• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

தேர்வு நேரத்தில் உங்கள் பிள்ளைக்கு உதவும் 10 ஆக்கப்பூர்வமான வார்த்தைகள்

Parentune Support
11 முதல் 16 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 14, 2021

 10

ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளையை தேர்வுக்கு தயாராக்க நீங்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறீர்கள். உணவு, சீருடைகள், எழுதுபொருள் மற்றும் பள்ளி விஷயங்களிலிருந்து - இவை அனைத்திலும் நீங்கள் மூழ்கிவிடலாம், நீங்கள் மிக முக்கியமான ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள் - ‘வாய்மொழி தொடர்பு’. சில நேரங்களில், ‘சொற்கள் செயல்களை விட சத்தமாக பேச முடியும்’. உங்கள் குழந்தைக்கு உற்சாகமூட்டும், ஆக்கப்பூர்வமான மற்றும் உறுதியளிக்கும் வாக்கு ஒன்றை நீங்கள் கடைசியாக எப்போது சொன்னீர்கள்? இது ஒருபோதும் தாமதம் அல்ல தொடங்குவதற்கு, தேர்வுகள் நெருங்கி வருவதால், தொடங்குவதற்கு சிறந்த நேரம் இப்போது மட்டுமே!

தேர்வு நேரத்திற்கு முன் உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க மற்றும் தேர்வு நேர மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில வார்த்தைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே உங்கள் குழந்தையின் வயது மற்றும் புரிதலுக்கு ஏற்ப இவற்றை மாற்றலாம் - மேலும், நீங்கள் இந்த பாதையில் தொடர்ந்து செல்லும் போது மேலும் சிலவற்றை இதில் சேர்த்துக் கொண்டு போகலாம்…

தேர்வு நேரத்தில் உங்கள் பிள்ளைக்கு என்னென்ன வார்த்தைகள் கூற வேண்டும்?

1. நீங்கள் ஒரு பிரகாசமான மாணவர், இதை நீங்கள் சொல்லலாம் - இதை உங்கள் பிள்ளைக்கு மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கையை காட்டும் போது, ​​உங்கள் பிள்ளை தானாகவே அதிக நம்பிக்கையாக உணர்வார்கள்.

2. இது அற்புதம்… நீ அதை எப்படி செய்தாய்? - நாள் / வாரம் முழுவதும் உங்கள் குழந்தையின் சிறிய சாதனைகளை கவனித்து, ஒரு கனம் இந்த செயல்களுக்காக அவர்களை பாராட்டுங்கள். ஒரு குறிப்பிட்ட முடிவை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பது பற்றி அவர்களிடம் கேட்பதன் மூலம் அதை மேலும் சிறப்பாக்குங்கள். உங்கள் ஆர்வத்தைக் காட்டி, உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3.வெற்றியை உனதாக்கிக் கொள் - கடினமாக உழைத்தால், அது உங்களிடம் வரும் - இது ஒரு ஆக்கப்பூர்வமான அறிக்கை மட்டுமல்ல; இது உங்கள் குழந்தை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு வாழ்க்கை மந்திரமாகும், அவர்கள் அதைக் கடைப்பிடித்தால், அது நிச்சயமாக உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

4. தேர்வுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல - மீண்டும், மிக முக்கியமான செய்தி! பெற்றோர்களாகிய நீங்களும் இதை உங்களிடமே சொல்லி் கொள்ள வேண்டும்; நீங்கள் சொல்வதை, நீங்கள் கடைப்பிடிக்கவும். உண்மை என்னவென்றால், தேர்வுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல. சில நேரங்களில் ஒரு குழந்தை 'வாழ்க்கையை விட பெரியதான’ தேர்வுகளுக்கான இந்த அணுகுமுறையால் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதால் அவர்களுக்கு படிப்பின் மேல் வெறுப்பு உண்டாகிறது.

5. நீங்கள் சில பாடங்களில் நன்றாக இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம் - எல்லாவற்றிலும் நீங்கள் நன்றாக இருக்க முடியாது - அது உண்மை, இல்லையா? சில குழந்தைகள் கணிதத்துடனும், சிலர் வரலாற்றுடனும், சிலர் வேதியியலுடனும் போராடுகிறார்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தைக்கும் அவர்களுடைய பலங்களும் பலவீனங்களும் உள்ளன. எனவே பலங்களில் கவனம் செலுத்தும்படி, பலவீனங்களை பொறுமையாக தேற்றும் படி சொல்லுங்கள்.

6. உங்களால் முடிந்ததை செய்து, மற்றதை மறந்துவிடுங்கள் - தேர்வு நாளில், ‘நன்றாக எழுத வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்துங்கள். அவர்களுடைய சிறந்ததை செய்ய நீங்கள் அவர்களை ஊக்குவிக்கும்போது, ​​தேவையற்ற அழுத்தத்தையும் நீங்கள் குறைக்கிறீர்கள்.

7. பயப்படவேண்டாம் தோல்வியே வெற்றிக்கு முதல் படி - நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் ‘நாம் பயப்படுகிற பல விஷயங்கள் ஒருபோதும் நிறைவேறாது’ என்று - இந்த எண்ணத்தை உங்கள் குழந்தையின் எண்ணத்தில் புகுத்த வேண்டும். தோல்வியின் நன்மைகளை உங்கள் பிள்ளைக்கு் தெரிவிப்பதன் மூலம் ‘பயம்’ என்ற வார்த்தையிலிருந்து அச்சத்தை வெளியேற்றுங்கள் - தவறுகளிலிருந்து அவர்கள் எப்படி கற்றுக்கொள்ள முடியும்; இது நம் வாழ்க்கையில் எவ்வாறு மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொள்ள வைக்கிறது என்று விளக்குங்கள்.

8. நான் உன்னை நேசிக்கிறேன் ஒருபோதும் குறையாது- மூன்று மந்திர வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நல் இரவு என்று கூறும் போது அது உங்கள் குழந்தைக்கு (புன்னகையுடன்) சொல்லும் கடைசி விஷயமாக இருக்கட்டும். இந்த வார்த்தைகள் உங்கள் பிள்ளைக்கு அமைதியான மற்றும் உறுதியளிக்கும் உணர்வை வேறு வார்த்தைகளால் கொண்டு வரமுடியாது!

9. மன அழுத்தமில்லாமல் இருங்கள் - ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உங்கள் பிள்ளை சிறிது பலவீனமாக இருந்தாலும் நாம் ஏமாற்றத்துடன் இருப்பதை காட்ட வேண்டாம்; அதற்கு பதிலாக ஆக்கபூர்வமாக இருங்கள், அவர்களை ஆக்கபூர்வமான வழியில் ஊக்குவிக்கவும். மன அழுத்தமில்லாத மனம் அவர்களது செயல்திறனை ஆச்சரியம் படும் படி மாற்றும். ஆக்கபூர்வமாக மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்.

10. நாங்கள் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம் - பெற்றோர்கள் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களை பற்றி பெருமைப்படுகிறார்கள் என்பதை குழந்தைகள் அறிய விரும்புகிறார்கள். அவர்களின் கடின உழைப்பு, முயற்சிகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள், பின்னர் அவர்களின் நேர்மை அதிகரிப்பதை பாருங்கள்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}