• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

4 ஹெல்தி ஜாம் (மாம்பழம், பீட்ரூட், தக்காளி & மிக்ஸ்டு ஃப்ரூட்) வகைகளை வீட்டிலேயே செய்யலாம்

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 20, 2021

4
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பழங்கள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஜாம் செய்து கொடுத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கி கொடுப்பதை விட நாமே வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். சப்பாத்தி, இட்லி, ப்ரெட், தோசை இப்படி பல விதமான உணவுகளோடு ஜாம் வைத்து கொடுக்கலாம். இந்த பதிவில் நான்கு வகையான ஜாம்களையும் அதன் செய்முறைகளையும் பார்க்கப் போகின்றோம்.

வீட்டில் ஃப்ரூட் ஜாம் செய்யும் முறைகள்

முதலில் மாம்பழம் வைத்து எப்படி ஜாம் செய்வது என்று பதிவு செய்கிறேன்..

மாம்பழ ஜாம்

தேவையான பொருட்கள்:

 • மாம்பழம் பழுத்தது  -     3-4 எண்ணிக்கை
 • சீனி                                -     125 கிராம்
 • எலுமிச்சை சாறு       -        2டீஸ்பூன்

செய்முறை

 1. மாம்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்..
 2. அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்க்கவும்.. பின்னர் சீனியை போட்டு நன்றாக கலந்து கொதிக்க விடவும்..
 3. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும்...
 4. 20-25 நிமிடங்கள்  கழித்து பதம் (ஒரு சிறிய தட்டில் ஒரு கரண்டி எடுத்து தட்டை லேசாக சரித்தால் ஓடாமல் இருக்கும்)வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து பின் இறக்கவும்...

சுவையான மாம்பழ ஜாம் தயார்.

குறிப்பு - இதை 3 மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்..

தக்காளி ஜாம்

தேவையான பொருட்கள்:

 • தக்காளி.     -           1/2 கிலோ
 • சீனி                -          250 கிராம்
 • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டியளவு

செய்முறை

 1. தக்காளியை நன்றாக வேக வைத்துக் தோலுரித்து வைத்துக் கொள்ளவும்..
 2. அதை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்..
 3. பின்னர் அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து அதன் பிறகு சீனியை போட்டு நன்றாக கலந்து கொதிக்க விடவும்..
 4. சரியான பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும்..
 5. நிறம் மாறி அழகான நிறத்தில் இருக்கும்..
 6. ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்..

தக்காளி ஜாம் தயார்..

பீட்ரூட் ஜாம்

தேவையான பொருட்கள்:

 • பீட்ரூட்.    - 4-5 சிறியது
 • சீனி         - 100 கிராம்
 • நெய்       - 1 தேக்கரண்டியளவு

செய்முறை

 1. ஒரு கடாயில் நெய் விட்டு துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...
 2. பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்..
 3. கடாயில் அரைத்த விழுதை சேர்த்து அதன் பிறகு சீனியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்..
 4. நன்றாக வெந்ததும் பதம் பார்த்து இறக்கவும்...
 5. இதை சேர்த்து வைத்து பயன்படுத்த முடியாது...

சுவையான ஜாம் தயார்..

மிக்ஸ்ட் ப்ரூட்ஸ் ஜாம்

தேவையான பொருட்கள்:

 • ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய்
 • செர்ரி, பேரிட்சை -  6-7 nos
 • சர்க்கரை        -        250கிராம்
 • தேன்          -            2  தேக்கரண்டியளவு
 • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டியளவு

செய்முறை

 1. முதலில் பழங்களின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்...
 2. அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து அதன் பிறகு சீனியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்...
 3. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும்...
 4. பின்னர் பழங்களும் சர்க்கரையும் சேர்ந்து ஒரு பதத்திற்கு வந்ததும் தேன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்..
 5. இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒரு முறை கிளறி இறக்கவும்..

உங்க குழந்தைகளுக்கு இதை செய்து கொடுங்க. ஜாம்!ஜாம்ன்னு இந்த ஜாம்களை சாப்பிடுவாங்க. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க கருத்துக்களை மறக்காம கமண்ட்ல சொல்லுங்க. உங்க கருத்துக்களை கேட்க விருப்பமாக இருக்கிறேன்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}