• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

1 வயது வரையுள்ள குழந்தைளுக்கான சிறந்த உணவுகள்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 01, 2019

1

உணவு விஷயத்தில் அம்மாக்கள் பல தேடுதல், விடாமுயற்சி, பொறுமை என பல வகைகளில் சிந்தித்து செயல்படுகிறார்கள். முக்கியமாக 1 வயது வரையுள்ள குழந்தைகள் உணவு என்பதை அப்போது தான் முதன்  முதலில் சுவைக்க ஆரம்பிக்கிறார்கள். அது அவர்களின் நாவிற்கு, உடலிற்கு, ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என எல்லா அம்மாக்களுக்குமே மெனக்கிடுகிறார்கள்.

இதில் குழந்தைக்கு 6 மாதம் தொடங்கும் போது திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். குழந்தைக்கு ஏற்றுக்கொள்ளுமா ? பிடிக்குமா? சத்துக்கள் கிடைக்குமா? இப்படி பலகேள்விகள் நமக்கு தோன்றும். மெல்ல மெல்ல தான் குழந்தைகள் திட உணவை எடுத்துக் கொள்ள தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு சாப்பாட்டை எக்காரணத்தை கொண்டும் திணிக்கக் கூடாது, டிவி பார்க்க வைத்து ஊட்டக்கூடாது, திட்டியோ, பயமுறுத்தியோ (பூச்சாண்டி) சாப்பாடு கொடுக்கக்கூடாது, பொறுமையாக கையாள்வது என எப்பொதுமே பின்பற்ற வேண்டியது அவசியம். உங்கள் குழந்தைகள் பின்னாளில் சாப்பாட்டை வெறுக்கக்கூடாது என்றால் இதை நீங்கள் பின்பற்றினால் கவலை இல்லை.

என் மகளுக்கு அவளின் ஒரு வயது வரை கொடுத்த உணவு வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதில் உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிற, பிடிக்கிற புதிய உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

0-6 மாதம்

சாது மாவு, ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை கொடுக்கலாம். கோதுமை பால் ராகிப் பாலை காய்ச்சி கருப்பட்டியோ, வெல்லமோ கலந்து கொடுக்கலாம். இட்லியை வெண்ணீர் கலந்து சிறிது ஊட்டலாம். ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து கொடுக்கலாம். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்போது தான் அந்த உணவால் எதாவது அலர்ஜியோ, வயிற்றுக் கோளாறோ ஏற்படுகிறதா என்பதை நாம் அறிய முடியும். கொடுக்கும் புதிய உணவை கொஞ்சம் கொஞ்சமாக தினமும் அதிகரிக்க வேண்டும்.

7, 8 மாதங்கள்:

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம் மற்றும் ஆப்பிள் வேகவைத்தது, சாதத்துடன் மசிக்கப்பட்ட கேரட்  கலந்து கொடுக்கலாம். வென் பொங்கள் கொடுக்கலாம். மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு  போன்றவற்றை கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமாக செய்யாமல், அதற்கென தனியாக பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். பசும்பால் அறிமுகபடுத்துங்கள். நீங்கள் கொடுத்த உணவு அவர்களுக்குள் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று உங்கள் குழந்தையை ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அரிந்து கொள்ளலாம்.

9. ,10 மாதம்:

இப்போது இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி  போன்றவைகளை தரலாம்.

11, 12 மாதங்கள் :

வீட்டில் அனைவரும் சாப்பிடும் சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தலாம். இந்த வயதில் எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்க வேண்டாம். சாதம், காய்கறிகளை நன்கு வேக வைத்து கையால் மசித்துக் கொடுங்கள். சத்துள்ள தாகவும் கொடுங்கள். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை படுவதை விட்டுவிட்டு உணவு வகைகளை புதிய வைகையில் சமைப்பது, அடிக்கடி மாற்றுவது, புதிய ருசியை அறிகுகப்படுத்துவது என கொடுங்கள். குழந்தைகள் தானாக விரும்பி சாப்பிட முன்வருவார்கள்.

நேரம் அவசியம்

இந்த அட்டவணை நான் படித்த வலைப்பதிவில்; எடுத்து கொடுக்கிறேன். என் குழந்தைக்கு ஏற்றது போல் நான் சிறிது மாற்றங்களை செய்து கொண்டேன். நீங்களும் உங்கள் குழந்தைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு கண்டிப்பாக நல்ல குறிப்புகளை வழங்கும்.

உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.

7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,

8 மணி – குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்கள் பிள்ளைக்கு உதவும்

8.30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்

10.30 – தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.

12 – திட உணவு

4 மணிவரை எதுவும் தேவை இல்லை. பழங்கள் மசித்துக் கொடுக்கலாம். சிறிது இடைவேளைக்கு பிறகு பால் கொடுக்கலாம் அல்லது நேராக அடுத்த டின்னெர் திட உணவுக்கு செல்லலாம். உங்கள் குழந்தையின் பசியை பொறுத்து மாறும்.

7.30 மணிக்கு முழு திட உணவு கொடுங்கள்.

9 மணி மீண்டும் பால். இதற்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.

இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுது கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்கு நடு இரவில் பால் கொடுத்து பழக்காதீர்கள்.  குழந்தைகளின் உணவு விஷயத்தில் ஆரம்பத்தில் அதிகமாக மெனக்கிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களெ எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ரு நம்மிடம் கேட்க தொடங்கிவிடுவார்கள். அம்மாக்களே, உணவில் குழந்தைகளுக்கு உரிமையும், சுதந்திரமும் அவசியம் கொடுக்க மறக்காதீங்க.. 

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Mar 02, 2019

எனது மகனுக்கு 1வயது பழங்கள் கொடுத்தால் சாப்பிடுகிறார் ஆனால் யூஸ் அடித்து கொடுத்தால் குடிக்கிறார் இல்லை இந்த பழக்கம் இப்படியே இருக்குமா இதற்கு என்ன செய்யலாம்

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}