உங்கள் குழந்தையின் நடத்தை மற்றும் ஒழுக்கத்தை எவ்வாறு சிறப்பாக வடிவமைப்பது ?

Jun 02, 2022, 6:30 pm - 7:30 pm

ஒழுக்கம் மற்றும் அறநெறி ஆனது ஆசிரியர் மற்றும் பெற்றோரால் குழந்தைக்கு போதிக்கப்பட வேண்டும். எது சரி மற்றும் எது தவறு என்பது போதிக்கப்படும் போதே அவர்களால் அறிய முடியும். அறநெறி, ஒழுக்கம் பற்றின புரிதல் மற்றும் சரி,தவறு பற்றின அறிவானது ஒரு குழந்தை வளரும் சுற்றுச்சூழல், உணர்வு,அறிவு,உடல் மற்றும் சமூக ரீதியான திறன்களைச் சார்ந்தது.

 

விஷயங்களை முன்னுரிமை செய்ய உதவுகிறது

குழந்தைகளுக்கு தேவை அன்பு, கட்டுப்பாடான அமைப்பு ஆகும். குழந்தைகளுக்கு நேரடியாக பார்த்து கற்றுக் கொள்ள ஒருவர் தேவைப்படுகிறார். சொல்லை விட செயலின் தாக்கம் அதிகம். அறிவியல் பாடத்தை கோட்பாடாக கற்பிப்பதைக் காட்டிலும் செயல்முறையாக கற்பிக்கும் போது புரிதலும் முழுமையும் எவ்வாறு கிடைக்குமோ அது போன்றதே ஒழுக்க நெறிகளைப் போதிப்பதைக் காட்டிலும் நாம் அவ்வாறே திகழ்ந்து காட்டுவதே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். சிறு வயதில் விதைக்கப்படும் எவையும் வாழ்நாள் முழுமையும் மாறாது தொடரும் என்பதை நினைவில் கொண்டு நல்லதையே விதைப்போம். நன்மக்களாக நம் குழந்தைகளை வளர்த்து எடுப்போம்.

சிறந்தவர்களாக விளங்குங்கள்

உங்கள் குழந்தைகள், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். நீங்கள் பேசும் செயல்கள், வார்த்தைகளை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஆக எவ்வளவு எளிதாக அவர்களிடையே தாக்கம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள், பிரச்சனைகள் பல இருப்பினும் குழந்தைக்கு ஏற்ற சரியான சூழலையும், குழந்தைகள் முன்னிலையில் நன்நடத்தையையும் பின்பற்றுங்கள்.

உங்கள் மீது முதலில் அக்கறை செலுத்துங்கள்

நீங்கள் உங்களை நெறிப்படுத்திக் கொள்ளுதல் தான் முதல் கட்ட நடவடிக்கையாகும். சரியான தூக்கம், சரியான வேளையில் உணவு உட்கொள்ளல், உடற்பயிற்சி ஆகியன உங்கள் செயல்திறனை உடல் மற்றும் மன ரீதியாக மேம்படுத்தும். நீங்கள் உங்களை சரியாக வழிநடத்தும் திறமை கொண்டவராக இருக்கும் பட்சத்தில் தான் பிறரை உங்கள் குழந்தைகளை வழி நடத்தும் திறன் பெற்றவராக இருப்பீர்.

விசுவாசமாக இருத்தல்

ஒரு கிளிக்கில் பல நாள் பழகிய நண்பரை தம் பேஸ்புக் வட்டாரத்தில் இருந்து எளிதாக விலக்கி வைக்கும் இக்காலக்கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு விசுவாசம் பற்றி சொல்லித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உதவி தேவைப்படும் சமயத்தில் நண்பர்க்கு உதவுதல் போன்றவற்றைக் கற்று கொடுக்க வேண்டும். உங்கள் நல் அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து, அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துங்கள்.

 

  • மற்ற பிள்ளைகளோடு எப்படி விளையாடுவது?மற்ற நபர்களோடு எப்படி தொடர்பு கொள்வது?
  • அவர்களின் பேச்சு மற்றும் மொழி திறனை வளர்ப்பது
  • மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள்
  • வீட்டில் என்னென்ன விளையாடுகளில் ஈடுபடுத்தலாம்?
  • குழந்தைகள் தனியாக என்னென்ன விளையாட்டுகளில் ஈடுபடலாம்?
  • தனிமையில் இருக்கும் குழந்தையின் திறன்களை எவ்வாறு கண்டறிவது? எப்படி வளர்ப்பது?
  • பள்ளியில் எப்படி communicate பண்ண வேண்டும்? தங்கள் தேவைகளை எப்படி கேட்க வேண்டும்?

உங்கள் குழந்தையின் நடத்தை  மற்றும்  ஒழுக்கத்தை எவ்வாறு சிறப்பாக வடிவமைப்பது ? பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நன்னடத்தையை எப்படி பெற்றோர் கற்றுக் கொடுக்கலாம்? என்பதை அறிய ஸ்ரீவித்யா வெங்கட்ராமன் குழந்தை மனநல ஆலோசகருடன் நேரலையில் இணைந்திடுங்கள்

Sreevidya Iyer, Psychologist/ counsellor/ REBT therapist.

Psychologist/ counsellor/ REBT therapist.

Register Now

| Jun 02, 2022

hello madam, en paiyanuku 5 yrs agudhu, romba koba padran, porula thooki poduran, eppadi handle panradhu, pls tell

  • Report

| Jun 02, 2022

en ponnu solradha listen pannave matra, kooda kooda pesura, evolo thadava sonnalum puriyarathila, veetula yaravathu periyavanga pesum pothu, naduvula romba pesura, eppadi control panradhunu sollunga madam

  • Report
Skip

Please complete the form to send your question to Sreevidya Iyer

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}