• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

10 ஆம் வகுப்பு - உங்கள் பிள்ளைகளை தேர்வுக்கு தயார்படுத்தும் பாஸிட்டிவ் டிப்ஸ்

Radha Shri
11 முதல் 16 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 18, 2020

10
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

சமீபத்தில் தமிழக அரசு 10 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவனையை அறிவித்தது. குறிப்பாக இப்போதுள்ள ஊரடங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்வு இருக்குமா? இருக்காத ? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை என்னென்ன பாடங்கள் என்று தேதிவாரியாக அறிவிப்பு வெளிவந்தது. இது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருப்புறம் கொரோனா நோய் பற்றிய பயம், மற்றோரு புறம் பரிட்சைய பற்றிய பதட்டம் இதற்கிடையில் தான் பிள்ளைகள் பரிட்சயை எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில் பிள்ளைகளுக்கு உதவ வேண்டியது பெற்றோருடைய முக்கியமான பொறுப்பாக உள்ளது. பிள்ளைகள் பலவித குழப்பங்களுடன் இருப்பார்கள். முக்கியமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது அவர்கள் வாழ்க்கையின் கரியர் லட்சியத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். நிச்சயமாக அவர்களின் மனநிலை பதட்டமாக தான் இருக்கும். பிள்ளைகளை தேர்வுக்கு எப்படி பாஸிட்டிவ்வாக மற்றும் பாதுகாப்பாக தேர்வு எழுத தயார்படுத்துவது என்பதற்கான ஆலோசனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும்

வெளியே சென்றால் கொரோனா வந்துவிடும் என்று பெரியவர்கள் நாம் தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் டிவியில் செய்தி வந்து பதட்டத்தை மேலும் அதிகமாக்குகின்றது. அதனால் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு பயம் இருக்கும். மேலும் சாதரணமாகவே பரிட்சை என்றாலே நம் பிள்ளைகளுக்கு பயம் தோன்றும் வகையில் தான் கல்விமுறை இருக்கின்றது. பொதுத்தேர்வு என்றால் கூடுதலாக பயம் வந்துவிடும். யோசித்து பாருங்கள் அவர்களின் மனநிலையை எப்படி இருக்கும் என்று. சில பிள்ளைகள் மன் அழுத்தத்திலிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதெல்லாம் தாண்டி பரிட்சைக்கு எப்படி செல்வது, அங்குள்ள பாதுகாப்பு குறித்த அச்சங்கள் என பதற்றப்பட ஏற்கனவே நிறைய விஷயங்கள் அவர்களுக்கு இருக்கின்றது. இந்த சூழ்நிலையை பாஸிடிவ்வாகவும், ஊக்கமாகவும் மாற்ற பெற்றோர் நினைத்தால் முடியும்.

வீட்டில் இருக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும், அவர்களுக்கு இந்நேரத்தில் என்ன வசதிகள் தேவை என்பதையும் அவர்களோடு கலந்து பேசி செய்து தர வேண்டும். அவர்கள் கொஞ்சம் பொறுப்பில்லாமல் செயல்பட்டாலும் நெகட்டிவ்வாக பேசாமல் பொறுமையுடன் கையாள்வது அவசியம். ஆசிரியர் பக்கத்தில் இல்லை, க்ரூப் ஸ்டடி செய்ய முடியாது, எல்லோராலும் ஆன்லைன் க்ளாஸஸ் பார்க்க முடியாது போன்ற பல தடங்கள் இருப்பதை புரிந்து கொண்டு அவர்கள் கேட்கும் உதவிகளை செய்து கொடுப்பது நல்லது.

ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் டிப்ஸ்

பிள்ளைகளை நாள் முழுவதும் படி படி என்று திட்டாமல் அவர்கள் எளிதாக கற்கும் சூழலையும், வழிகளையும் கற்றுக் கொடுப்பது பெரிய உதவியாக இருக்கும். அதற்கான சில வழிகளை கீழே காணலாம்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சில மெமரி டெக்னிக்ஸ் இருக்கின்றது.  

Chunking  - இது ஒரு நினைவூட்டல் கருவி என்று சொல்லலாம். இது பெரிய அளவிலான தகவல்களை மறக்காமல் வைக்க உதவும். ஒரு தொலைபேசி எண்ணை "8 8 8 5 5 5 0 0 0 0 . " இந்த வகையில் நினைவில் கொள்வது எளிது: "888" "555" "0000" -.  இதில் முதலில் பயிற்சி(practice), அடுத்தது அதற்குள் இருக்கும் இணைப்புகளை தேடுவது(grouping), பிறகு தொடர்புப்படுத்தி பார்ப்பது(associate), பிற மெம்ரி உத்திகளை சேர்க்கலாம். அதாவது பல்வேறு சொற்களின் முதல் எழுத்தை இணைத்து ஒரு வரியாக நினைவில் வைத்துக் கொள்வது. உதாரணத்திற்கு ஒரு வரலாற்று காலகட்டத்தில் நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்புகளைத் தேடலாம், 1920 களில் அமெரிக்க அரசியலமைப்பை உள்ளடக்கிய தருணங்கள் போன்றவை.

MVery Educated Mother Just Served UNine Pizzas" ( Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, and Pluto)

எழுதிப் படிப்பது - நமது மூளையில் எழுதி படிக்கும் போது நன்றாக நினைவில் இருக்கும். எழுதும் போது அதற்குள் இருக்கும் தொடர்புகளை இணைப்பது, படம் வரைவது, flow chart போடுவது ஆகியவை நல்ல பலன்களை தரும்.

பகிர்தல் – இப்போது க்ரூப் ஸ்டடி செய்ய வாய்ப்பில்லாததால், ஆன்லைன் மூலம் படித்ததை பகிர்ந்து கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.

SQ3R – Survey, Question, Read, Retrieve, Review

இது போல் நினைவாற்றல்லை அதிகரிக்கும் உத்திகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

சூழல் – பிள்ளைகள் படிப்பதற்கான ஆரோக்கியமான அமைதியான சூழலை அமைத்துக் கொடுப்பது.

வாழ்க்கைமுறை – பிள்ளைகளுக்கு தேவையான ஹெல்தியான உணவு மற்றும் தரமான உறக்கம் அவர்களின் பதற்றத்தை கட்டுப்படுத்தும்.  பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் பழங்கள், கடல் உணவுகள் மற்றும் நட்ஸ்- நினைவாற்றலை மேம்படுத்துகிறது என பல ஆய்வுகளில் சொல்லப்படுகின்றது.

உடற்பயிற்சி – எப்போதும் பிள்ளைகளை புத்தகத்தை பார்த்துக் கொண்டே இருந்தால் பாடங்கள்  

தன்னம்பிக்கை அதிகரிக்கும் உரையாடல்கள் – மனதளவில் பலவீனமாக இருக்கும் போது பெற்றோர் கூறும் தன்னம்பிக்கை வார்த்தைகள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தும். Positive affirmation  பெரிதாக உதவும். எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று பிள்ளைகளிடம் கூறுவது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 • சமூக விலகலை கடைப்பிடிப்பது
 • சானிடைஸ்ரை அடிக்கடி பயன்படுத்துவது
 • நண்பர்களுடன் கை குழுக்குவது, நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பது
 • கழிப்பறைகளை பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது
 • பயணத்தின் போது பாதுகாப்பை கடைப்பிடிப்பது.
 • வீட்டிலிருந்தே தண்ணீர் - உணவு எடுத்துவர அனுமதிக்கப்பட வேண்டும்
 • வெளியே வரும்போது மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம்.
 • வீட்டிலிருந்து கிளம்பும் நேரம், தேர்வு அறைக்குச் செல்லும் முன் - பின், வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சோப் கொண்டு  நன்கு கழுவ வேண்டும்
 • பெற்றோரே தேர்வு மையத்துக்குத் தனி வாகனத்தில் அழைத்துச் சென்று, திரும்பிக் கொண்டு வந்துவிடுவது நல்லது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 • நாள்
 • பாடம்
 • ஜூன் 15
 • மொழிப்பாடம்
 • ஜூன் 17
 • ஆங்கிலம்
 • ஜூன் 19
 • கணிதம்
 • ஜூன் 20
 • விருப்பப் பாடம்
 • ஜூன் 22-
 • அறிவியல்
 • ஜூன் 24-
 • சமூக அறிவியல்
 • ஜூன் 25
 • தொழிற்கல்வி (வொகேஷனல்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ப்ளஸ்- 1 & ப்ளஸ் -2 பொதுத்தேர்வுகள்

 • மேலும் ப்ளஸ் -2 பொதுத்தேர்வு இறுதி நாளில் பஸ் கிடைக்காமல் எழுதாமல் போனவர்களுக்கு ஜூன் – 18 ல் தேர்வு எழுத மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 • இதே போல் ப்ளஸ்- 1 பொதுத்தேர்வு ஜூன் – 16 ஆம் தெதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் பயிற்சி வகுப்புகள்

நீட் பயிற்சிக்காக 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 2 வார பயிற்சி வகுப்புகல் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வில் ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போதைய சூழல் சரியான பிறகு  பயிற்சி தர 10 அரசு கல்லூரிகளை ஏற்பாடு செய்யப்போகின்றார்கள். அங்கே சாப்பாடு, தங்கும் வசிதி செய்து தந்து பயிற்சி தரப்பட உள்ளது. ஆன்லைன் வகுப்புகளு்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

பிள்ளைகளை தேர்வுக்கு தயார்ப்படுத்துவதற்கான இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களையும், அனுபங்களையும் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}