• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் விளையாட்டு

1-3 வயது குழந்தைகளுக்கான சரியான வெளி விளையாட்டுகள்

Radha Shree
1 முதல் 3 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 25, 2019

1 3

குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடுவதை விட வெளிப்புற சூழலில் விளையாட ஆர்வமுள்ளவர்கள். முக்கியமாக கிராமங்களை விட நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமான வெளிப்புற விளையாட்டுகளை நாம் உருவாக்கி கொடுப்பது அவசியமாகின்றது. என் மகளுக்கு பந்தை வைத்து விளையாடுவது என்றால் மிகவும் பிடித்தமானது. அவள் வீட்டுக்குள் விளையாடுவதை விட வெளியில் விளையாடி விட்டு வரும்போது நன்றாகப் பசித்து சாப்பிடுவதும் தூங்குவதும் இயல்பாகவே நடக்கின்றது. முக்கியமாக கேட்ஜெட்ஸ் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவது குறைகிறது.

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது அவர்களது கற்றல் திறன் இயல்பாகவே அதிகரிக்கிறது. இப்போது இருக்கின்ற டிஜிட்டல் உலகத்தில் நம்முடைய குழந்தைகளின் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவது வெளிப்புற விளையாட்டுகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.  ஆனால் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது என்பது இப்போது பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கின்றது. இருந்தாலும் குழந்தைகள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான வெளிப்புற விளையாட்டுகளை எவ்வாறெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

மணல் விளையாட்டுகள்

குழந்தைகள் மணலில் விளையாடும் போது அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மற்றும் அவர்களது ஃபைன் மற்றும் கிராஸ் மோட்டார் திறன்கள் வளர்வதற்கு இந்த விளையாட்டுகள் உதவுகின்றது. என் மகளை வாரத்தில் இரண்டு முறை பார்க் மற்றும் பீச் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். இதன் மூலம் மணலில் விளையாட வைப்பேன். மணலில் விளையாடிவிட்டு வந்தபின் அவர்களது கை மற்றும் கால்களை நன்றாக சுத்தம் செய்யவும். ஓடிப் பிடித்து விளையாடுவது, பந்தை வைத்து விளையாடுவது சொப்பு சாமான்களை வைத்து விளையாடுவது என பல்வேறு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

தண்ணீர் விளையாட்டுகள்

நாம் எவ்வளவு பொம்மைகள் வாங்கி கொடுத்தாலும் குழந்தகளுக்கு மணலும், தண்னீரும் தான் சொர்க்கம். டிவி டிவி, மொபைல் என அத்தனை உபகரணங்களையும் வெல்லும் சக்தி இவை இரண்டுக்கும் உண்டு. இங்கே சென்னையில் ஆறு, குளம் இல்லாவிட்டாலும்  மிகப்பெரிய கடற்கரை இருக்கிறது. என் மகளுக்கு பிடித்த அடுத்த முக்கியமான விளையாட்டு தண்ணீரில் விளையாடுவது. குளிர் காலங்களில் கவனம் தேவை. சீக்கிரம் குளிர்ச்சியாகிவிடும். அவள் பீச் போனால் அங்கு கடலில் உட்கர்ந்து கொள்வாள். ஆசை தீரும்வரை ஏதோ எழுதி கொண்டே இருப்பாள். அவளுடைய ஃபைன் மற்றும் கிராஸ் மோட்டார் திறன்கள் இயல்பாகவே சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. இப்போது அவள் மாண்டிசெரியில் படிக்கிறாள். அவளுட்டைய மோட்டார் தீறன்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார்கள். இதன் மூலம் என்னால் உணர முடிந்தது. அதே போல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை கூட நாம் விளையாட்டாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். குழந்தையை பராமரிப்பவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருந்தால் தாரளமாக எல்லா சீசன்களிலும் குழந்தைகளை தண்ணீரில் விளையாட வைக்கலாம்.

வண்டி விளையாட்டுகள்

நடைவண்டி, சைக்கிள் மற்றும் இழு வண்டி வகைகளை குழந்தைகளுக்கு தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இந்தப் பருவத்தில் நடை பழகுவார்கள் அதனால் இந்த வகை விளையாட்டுகள் அவர்கள் நடப்பதற்கும், பிடிமானத்தை கற்கவும் உதவும்.

வண்டி விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது பலவிதமான இடங்களை பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது.உதாரணத்திற்கு  வழுவழுப்பான இடம் எது ? கடினமான நிலப்பரப்பு எது? தண்ணீர் தேங்கிய தரையின் தன்மை என்ன? என பல விஷயங்களை அனுபவபூர்வமாக குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள். அதோடு அங்கே எவ்வாறு நடக்க வேண்டும், எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை அனுபவத்தோடு கற்றுக் கொள்கிறார்கள். மேலும் வேகத்தை பற்ரி தெரிந்து கொள்கிறார்கள். வெளிச்சூழலில் வண்டியை ஓட்டும் போது பலவகையான சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. இது வீட்டினுள் விளையாடும் பொழுது இந்த அனுபவங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

பந்து விளையாட்டுகள்

 எல்லா குழந்தைகளுக்கும் பந்து விளையாட்டுகள் மிகவும் பிடித்தமானது. என் மகள் 1 வயதிலேயே பந்து விளையாட தொடங்கிவிட்டால். அவளுக்கு பொம்மைகள் மீது பிரியம் கிடையாது. எந்த கடைக்கு சென்றாலும் அவள் பந்தை தான் தேர்ந்தெடுப்பாள். அவள் பல நிறங்களில், டிசைன்களில் பந்தை பார்ப்பதால் குதூகலமாகிவிடுவாள். என் மகளின் 1 முதல் 3 வயது வரைக்கும் அவள் அதிகமாக விளையாடியது பந்துகள் தான். அவளே நிறைய விளையாட்டுகளை உருவாக்குவாள். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் நிறைய விளையாட்டுகளை உருவாக்கும் திறனை இயல்பாக கொண்டவர்கள். பார்க், பீச் போன்ற இடங்களுக்கு போகும் போது யார் பந்து விளையாடினாலும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிடுவாள். இப்போது என் மகளுக்கு 41/2 வயது அவள் ஃபூட் பால் சிறப்பாக விளையாடுகிறாள். குழந்தைகள் விளையாட்டு மூலம் நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை இதன் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களை குழந்தைகள் பந்து விளையாடும் போது கற்றுக் கொள்கிறார்கள். முக்கியமாக மகிழ்ச்சி என்கிற உணர்வை அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள். இந்த விளையாட்டில் குழந்தைகளின் செயல்பாடு அதீதமாக வெளிப்படும். அவர்களது கை, கால், உடம்பு, மூளை என முழு உடலுக்கு  சக்தி கிடைக்கும்.

90's Kids விளையாட்டுகள்

நான் சிறு வயதில் விளையாடிய எண்ணற்ற எனக்கு நன்றாக நினைவிருக்கிறது தற்போது குழந்தைகள் வீட்டு வாசலில் விளையாடுவதை பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. 90களில் டிவி மொபைல் போன்றவை இல்லாதததால் நாங்கள் சிறுவர்கள் ஒன்றுகூடி வெளியில் விளையாடிக் கொண்டிருப்போம். சிஏறுவர்கல் மட்டுமில்லாமல் குழந்தைகளும் வெளியில் பந்து, சைக்கிள், நடைவண்டி, ஓடிபிடித்து விளையாடுவது, கண்ணாம்பூச்சி விளையாட்டு போன்ற எண்ணற்ற விளையாட்டுகள் விளையாடி மகிழ்வார்கள். இதனால் குழந்தைகள் குழுவாக சேர்ந்து இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் நட்பு பலப்படும். இன்றும் நம் குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளை நினைவுகூர்ந்து கற்றுக் கொடுக்கலாம்.

என் மகள் வெளிச்சூழலில் விளையாடியும், கற்றும் மகிழ்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். நீங்களும் உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளாலாம். இப்பதைவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். நன்றி

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}