• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான 4 சத்தான உணவு வகைகள்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 12, 2021

 4

ஆரோக்கியம் மிகுந்த வாழ்வு குறைவற்ற செல்வம், என்பதை  நாம் நன்கு அறிவோம். நம் மழலைச்செல்வங்கள் நோயற்று ,திடமாக, மகிழ்ச்சியாக வலம்  வரவேண்டும் என்பதே அனைத்து  பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால் சில குழந்தைகள் சத்தான உணவு  வகைகளை அதன் சுவைப்பிடிக்காமல் புறக்கணிப்பதுண்டு. தாய்மார்களின் இக்கவலையை போக்கவே இங்கு சத்து மிகுந்த,ருசியான 4 உணவுகளையும்,அதன் செய்முறைகளையும் இங்கு  பகிர்ந்துள்ளோம்.

0-1 வயது சிறுகுழந்தைகளுக்கான உணவு வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தைக்கு  6 மாதம் வரை,சிறந்த உணவு தாய்ப்பால்! ஏனெனில் பிற உணவுவகைகளைக்  காட்டிலும் ,தாய்ப்பாலில் மட்டுமே அதிக சத்துகள் நிறைந்துள்ளன.குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் சரிவிகிதஉணவு எடுத்துக் கொள்ள வேண்டும் .

தாய்மார்கள் பாலூட்டும் பொழுது ,தங்கள் உணவில் பாதாம்,வெந்தயம் ,வெந்தயக்கீரை,பால்,பருப்பு வகைகள் போன்றவற்றை சீரான வகையில் எடுத்துக்கொள்ளவேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களை  நன்கு பராமரிப்பது ,உங்களுக்கு  மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கும் இன்பம் தரும் .உங்கள் குழந்தைக்கு திடப்பொருட்களை அறிமுகப்படுத்துகையில், 3 அல்லது 4 நாள் காத்திருப்பு விதிமுறைகளை பலமுறை கேள்விப்பட்டிருக்கக்கூடும்  3 நாள் காத்திருப்பு , நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு புதிய உணவு வகையை  கொடுக்கும் போதெல்லாம், மற்றொரு புதிய உணவை அறிமுகப்படுத்துவதற்கு முன் 2 முதல் 3 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சத்தான உணவு செய்முறை விருப்பங்கள்

எனவே, அடுத்த இரண்டு நாட்களில் அதே அல்லது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை கொடுக்கலாம். இந்த விதி ஒரு குறிப்பிட்ட உணவு பொருள்   ஒவ்வாமை அல்லது வாயு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிற எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்றால் அதை முள் சுட்டிக்காட்ட உதவுகிறது.

#1. கேரட் - பனங்கற்கண்டு கூழ்

குழந்தைகளுக்கு ஒரு முதல் சிறந்த உணவை கேரட் உருவாக்குகிறது. கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள்  நிறைந்துள்ளது. இனிமையானது என்பதால், குழந்தைகள் அதை மிகவும் விரும்புவார்கள்.

தேவையான பொருட்கள் :

நன்கு,கழுவி சுத்தம் செய்த கேரட் -1.

பனங்கற்கண்டு - சிறிதளவு

செய்முறை :

 1. ஒரு உறுதியான மற்றும் இனிப்பான  கேரட்டை எடுத்து, நீரில் நன்றாக கழுவுங்கள்.  அதை நன்றாக வெட்டி ஒரு சுத்தமான கிண்ணத்தில் சேர்க்கவும்.

 2. துண்டாக்கிய கேரட்டை  10 முதல் 12 நிமிடங்கள் வரை ,  நன்கு வேகவிடவும் .

 3. பனங்கற்கண்டு ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் அதை  இணைக்க விரும்புகிறேன். சில பனங்கற்கண்டை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டால்  கற்கண்டு கரைந்து விடும். இப்போது இதை வடித்து , சுத்தமான காற்று போகாத ஜாடியில் மாற்றவும். நீங்கள் இதை குளிர்சாதன பெட்டியில் சேமித்து உங்களுக்கு தேவையான போதெல்லாம் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைக்கு சர்க்கரையும்  சேர்க்கலாம்.

 4. கேரட்  தயாரான பின் , ​​கேரட்டை  மிக்ஸியில் நன்கு  அரைத்து ,பனங்கற்கண்டுசாறு சிலவற்றைச் சேர்த்து, மென்மையாக்கிக் கொள்ளவும்.

 5. இப்போது  இதை சுத்தமான கிண்ணத்தில் ஊற்றி , உங்கள் குழந்தைக்கு இந்த சத்து  மிகுந்த கூழை அளிக்கவும்.

 

#2. அவகேடோ மசியல்

தேவையான பொருட்கள் :

1-நன்கு பழுத்த அவகேடோ

தாய்ப்பால்  அல்லது பசும்பால் ( தேவைக்கேற்ப)

செய்முறை :

 1. அவகேடோவை  நன்கு கழுவி, கொட்டையை  நீக்கி அறுத்துக்கொள்ளவும்

 2. மிக்ஸியில்  அவகேடோ துண்டுகளை  மாவுபோல அரைத்துக்கொள்ளவும்

 3. தாய்ப்பால்  அல்லது காய்ச்சிய பசும்பால்  சேர்த்து கூழ் போன்று குழந்தைகளுக்கு  கொடுக்கலாம் இல்லையெனில் ,சிறிது  தண்ணீர் விட்டு  மசியலாக்கி குழந்தைகளுக்கு  கொடுக்கலாம் . அவகேடோவில் நல்ல  கொழுப்புசத்துக்கள் உள்ளதால் , அது உங்கள்  திட உணவு உண்ண தொடங்கிய  குழந்தைகளுக்கு உடல் மற்றும்  மூளை வளர்ச்சியைத் தூண்ட உதவும்.

 

#3. ஆப்பிள் கூழ்

தேவையான  பொருட்கள் :

ஆப்பிள் -1(தோலுரித்து )

தண்ணீர் -சிறிதளவு

செய்முறை :

 1. தோலுரித்த ஆப்பிளை நறுக்கி ,10 நிமிடம் தண்ணீரில் வேகவைக்கவும்
 2. வேகவைத்த ஆப்பிளை மிக்ஸியில் நன்கு அடித்து கூழாக்கி கொள்ளவும்.
 3. சுவையை மேலும் கூட்ட தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

 

#4. வாழைப்பழ இட்லி

தேவையான  பொருட்கள் :

வாழைப் பழம் 1 ( துண்டாக்கியது )

அவல் -1/4 கப்

வெல்லம் அல்லது  சக்கரை -1/4 கப்

ரவை -1/4 கப்

ஊற வைத்த பாதாம் -2

செய்முறை :

 1. அவலை 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்
 2. பின், ஊற வைத்த அவல், துண்டாகிய வாழைப் பழம், பாதாம், சக்கரை (அ) வெல்லம் சேர்த்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, ரவையை அத்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
 3. இந்த மாவை, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, ஒரு மணி நேரத்திற்கு பின்பு, நன்கு கலக்கி இட்லி பாத்திரத்தில்   வேகவைக்கவும்.
 4. சத்தான, சுவை மிகுந்த வாழைப்பழ இட்லி தயார்.

மேற்கண்ட  அனைத்தும் குழந்தைகளுக்கு சத்தான ,சுவையான உணவு வகைகள் என்பதில்  அச்சம் இல்லை . உங்கள் குழந்தைகளுக்கு செயற்கையான,பதப்படுத்தப்பட்ட  உணவுகளை சிறுவயதிலிருந்தே தவிர்க்கவும். இயற்கை உணவுகளை  அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு  சுவை பிடிக்காமல்  போனால் அதை திணிக்க  வேண்டாம் . செய்முறை மாற்றம்  செய்து அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்,நிச்சயம் விரும்பி உண்பார்கள். இயற்கை உணவு முறையைச்  சிறு வயதிலிருந்தே பழக்கப்  படுத்தும்பொழுது, மருந்தை நாடாமலே அவர்கள் செழித்து வளர்வார்கள்.                              

        மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

           அற்றது போற்றி உணின்"

 

 • 21
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 12, 2019

வணக்கம் என் மகளுக்கு தற்போது 4 1/2 மாதம். ஆனால் மகள் இன்னும் உடம்பு பிரட்டவில்லை. என்ன காரணம்?

 • Reply
 • அறிக்கை

| Apr 12, 2019

உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக கேட்கவும்

 • Reply
 • அறிக்கை

| Apr 19, 2019

பூவன்பழம் கொடுக்கலம?அல்லது வேறு எந்த பழம் ?

 • Reply
 • அறிக்கை

| Apr 21, 2019

என் மகனுக்கு 2 வயது ஆகிறது 11 kg எடை உள்ளான் போதுமானதா?

 • Reply
 • அறிக்கை

| Apr 22, 2019

என் குழந்தை 11மாதம் ஆகிறது. அவள் எடை 6. 500 இருக்கிறாள். எடை அதிகரிக்க டிப்ஸ் குடுங்க?

 • Reply
 • அறிக்கை

| May 07, 2019

படனடடீனஅஅதாஓJURRRRRFFF Yமபங

 • Reply
 • அறிக்கை

| May 11, 2019

ennoda bby ku 7 month start ayiruku enna mathiriyana food la kudukalam

 • Reply
 • அறிக்கை

| May 18, 2019

Ravai nu sonniga.. enna ravai ..white or brown colour

 • Reply
 • அறிக்கை

| Jun 02, 2019

Enoda maganuku 2year but wt 9 kg thaa irukan please wt increase aaga tips sollunga please

 • Reply
 • அறிக்கை

| Jun 16, 2019

Adikadi romba aluran

 • Reply
 • அறிக்கை

| Jun 16, 2019

Enudaiya sonku two month ahkutu tour tidirnu romba aluran iruku ena pananum tips solunga

 • Reply
 • அறிக்கை

| Jun 21, 2019

My baby Ku 10 month agudhu cow milk kudika Matra enna seivadhu

 • Reply
 • அறிக்கை

| Jul 23, 2019

9month babyku intha foot ta kudukkalama

 • Reply
 • அறிக்கை

| Aug 13, 2019

n mahanukku 3 1/2 madham aahudhu but thaaippaal pathala increase pandradhukku edhaadhu sollunga mam. Vera edhaadhu kudukkalaama... apple, carrot ipdi

 • Reply
 • அறிக்கை

| Oct 17, 2019

my baby 3 month old shall I give this food

 • Reply
 • அறிக்கை

| Jul 31, 2020

My baby Ku 160days aguthu nan other food try panalama...

 • Reply
 • அறிக்கை

| Aug 15, 2020

My baby 4month thaipal pathala mam avanuku vera ethavathu kudokkalama.... mam 45days ku munnadiyea lscs panni edothutaga birth weight 2. 080 than mam

 • Reply
 • அறிக்கை

| Aug 19, 2020

6months baby which food

 • Reply
 • அறிக்கை

| Apr 12, 2021

1 yr aguthu. babyku enna foods kodukkalaam?

 • Reply | 2 Replies
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}