1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் நலம் பேணல்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Nov 22, 2018

12 மாதம் நிறைவடைந்த குழந்தை ஆனது கைக்குழந்தை நிலையில் இருந்து தத்து குழந்தையாக நடை பயில ஆரம்பிக்கும் குழந்தையாக அடுத்த நிலைக்கு செல்லும். ஏதும் செய்யாத பிறந்த குழந்தையில் இருந்து தனித்தன்மை கொண்ட குழந்தையாக மாற்றம் பெறும் காலமே 1 வயதுக்கு பிற்பட்ட காலமாகும்.
2 வயதை நிறைவு செய்யும் போது, உங்கள் குழந்தை சுதந்திரமானவனாகவும் அதிகரிக்கும் திறன்கள் உடன் தனிப்பட்ட மனிதனாகவும் உருப்பெறுவதைக் காணலாம்.
உடல் ரீதியான முன்னேற்றங்கள்
ஒரு வயது நிறைவடையும் பட்சத்தில் பின்வரும் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழும்.
-
குழந்தையானது தானாக எழுந்து நிற்க முயற்சி செய்யும் மற்றும் குழந்தையின் உடல் எடை, தசைகளின் வலுவினைப் பொறுத்து சில நொடிகள் தொடர்ந்து நிற்க முயலும்.
-
பிறரின் துணையின்றி தானாக அடியெடுத்து வைக்கவும், நடக்கவும் ஆரம்பிக்கும்.
-
விரல்கள், கைகள் மூலம் பொருள்களைப் பற்றி பிடிக்க ஆரம்பிக்கும். பொருள்களை ஒரு இடத்தில் இருந்து எடுக்கவும் மீண்டும் அதே இடத்தில் வைக்கவும் செய்யும்.
-
ஆட்காட்டி விரலைச் சுட்டிக் காட்டவும் குத்தவும் பயன்படுத்த ஆரம்பிக்கும்.
-
கை மற்றும் கண்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அதிகரிக்கும்.
இரண்டு வயது நிறைவடையும் போது, பின்வரும் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழும்.
-
படிகளில் எளிதாக ஏறவும் இறங்கவும் முடியும்.
-
சிரமமின்றி பின்புறமாக நடக்கவும் இயலும்
-
ஒரு காலில் நின்றபடி , எதன் மீதும் ஏற ஆரம்பிக்கும்
-
பென்சிலை பெரு விரல் மற்றும் பிற விரல்கள் மூலம் பிடித்து எழுத முயலும்.
-
வட்டங்கள் மற்றும் சதுரம் போன்ற வடிவங்களை வரைய இயலும்
-
தனது உடைகளை பிறரின் உதவியுடன் உடுத்திக்கொள்ள இயலும்
அறிவு மற்றும் மொழி ரீதியான முன்னேற்றங்கள்:
ஒரு வயது நிறைவடைந்த குழந்தையிடம் பின்வரும் மாற்றங்கள் காணப்படும்.
-
நீங்கள் பொருள்களை மறைக்கும் போது இக்காலங்களில் குழந்தை குழம்பாமல் அதனை புரிந்து கொள்ளும். மேலும் நடந்து சென்று அதனை எடுக்க முயலும்
-
பொம்மைகளை நீங்கள் ஒரே இடத்தில் வைத்தீர்களானால், தினசரி அதே இடத்தில் குழந்தை தேடிச் சென்று பொம்மைகளை எடுப்பதைக் காணலாம். இது குழந்தையின் ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறன் மேம்படுவதை அறியலாம்
-
பொருள் மற்றும் அதன் பெயர்களைப் பொருத்தி மனதில் நிறுத்தும் திறன் மேம்படும். நீங்கள் “பூனை எங்கே?” என கேட்கும் பட்சத்தில் சரியாக பூனையைக் கைக்காட்டுவதைக் காணலாம்.
-
கவனித்து அதை மனதில் பதித்து அதனை தானும் செய்ய முயலுவதைக் காணலாம். உதாரணமாக, சீப்பினால் சீவுவதைக் கவனித்து அதே போன்று சீப்பினை எடுத்து சீவ முயலுதல்.
இரண்டு வயது முடிந்த குழந்தையிடம் பின்வரும் மாற்றங்கள் நிகழும்
-
தனது பொருள்களைத் தன்மைக்கு ஏற்ப பிரித்தல்
-
வார்த்தைகளைச் சேர்த்து வாக்கியமாக பேசுதல்
-
தனது அடையாளத்தை உணர்தல். தனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது என கூற ஆரம்பித்தல்
-
யோசிக்க ஆரம்பித்தல். இக்காலக்கட்டத்தில் உங்கள் குழந்தையிடம் இருந்து பல “ஏன்” என வினவும் வினாக்களைப் பெறுவீர்கள்
உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள்
ஒரு வயது நிறைவடையும் குழந்தைக்கு உகந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து இங்கு காணலாம்
-
கார்போஹைட்டிரேட்டு நிறைந்த உணவுகளான அரிசி,உருளை கிழங்கு போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்
-
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
-
இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளான மீன், முட்டை, கடலை வகைகள், கடலையினால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ( நிலக்கடலை வெண்ணெய் முதலியன) , பருப்பு வகைகள் (சுண்டல், பீன்ஸ், அவரை )
-
பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்டவைகள்
12 முதல் 24 மாத குழந்தைகளுக்கு பின்வரும் அளவு முறைகளில் உணவு அளிக்க வேண்டும்
-
கார்ப்போஹைட்டிரேட்:
ஒரு நாளைக்கு மூன்று முறை கார்ப்போஹைட்டிரேட் நிறைந்த உணவு வழங்க வேண்டும்.
ஒரு வேளைக்கான உணவானது பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.
அரை கப் வேக வைத்த சோறு ,தானிய பிரெட்/பிஸ்கெட், ஒரு கப் தானியங்கள்
-
பழங்கள்
ஒரு நாளைக்கு ஒரு வேளை வழங்கலாம். அவை
ஒரு சிறிய ஆப்பிள், ஒரு வாழைப்பழம்.பழங்களை நன்றாக அரித்து தர வேண்டும்
-
காய்கறிகள்
ஒரு வேளை வழங்கலாம். வேக வைத்து நன்றாக மசித்து தர வேண்டும்.
-
பழச்சாறு
ஒரு நாளைக்கு 4-6 அவுன்ஸ் வழங்கலாம்
-
புரோட்டீன்
ஒரு நாளைக்கு இரு வேளை வழங்கலாம்.
ஒரு வேளைக்கு ஒரு கப் வேக வைத்த முட்டை அல்லது பருப்பு வகைகள் வழங்கலாம்.
-
பால் வகைகள்
ஒரு நாளைக்கு இரு வேளை வழங்கலாம்.
ஒரு வேளைக்கு ஒரு கப் பால் அல்லது அரை கப் பாலாடைக்கட்டி வழங்கலாம்
24 மாதம் முதல் 36 மாதம் வரையிலான குழந்தைக்கான உணவு முறைகள்:
-
கார்ப்போஹைட்டிரேட் / தானிய வகைகள்:
ஒரு நாளைக்கு ஐந்து முறை கார்ப்போஹைட்டிரேட் நிறைந்த உணவு வழங்க வேண்டும்.
ஒரு வேளைக்கான உணவானது பின்வருமாறு இருக்க வேண்டும்.
அரை கப் வேக வைத்த சோறு, தானிய பிரெட்/பிஸ்கெட், ஒரு கப் தானியங்கள்
-
பழங்கள்
ஒரு நாளைக்கு ஒன்றரை வேளை வழங்கலாம். அவை
ஒரு சிறிய ஆப்பிள், ஒரு வாழைப்பழம்.பழங்களை நன்றாக அரித்து தர வேண்டும்
-
காய்கறிகள்
ஒன்றரை வேளை வழங்கலாம். வேக வைத்து நன்றாக மசித்து தர வேண்டும்.
-
பழச்சாறு
ஒரு நாளைக்கு 4-6 அவுன்ஸ் வழங்கலாம்
-
புரோட்டீன்
ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு வேளை வழங்கலாம்.
ஒரு வேளைக்கு ஒரு கப் வேக வைத்த முட்டை அல்லது பருப்பு வகைகள் வழங்கலாம்.
-
பால் வகைகள்
ஒரு நாளைக்கு இரு வேளை வழங்கலாம்.
ஒரு வேளைக்கு ஒரு கப் பால் அல்லது அரை கப் பாலாடைக்கட்டி வழங்கலாம்.