0-1 வயது குழந்தைகளின் எடை அதிகரிக்க - மாத வாரியாக டிப்ஸ்

பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிப்பது பற்றிய கவலை அம்மாவின் இயல்பான கவலைகளில் ஒன்றாகும். இது அவர்களை பதற்றப்பட வைக்கும் விஷயம். ஒரு அம்மாவுக்கு இது போன்ற கேள்விகள் தொடர்ந்து இருக்கும்- என் குழந்தையின் எடை சரியான அளவு அதிகரிக்கிறதா, போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா, என் குழந்தையின் எடையை உயர்த்த நான் என்ன செய்ய வேண்டும் போன்றவை.இந்த பதிவில் மாதம் வாரியாக குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மாத வாரியான எடை அதிகரிப்பு குறிப்புகள்:
இதை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்:
- 0-6 மாதம் குழந்தைகளுக்கான எடை அதிகரிக்கும் அட்டவணை
- 6-9 மாதம் குழந்தைகளுக்கான எடை அதிகரிக்கும் அட்டவணை
- 10-12 மாதம் குழந்தைகளுக்கான எடை அதிகரிக்கும் அட்டவணை
எடையை எவ்வாறு ஆரோக்கியமான, சுகாதாரமான முறையில் அதிகரிப்பது என்பதற்கான சில குறிப்புகள் கீழே உள்ளது
0 முதல் 6 மாதங்கள் வரையிலான குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவு ஆலோசனை:
6 மாதம் வரை ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் போதுமான எடையை பெறுகிறது, தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு ஒரு முழுமையான உணவாகும். எனவே, குழந்தை தனது பிறப்பு எடையை 5 மாதங்களில் இரட்டிப்பாக்கியிருந்தால், கவலைப்பட அவசியமில்லை. 4-6 மாதங்களில் குழந்தை சரியான அளவில் ஊட்டம் எடுக்கவில்லை என்றால் குழந்தை மருத்துவரை அணுகவும்.
உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான எடை அதிகரிப்பதற்கும், பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தாய்ப்பால் முக்கியமான உணவாகும்.தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பது ஒரு சவாலாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் பாலை வெளிப்படுத்த வசதியாக மார்பக பம்பைப் பயன்படுத்தலாம், தாய்ப்பால் குறையாமல் பார்த்துக் கொள்வதை இது உறுதி செய்யும்.
6 முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவு ஆலோசனை:
நீங்கள் அரை-திட உணவைக் கொடுக்கத் தொடங்கியதும், உங்கள் குழந்தையின் எடையை மேலும் உயர்த்துவதற்காக சில உணவுகள் உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கப்படவேண்டும். இதன் மூலம் சக்தி மற்றும் புரதம் குழந்தை பெறமுடியும்
1. தானியங்களில் கவனம் செலுத்துங்கள்
உங்கள் குழந்தைக்கு தானியங்களை அறிமுகப்படுத்துவதற்கான முதல் வழி, அரிசி கஞ்சி. நீங்கள் அரிசி, ரவை, முளைத்த ராகி தூள் போன்ற தானியங்களை அதிகம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு கஞ்சி, கீர் அல்லது கூழ் வடிவில் கொடுங்கள். (உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எடை அதிகப்படுத்த ) உங்கள் குழந்தைக்கு பயன்படுத்தும் பாத்திரங்களிலும் சுத்தமாக பராமரித்துக் கொள்ளுங்கள். ஆகவே, உணவளிக்கும் பாட்டில்கள் மற்றும் பிற குழந்தை பாத்திரங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, சரியாக சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால், அவர்கள் போதுமான எடை பெறுவார்கள்.
2. மாவுச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகப்படுத்துதல்
வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கு, காய்கறிகள், இனிப்பு உருளைக்கிழங்கு எடை அதிகரிக்க கொடுக்கலாம். காய்கறிகளை வேகவைத்து மசித்து, சிறிது வெண்ணெய் / நெய் சேர்த்து கொடுக்க வேண்டும். இதேபோல், ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, வெல்லம் சேர்த்தும் கொடுக்கலாம் / பேரீச்சை பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்தும் கொடுக்கலாம். இந்த உணவுகளை தண்ணீரீல் வேகவைப்பதை விட நீராவியில் வேக வைப்பது மிகவும் சிறந்தது, ஏனெனில் நீராவி அதிக ஊட்டச்சத்தை பாதுகாக்கிறது மற்றும் சுவையாகவும் ஆக்குகிறது.
3. முட்டையின் மஞ்சள் கரு மற்றும் மட்டன் / சிக்கன் சூப்-
உங்கள் குழந்தை மருத்துவர் முட்டையின் மஞ்சள் கருவை அறிமுகப்படுத்த அனுமதித்தால், அரை முட்டையை வேகவைத்து மஞ்சள் கருவை வெளியே எடுக்கவும். பின்னர் அதை வேகவைத்த மற்றும் மசித்த உருளைக்கிழங்கு /சாப்பாடு சேர்த்தும் கொடுக்கலாம். ஒரு முழுமையான ஊட்டமளிக்கும் உணவை தயாரிக்க ஒரு டீஸ்பூன் வெண்ணெய் / நெய் சேர்க்கவும். இறைச்சிகளை நன்கு வேக வைக்கவும்.
4. பருப்பு வகைகள்
பச்சை பயிறு / பாசிப் பருப்பை வேகவைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் / வெண்ணெய் / நெய் சேர்த்து நன்கு மசித்துக் கொடுக்கலாம். சுமார் 7-8 மாதங்களில் நீங்கள் சம்பா ரவை/ அரிசி உடன் பருப்புகள் மற்றும் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளுடன் கிச்சடி செய்தும் கொடுக்கலாம்.
5. தயிர் / தயிர் போன்ற பால் பொருட்கள்-
தயிரை செய்ய முழு கிரீம் பாலைப் பயன்படுத்துங்கள். மசித்த பேரீச்சை பழம்/ வாழைப்பழம் அல்லது வெல்லம் சேர்த்து குழந்தைக்கு, குறிப்பாக மதிய நேரங்களில் கொடுக்கலாம்.
10 முதல் 12 மாதங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவு ஆலோசனை:
இந்த நேரத்தில், குழந்தை தனது பிறப்பு எடையை விட மூன்று மடங்கு உயர்த்த வேண்டும். எடை அதிகரிப்பது மெதுவாக இருந்தால், நீங்கள் பின்வரும் உணவுகளில் கவனம் செலுத்தலாம்:
1. தானியங்கள் - கஞ்சி, கூழ், மற்றும் கிச்சடி தவிர நீங்கள் பருப்பு / சிக்கன் சூப் / துருவல் முட்டையுடன் மசித்த சப்பாத்தியை கொடுக்கலாம். வெண்ணெய் / நெய் ஒரு ஸ்பூன் கொண்டு இட்லி / சாதம் சேர்த்து கொடுக்கலாம். சில நேரங்களில், கோதுமை மாவில் / ரவையில் அல்வாவும் செய்து கொடுக்கலாம்.
2. பழங்கள் - பழங்களை கொடுப்பதற்கு பதிலாக பழத்தயிர், பழக்கூள், பழச்சாறு குறிப்பாக வாழை, தேன் மற்றும் பால் ஏடு, பால் / தயிர் ஆகியவற்றால் கலந்த பழ ஸ்மூத்தீஸ் செய்து கொடுக்கலாம். (உங்கள் குழந்தைக்கு பால் ஏடு போன்ற அடர்த்தியான உணவுகளை கொடுக்கும் போது வயிற்று வலி ஏற்பட்டால், தயவுசெய்து நிறுத்துங்கள்).
3. காய்கறிகள் - உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கை அதிகமாக பயன்படுத்துங்கள். அவற்றை சப்பாத்தி, தோசை, கிச்சடி, சூப்கள் அல்லது பிற காய்கறிகளில் சேர்த்தும் கொடுக்கலாம். இந்த காய்கறிகளில் அல்வாவையும் நீங்கள் செய்யலாம்.
4. முட்டை - முட்டை துருவல் கொடுக்கலாம். அல்லது சூப்பில் ஒரு முட்டையை சேர்க்கலாம்.
5. மீன் / கோழி / இறைச்சி - சிறிய துண்டுகளாக்கி மற்றும் நன்கு வேகவைத்த இறைச்சியை மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம், உங்கள் குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். ஆரம்பிக்கும் போது சிறிதளாவு கொடுத்துப் பாருங்கள். குழந்தை ஏற்றுக் கொள்கிறதா என்று சோதித்த பின் தொடர்ந்து கொடுக்கலாம்.
6. வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீர் - முதலாவது பிறந்தநாளுக்கு முன்பாக, குழந்தைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீர் மற்றும் லேசான பதப்படுத்தப்பட்ட சீஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். நீங்கள் வெல்லம் அல்லது நாட்டு சக்கரை தூள் சேர்த்து பன்னீரை நன்றாக பிசைந்து கொள்ளலாம், அதை லட்டுக்களாக உருட்டி உணவாகவோ அல்லது குழந்தைக்கு சிற்றுண்டியாகவோ வழங்கலாம். சீஸ் கொடுத்தால், சீஸ் உப்பு மிக அதிகமாக இருப்பதால் குறைந்த அளவுகளில் செய்யுங்கள்.
7. முழு கொழுப்பு பால் சேர்த்து களி, அரிசி கீர் / பேரீச்சை பழம் மற்றும் காய்ந்த திராட்சையும் சேர்த்தும் கொடுக்கலாம். சேமியா பாயாசம் / கேரட் கீர் போன்ற முழு கொழுப்புள்ள பால் சார்ந்த களி, கூழ் குழந்தையின் எடையை அதிகரிக்க கொடுக்கலாம்.
குறிப்பு: ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்காக உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் உணவுகளைத் தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படாது, வளர்ந்து வரும் ஆண்டுகளில் ஒரு நிலையான ஆரோக்கியமான எடை அதிகரிப்பு தேவை.
எடை அதிகரிப்பதற்கான மேலும் சில உதவிக்குறிப்புகள்:
2 வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு கூடுதல் நெய் / வெண்ணெய் / எண்ணெய் பயன்படுத்த முடியும். குழந்தையின் எடை அதிகமாக இருந்தால், தயவுசெய்து இவற்றை மிதமாகப் பயன்படுத்தவும். முழு கிரீம் பால் 1-2 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது குழந்தை சாதாரண எடையில் இருந்தால், சாதரண பாலை மட்டும் பயன்படுத்துங்கள். மேலே உள்ள உணவுகளை கொடுக்கும்போது, எந்தவொரு ஒவ்வாமையையும் சரிபார்க்க, முதலில் சிறிய அளவுகளை மட்டுமே கொடுங்கள். அலர்ஜி இல்லை என்றால், அந்த உணவுகளைத் தொடரவும்.
உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை மகிழ்ச்சியான முறையில் கொடுத்தாலே எடை இயல்பாகவே அதிகரிக்கும்.இந்த பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...