சரியாக கிடைக்கின்றன.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள்:

நம் முன்னோர்கள் பிரசவ வலிக்கு கூட மருத்துவமனையை எட்டி பார்த்தது இல்லை நாமோ பின்னங்கால் வலிக்கு கூட மருத்துவமனை நாடி ஓடுகின்றோம்.காரணம் என்னவென்றால் அவர்கள் பாலும் திணையும் உண்டு வாழ்ந்தனர் ஆனால் நாமோ நாகரீகம் என்ற பெயரில் பர்கரும் தித்திப்பு மிகுந்த தீனிகளும் உண்டு வளர்கின்றோம்.

இந்த அவசர உலகில் மாறி வரும் உணவு பழக்க வழக்க முறைகளால் உடலுக்கு உரம் சேர்க்கும் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க உணவுகளை தவிர்த்து பதப்படுத்தப்பட்ட பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட பண்டங்களை உண்கிறோம்.

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்:

நாம் மிக சாதாரணமாக பயன்படுத்தும் பால் தயிர் தொடங்கி நம் மேனியில் படும் சூரிய ஒளி முதல் அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் தான் இந்த இயற்கையின் வர பிரதாதங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.

எடுத்துக்காட்டாக:

மிக சாதாரணமாக எல்லா பருவங்களிலும் கிடைக்கும் கீரைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது. இன்றைய சூழலில் குழந்தைகள் சந்திக்கும் மிக முக்கிய நோய்களில் இரத்த சோகையும் ஒன்று. இரும்பு சத்து இரத்த சோகையை இருந்த இடம் தெரியாமல் அகற்றி விடும். சூரிய ஒளி மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் "டி " கிடைக்கிறது இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பச்சை காய்கறிகள்,மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் "ஏ" சத்து நிறைந்து உள்ளது இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

அவ்வைக்கு அதியமான் அன்பளிப்பாக அளித்த நெல்லிக்கனியில் வைட்டமின் "சி" சத்து அதிகம் உள்ளது. ஒரு முழு நெல்லிக்கனி சாப்பிடுவது ஒரு ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமம். தினம் ஒரு நெல்லிக்கனி உண்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லா பாக்கியசாலிகள்.

இன்றைய இளைஞர்களின் இதயத்தை இளைஞிகள் தாக்குவதற்கு முன்பே இதய நோய் தாக்கி விடுகின்றது. கருவில் இருக்கும் சிசுவுக்கு கூட இதய நோய்கள் இருப்பது இயல்பாகி விட்டது. எண்ணெய் பசைமிக்க மீன்களில் உள்ள ஒமேகா கொழுப்புகள் இத்தகைய நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன.

ஐயோ!! எண்ணெய் பசைமிக்க மீன்கள் நாற்றம் என சொல்லி விட்டு எண்ணெயில் பொறித்த பண்டங்களை நறுமணம் என கூறி திரியும் மக்களுக்காக,

மீன் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட ஒமேகா கொழுப்புகள் நிறைந்த மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகும்

.குழந்தைகளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும் ஊட்டச்சத்துகள் தொடர்பான உங்கள் கேள்விகளை Rachel Deepthi தாய் மற்றும் குழந்தை  ஊட்டச்சத்து ஆலோசகரிடம் கேளுங்கள்

Rachel Deepthi, Nutritionist

Registered Dietitian. Specialized in Maternal and child health nutrition, diabetes management, sports nutrition & weight management. 

 

Pay 99 to register now

| Nov 30, 2021

Hi docter pls tell mee im completed in pregnancy six week but baby have no heart beat mam when get heart beat baby

  • Report

| Dec 13, 2021

Cold fever time la enna foods kodukalam madam. Pls suggest diet tips for my 6 yr old child

  • Report

| Dec 13, 2021

Hello doctor! மீன் எண்ணெய் tablet shop la vangi kudukalam ah enoda 6 years old girl ku... egg ku alternative food ethavadhu kudukalama... pls suggest doctor...

  • Report

| Dec 14, 2021

hello mam, enaku 5yrs payyan irukan.. morning -la enna health drinks kudukuradhu. 5yrs mela milk avoid panna solluranga. avoid pannalama? illa alternate enna kudukalam. pls suggest some immune boost health drinks.

  • Report

| Dec 14, 2021

வணக்கம், என் குழந்தைக்கு 3 வயசாகுது, பழங்கள் சாபிடுறதில்ல.. எப்படி பழங்கள் சாப்பிட வைக்கறது? இந்த சீசன்ல பழங்கள் கொடுக்கலாமா? குளிர்ச்சி ஆகுமா? pls சொல்லுங்க..

  • Report
Skip

Please complete the form to send your question to Rachel Deepthi

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}