1 வயது குழந்தைகளுக்கான உணவு

உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகவிட்டது. நீங்கள் வெற்றிகரமாக குழந்தை வளர்ப்பின் ஒரு வருட பயணத்தை முடித்து இருக்கிறீர்கள். குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு தயார் ஆகலாம். ஃபார்முலா மில்க் கொடுத்துக்கொண்டிருந்தால் அதையே இப்போதும் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்க நீங்கள் ஓ.கே என்றால் தாய்ப்பாலையும் தொடர்ந்து கொடுக்கலாம்.
Advertisement - Continue Reading Below
பசும்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். அல்லது குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு கொடுக்கலாம். இனி நீங்கள் குழந்தைக்கு கழிப்பறை பயன்படுத்துவதற்கான பயிற்சியைத் தர தொடங்கலாம்.
Advertisement - Continue Reading Below
12 மாத குழந்தைகள் - சில டிப்ஸ்
- உங்கள் குழந்தை மென்று சுவைக்க ஆரம்பித்திருப்பார்கள். எனவே ப்யூரி, கூழ் இதெல்லாம் குழந்தைகளுக்கு தரவேண்டாம். ஒருவேளை குழந்தைக்கு மென்று சாப்பிட பழகவில்லை எனில் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.
- தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுத்துப் பழகுங்கள். துரித உணவுகள் பக்கம் திரும்பவே வேண்டாம்.
- முதல் ஆண்டு போல இனி இந்த இரண்டாம் ஆண்டில் அதிவேகமாக உங்கள் குழந்தைகள் எடை போட மாட்டார்கள். எடை ஏறுவது குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதிகளவு உணவுகளையோ கொழுப்பு நிறைந்த உணவுகளையோ கொடுத்து குழந்தையை குண்டாக முயற்சிக்காதீர்கள்.
- இப்படி அதிக உணவு கொடுத்தால், உடல்பருமனாகி குழந்தை ஓடியாடி விளையாட சிரமப்படும்.
- உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் தெரியலாம்.
- மிகவும் பிடித்த உணவை இந்த வாரம் சாப்பிட்ட குழந்தை, அடுத்த வாரம் வேண்டாம் என்றும் சொல்லலாம். மிகவும் பிடித்துபோன உணவை மீண்டும் மீண்டும் வேண்டும் என்றும் சொல்லலாம். இதனால் நீங்கள் குழம்ப தேவையில்லை. எனினும் ஒரே மாதிரியான உணவைக் கொடுக்காமல் விதவிதமான உணவுகளைக் கொடுத்துப் பாருங்கள்.
- உங்களது மருத்துவர் சொன்ன பிறகு பசும் பால் கொடுப்பதைப் பற்றி முடிவு செய்யுங்கள். நீங்களாக தர வேண்டாம். பாட்டிலில் கொடுப்பதை நிறுத்திவிட்டு கப்புக்கு மாறுங்கள். டம்ளருக்கு மாறுங்கள்.
- முட்டையின் வெள்ளை கருவை கொடுக்கத் தொடங்குங்கள்.
- இந்தப் பருவத்தில் இரும்புச்சத்தின் தேவை மிக மிக அதிகம். எனவே இரும்பு சத்துகள் நிறைந்த உணவுகளைக் கொடுக்கலாம்.
- இரும்புச்சத்துகள் நிறைந்த பருப்பு, பயறு, பீன்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, காளான், முட்டை, கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
- முன்பு போல அடிக்கடி உணவைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். குழந்தையின் தேவை அறிந்து கொடுக்கலாம். முன்பு போல இடை இடையில் உணவு தேவைப்படாது. அவ்வாறு கொடுத்தால் உடல் எடை அதிகரித்து உடல்பருமனாக மாறலாம். கவனம் தேவை.
- சரியான உணவு, சரியான கால நேரத்துக்கு தருவதை திட்டமிட்டு கொள்ளுங்கள். இதனால் குழந்தைக்கு இந்த நேரத்துக்கு நாம் உணவை எதிர்பார்க்கலாம் என்ற புரிதல் ஏற்படும்.
- குழந்தை வளர, வளர நீங்களும் உங்களது சமையலில் கிரியேட்டிவிட்டியை கொஞ்சம் சேர்க்க வேண்டி இருக்கும். இட்லியை கட் செய்து தருவது, சப்பாத்தியை கட் செய்து முக்கோண வடிவத்தில் தருவது போன்ற சின்ன சின்ன கிரியேட்டிவிட்டி செய்ய பழகுங்கள்.
- உணவை கொஞ்சம் அழகாக, புதிய முயற்சியில் கொடுத்தால், குழந்தைகள் சாப்பிடும்போது எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள்
அசைவம் சாப்பிடும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்?
- குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட கூடிய அசைவத்தை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பற்கள் இன்னும் அவ்வளவாக குழந்தைகளுக்கு இருக்காது.
- அவ்வப்போது முட்டை கிரேவியுடன் சாதம் கொடுக்கலாம். காரம் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- எலும்பு இல்லாத சிக்கனை கொஞ்சமாக தரலாம். நன்கு வேகவைத்து, சிறியதாக கொடுப்பது நல்லது.
- வெஜிடெபிள் சூப், சிக்கன் சூப் போன்றவை தரலாம்.
- குழந்தைக்கு பிடித்தால் வாரத்தில் 2-3 முறை அசைவ உணவுகளைக் கொடுக்கலாம்.
- கொஞ்சமாக பிரியாணி கொடுக்கலாம். மட்டன் கொடுக்க நினைத்தால் நன்றாக வெந்த மட்டனை கொடுப்பது நல்லது.
- நீங்கள் மீன் சாப்பிட்டு உங்களுக்கு ஒத்து கொண்டால், கொஞ்சமாக மீன் குழந்தைக்கும் கொடுக்கலாம். காரம் குறைவாக இருப்பது நல்லது.
- எந்த அசைவ உணவு கொடுத்தாலும் சிறிதளவு கொடுத்து பழக்குங்கள். பின்னர் அதன் அளவை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம்.
Be the first to support
Be the first to share
Support
Share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...