உங்கள் 0-3 வயது குழந்தையின் பேச்சு மற்றும் கேட்கும் திறன் வளர்ச்சி மைல்கற்கள் பற்றி அறிய

Oct 29, 2021, 11:00 am - 12:15 pm

சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயது வரைகூட பேச ஆரம்பிக்காமல் இருப்பார்கள் கவனித்திருக்கிறீர்களா? 'அவன் அப்பா அஞ்சு வயசுலதான் பேச ஆரம்பிச்சான். இவனும் அந்த மாதிரி பேசிடுவான்' என்று சிம்பிளாக முடித்துவிடுவார்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள். திக்கிப் பேசும் குழந்தைகளை 'திக்குவாயன்' எனச் சொல்லி, அறியாமையால் அப்படியே விட்டுவிடுகிறவர்களும் உண்டு. ஆனால், இதற்கெல்லாம், ஆங்கில மருத்துவத்தில் 'ஸ்பீச் தெரபி' உள்ளிட்ட பல சிகிச்சைகள் தீர்வாக உள்ளது. 

எல்லா குழந்தைகளும் ஒரே வயதில் பேசத் தொடங்குவதில்லை, ஒவ்வொன்றும் அதன் சொந்த தாளத்தைக் கொண்டிருக்கின்றன, சிலருக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் தொடங்குகிறார்கள். பெற்றோர்களாகிய நாங்கள் விளையாட்டைப் பயன்படுத்தி அவர்களைச் செய்ய தூண்டுவதன் மூலம் அவர்களுக்கு உதவ முடியும், 

ஐம்புலன்களில் செவிக்கும் வாய்க்கும், அதாவது காதுக்கும் நாவுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு குழந்தைக்குத் தெளிவாகக் காது கேட்டால், அந்தக் குழந்தை சீக்கிரமே பேச ஆரம்பித்துவிடும். காது  மந்தமாக இருந்தால், பேசுவதில் குறை இருக்கும். இதற்கான காரணம், மூளையில் இருக்கிறது. ஒரு குழந்தையின் காதில், 'அம்மா' என்ற வார்த்தை முதலில் கேட்கப்பட வேண்டும். பிறகு, குழந்தை அம்மாவைப் பார்க்கும். பிறகுதான் 'அம்மா' என்று அழைக்கும். இந்த மூன்று ஏரியாவையும் வளப்படுத்தும் மூளைப் பகுதி, சரியான ஊட்டத்துடன் வளரவில்லை என்றால், காது மந்தமாகி பேச்சு வராது. அல்லது தாமதமாகும். 

அடுத்தது, குழந்தையின் மூளையைத் தூண்டி பேசவைக்க ஆள் இல்லாதது. இன்றைய காலகட்டத்தில்  'அம்மாவைப் பாரு', 'அப்பாவைப் பாரு' எனக் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து யாரும் பயிற்சி அளிப்பதில்லை. அதற்கான நேரமோ, தாத்தா- பாட்டி போன்ற உறவோ இருப்பதில்லை. குழந்தைகளுடன் அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து பேசினால்தான் குழந்தையின் மூளைத் தூண்டப்படும்.

மூன்றாவது காரணம், குழந்தையின் தொண்டையில் அழற்சி, நாக்குத் தொடர்பான நரம்புகளில் கோழைக் கட்டுதல், நரம்பு திசுக்களின் வளர்ச்சிக் குறைவு போன்ற பிரச்னைகள் இருந்தால், நாக்குப் புரள்வது குறைந்து, பேச்சு தாமதப்படும்

பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், தீர்ப்பது சுலபம். உங்கள் 0-3 வயது குழந்தையின் பேச்சு மற்றும் கேட்கும் திறன் வளர்ச்சி மைல்கற்கள் என்னென்ன ? குழந்தை தாமதமின்றி பேச என்னென்ன பயிற்சிகள் ஆரம்பத்திலேயே கொடுக்கலாம்?  என்பதை அறிய விபுலா Speech & Language Pathologist விபுலா ராஜேஸுடன் நேரலையில் இணைந்திடுங்கள். 

Vipula Rajesh Kumar, Head of Speech and Language Department • Smrthi Health Care

Speech-Language Therapist and Audiologist

Trained in the assessment and management of childhood language disorders Autistic Spectrum Disorders, Intellectual Disability, Cerebral Palsy, ADHD, Fluency disorder, Voice disorder, neurogenic speech, and language disorder

Pay 99 to register now

| Oct 28, 2021

Hello ennoda akka paiyanuku 4 months agudhu hearing test eduthom problem ilanu sonnanga but sometimes response ila. Avanuku kathu kekuthanu nan eppadi kandu pidikanum? Pls guide me

  • Report

| Oct 29, 2021

Hello madam, குழந்தையோட வயதுக்கேற்ற பேச்சு, கேட்கும் திறன்கள் எப்படி இருக்கும்னு சொல்லுங்க? என் குழந்தைக்கு 1 வயசாகுது அவளோட response eppadi செய்வாங்க? எவ்வளவு வார்த்தைகள் பெசுவாங்க? சொல்லுங்க மேடம்

  • Report

| Oct 29, 2021

hello mam, enna sister-da payyanuku 3 yrs agudhu innum peasala. oru rendu words mattumdhan peasuran. adhigama TV paapan. screening nala speech delay aguma?pls suggest

  • Report
Skip

Please complete the form to send your question to Vipula Rajesh Kumar

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}