சிறு வயதிலேயே குழந்தைகள் யோகா கற்பதன் பயன்கள் என்ன? யோகாவின் நன்மைகள் என்னென்ன?
Jun 16, 2022, 5:00 pm - 6:00 pm
ஈஷா யோகா மையம் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பலவிதமான யோகப் பயிற்சிகளை வடிவமைத்து பயிற்றுவிக்கிறது. யோகா நமஸ்கர் என்பது ஒரு மனிதனின் உடல், உளவியல் மற்றும் ஆற்றல் பரிமாணங்களை வளர்க்கும் மிகவும் எளிமையான மற்றும் முழுமையான செயல்முறையாகும். உங்கள் இரு கைகளையும் ஒன்றாகக் கொண்டுவரும் எளிய செயல், முழு அமைப்பிற்கும் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு வழியாகும். யோகா நமஸ்காரம் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நேரம், உணவு அல்லது வாழ்க்கை முறையின் அடிப்படையில் உங்களை கட்டுப்படுத்தாது. மற்றும் இந்த எளிய நடைமுறைக்கு எந்த உபகரணமும் தேவையில்லை மற்றும் எங்கும் செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு யோகாவின் முக்கியத்துவம்
யோகாவின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்து கொண்டு அதனை பின்பற்ற தொடங்கிவிட்டது, யோகா பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் எண்ணற்ற பலன்களை தருகிறது. குழந்தைகளுக்கு யோகா கற்றுக் கொள்ள சரியான வயது 7. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க கற்றுக் கொடுக்கிறது யோகா பயிற்சி. இந்த சர்வதேச யோகா தினத்தில் குழந்தைகளுக்கு யோகா கற்பதன் மூலம் கிடைக்கும் முக்கியமான 8 வகை பலன்களை இப்போது பார்ப்போம்
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம்
யோகா தங்களின் இயல்பை உணர செய்வதுடன் எதையும் சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை சிறு வயதிலேயே வர பேருதவியாக இருக்கிறது. இந்த சமூகம் பதவி புகழ் பணம் எவ்வளவு சேர்த்தாலும் போதாது என்ற எண்ணத்தையே விதைக்கிறது, ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றுத்தருகிறது யோகா.
மரியாதை வளர்கிறது
யோகா கற்றுக்கொள்ளும் குழந்தைகள் இவ்வுலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் சந்தோசமாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பசுமரத்தாணிபோல் பதிய செய்கிறது. யோகா பயிற்சி செய்பவர்கள் தங்கள் சுற்றத்தாருடன் அமைதியான உறவை வைத்திருப்பார்கள். இதனால் மற்றவர்களுடன் பிரச்சனைகள் இல்லாத சூழலை உருவாக்குகிறது.
உடல் நலத்தை பாதுகாக்கும்
பொதுவாக உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழிவகுக்கும்.யோகா இதனையும் தாண்டி ஆரோக்கியமான உணவு முறையை வளர்கிறது. தங்களை அமைதிப்படுத்தி கொள்ளவும் கவனத்தை அதிகப்படுத்தவும் உதவுகிறது.
துல்லியமான கவனத்தை தருகிறது
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்கு கவனச்சிதறல்கள் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குழந்தை சிறிது நேரம் கூட முழு கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. யோகாவில் மூச்சு பயிற்சியின் மூலம் நாம் சுவாசிக்கும் மூச்சை ஆழமாக கவனிப்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்தை சிதற விடாமல் செய்கிறது. பலவகையான ஆசனங்களின் வாயிலாக உடலின் மீது கவனம் அதிகரிக்க செய்கிறது இதனால் குழந்தைகளுக்கு கவனம் கூர்மை அடைகிறது.
அமைதிப்படுத்துகிறது
யோகா அமைதிப்படுத்தும் நுட்பங்களை கற்பிக்கிறது. சிறு குழந்தைகள் எளிதில் வெறுப்படைவதும் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிவது என பார்க்கிறோம்.
யோகாவின் மூலம் சுவாச நுட்பங்களையும் அவர்கள் கற்றுக் கொள்ளும்போது, அந்த கருவிகளை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், எந்தவொரு சூழ்நிலையிலும் சரியான முறையில் செயல்படுவதையும் அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா தன்னார்வலர் பிரபு அவர்கள் நேரலையில் இணைகிறார். யோகாவின் நன்மைகள் என்ன மற்றும் சிறு வயதிலேயே குழந்தைகள் யோகா கற்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதையும் இந்த வொர்க்ஷாப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பான உங்கள் கேள்விகளை இப்போதே இணையத்தில் கேளுங்கள்
Prabhu, Isha Volunteer
யோகா நமஸ்கர் என்பது ஒரு மனிதனின் உடல், உளவியல் மற்றும் ஆற்றல் பரிமாணங்களை வளர்க்கும் மிகவும் எளிமையான மற்றும் முழுமையான செயல்முறையாகும்.


Please complete the form to send your question to Prabhu
வணக்கம், என் மகளுக்கு 7 வயசாகுது, எந்த வயசுல யோகா பயிற்சி சொல்லி கொடுக்க ஆரம்பிக்கலாம்? என்னென்ன பயிற்சிகள் இருக்கிறது?