1 வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது?

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 16, 2021

நம் அன்றாட வாழ்கையில் நம் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களை பாதுகாப்பதிலும் நாம் மிகவும் கவனமாக உள்ளோம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செயல் மேலும் அவர்களின் அறிவுத்திறனையும் மற்றும் புத்திக்கூர்மையையும் ஊக்குவிப்பது விளையாட்டுகளே.குறிப்பாக ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு என்னென்ன விளையாட கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
0-12 மாத குழந்தைகளுக்கு பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது
0-3 மாத குழந்தை: மாதக் குழந்தைகளுக்கு அவர்களை ஈர்க்க கூடிய வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது மெல்லிய இசை எலுப்பும் பொம்மைகளை காண்பிக்கலாம்.
3-6 மாத குழந்தை: மாதக் குழந்தைகள் குப்புறப்படுத்து கொண்டு சுற்றி கவனிப்பார்கள். அவர்களுக்கு ஒலி எலுப்பிக் கொண்டே நகரும் பொம்மைகள் மற்றும் கிளுளுப்பு ஆகியவை விளையாட்டுப் பொருட்களை தேர்ந்தெடுக்கலாம்.
6-9 மாத குழந்தை: மாதகுழந்தைகள்உட்கார, தவழ முயற்சி செய்வார்கள். பொருட்களை எடுப்பது, எரிவது, தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.எனவே அவர்களுக்கு நகரும் தன்மை கொண்ட பொம்மைகள் கொடுக்கலாம். இதன் மூலம் நிறத்தை கூர்ந்து பார்க்கும் தன்மை ஏற்படும்.
9 மாத குழந்தை: குழந்தையின் 9 வது மாதம் முதல் அவர்களின் அறிவாற்றல் திறன் மற்றும் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். நடைவண்டி பழக ஆரம்பித்துவிடுவார்கள். இதை தவிர்த்து அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வண்ண வண்ண பந்துகள், பிளாக்ஸ், ஒலி எலுப்பும் பொம்மைகள் போன்றவை வாங்கலாம்.
10 மாத குழந்தை: குழந்தையின் 10 வது மாதத்தில் நன்றாகவும், வேகமாகவும் தவழ ஆரம்பித்துவிடுவார்கள். குட்டி ஆராய்ச்சியாளர்கள் இவர்கள். எல்லா பொருளையும் ஆழமாக ஆராயத் தொடங்கிவிடுவார்கள். கைகளில் பிடிமானத் தன்மையும் சிறப்பாக வளர்ச்சிப் பெற்றிருப்பதால் எந்த பொருள் கிடைத்தாலும் அது வாயிக்கு தான் நேராக செல்லும். ப்ளாக்ஸ், இசை எலுப்பும் பொம்மைகள், மியூசிக்கல் புத்தகம், சைலோ போன் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கலாம்.
1 வயது குழந்தை: ஒரு வயது குழந்தைகள் மிகவும் சுட்டியாக இருப்பார்கள். அவர்கள் தவழவும் எதையாவது பிடித்து நிற்கவும் பழகி இருப்பார்கள். மேலும் இந்த வயதில் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்குவார்கள். எழுத்துக்களை சொல்லும் ஒலி எழுப்பும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். பியானோ, சைலோ போன், சின்ன ட்ரம்ஸ் போன்ற இசைச் கருவிகள் அதிலும் அவர்களின் கைக்கு தாங்கும் அளவில் வாங்கிக் கொடுக்கலாம்.
இந்த வயதில் அடம் பிடித்து அழுது பொருட்களை கேட்பார்கள். நாம் நம் குழந்தைகள் அழுகிறார்கள் என்று அவர்கள் கேட்டதை கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தால் அவர்களுக்கு அடம்பிடித்தால் எந்த பொருளும் கிடைக்கும் என்ற எண்ணம் வந்துவிடும். ஒரு வயது குழந்தைக்கு செயல்முறை விளையாட்டுகளை கற்றுக் கொடுக்கலாம் . பிளாக்ஸ் அடுக்குவது, மட்டை, பந்து போன்றவை கொடுக்கலாம்.
இந்த தருணத்தில் வேறு எந்த பொருளையாவது கொடுத்து அவர்களை திசைத்திருப்ப வேண்டும். நடைவண்டி, பில்டிங் பிலாக்ஸ், ஷேப்ஸ் சேர்ப்பது, நகரும் பொம்மைகள், விலங்குகள், பறவைகள், நிறங்கள் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம்.
குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை. பாதுகாப்பானவை எவை?
குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை பெற்றோர் வாங்கி கொடுக்க வேண்டும். சிறிய சைஸ் பேட்டரிகள், ஸ்க்ரூ போன்றவற்றை குழந்தைகள் விழுங்கிவிடுவார்கள். அதே போல் கூர்மையான, நக்சு பெய்ன்டிலான சின்ன சின்ன மணிகள் கொண்ட பொம்மைகள், ஃபர் மற்றும் வெல்வெட்டால் செய்த பொம்மைகள் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வகை பொம்மைகளை தவிர்க்க வேண்டும். அதிக எடை கொண்ட விளையாட்டுப் பொருட்களைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளின் தரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்து விட்டு பொம்மைகளை விளையாட கொடுங்கள்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.
