• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்பிணிகள் குளிர் காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 27, 2022

 5

கர்ப்பிணிகளுக்கு சாதரணமாகவே சில உணவின் பெயரை கேட்டாலே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு உங்கள் குழந்தையின் நன்மைக்காக நீங்கள் உங்கள் நாவின் ருசியை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இது குளிர்காலம். ஆம், நீங்கள் இந்த குளிர் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் உண்டு. குளிர் பருவத்தில் கிடைக்கும் காய்கள் மற்றும் பழங்களை நீங்கள் அனுபவித்து சாப்பிடலாம். மேலும் குளிர் காலத்தில் ஜீரணக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அத்கம். ஆதலால் சில உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

நீங்கள் இப்போது கர்ப்பமாக இருப்பதால் குளிர் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதில் நீங்கள் முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். அதை அடிக்கடி மனதில் கொண்டு பின் சாப்பிடுவது தாய்-சேய் இருவருக்கும் ஆரோக்கியமானது.

தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

இந்த உணவுகளில் ஏற்கனவே சத்துக்கள் இருந்தாலும் குளிர் காலம் என்பதால் இதை தவிர்க்கிறோம். கர்ப்பமாக உள்ளவர்கள் இந்த பருவநிலைக்கு உட்கொள்ள கூடாத உணவுகள் இவை.

  1. பால் பொருட்கள்: எப்போதாவது சூடான மஞ்சள் கலந்த பாலை தவிர பால், தயிர், கிரீம் மற்றும் சீஸ் போன்ற உணவுகள் குளிர் காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும் சளி அல்லது இருமல் மற்றும் வயிற்றில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் இன்னும் மோசமடைய  செய்யலாம். பால், டீ மற்றும் காபிக்கு பதில் சூடான மூலிகை டீ அருந்தலாம். குளிர் காலத்தில் இந்த மாதிரி உடல்நல பிரச்சனைகள் பொதுவானவை என்றாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அசொளகரியத்தை ஏற்படுத்தலாம்.
  2. வறுத்த/பொரித்த உணவுகள்: குளிர் காலத்தில் சூடான வறுத்த உணவும், கூடவே சூடான டீ அல்லது காபியும் உங்களை சுண்டி இழுக்கத்தான் செய்யும். ஆனால் இப்பருவத்தில் நீங்கள் முக்கியமாக கர்ப்பமாக இருப்பதால் இதை தவிர்ப்பதே நல்லது. மேலும் ஒரு புதிய ஆய்வின் படி, கர்ப்ப காலத்தில் அடிக்கடி வறுத்த உணவை உட்கொள்பவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றார்கள். நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளும் வருவதால் தவிர்த்துவிடுங்கள்.
  3. வெள்ளை சர்க்கரை: வெள்ளை சர்க்கரையில் எந்த ஊட்டச்சத்தும் கிடையாது. பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பே ஆகும். அதிக சர்க்கரை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனமடையச் செய்யும். வெள்ளை சர்க்கரை உணவுகள், டிரிங்க்ஸ் மற்றும் தயாரிப்புகளால் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் எதிர்க்கும் சக்தி குறைந்துவிடும். இந்த சர்க்கரை உங்கள் ஆசையை திருப்தியடைய செய்யும். ஆனால் எந்த விதத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை பேணாது.
  4. வாயுவை உண்டாக்கும் உணவுகள்: மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், காலிஃபிளவர் போன்ற  வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இதில் பலவகை ஊட்டச்சத்துகள் இருந்தாலும் இந்த உணவு வகைகளை இரவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். கர்ப்பிணி பெண்களுக்கு அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும்.   
  5. மைதா  மற்றும் செயற்கை உணவுகள் : செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய எதிரி. இயற்கையான பழச்சாறுகள் மட்டுமே ஆரோக்கியமானவை. இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய மற்றொன்று மைதா உணவுகள். சாக்லேட், கேக், பிஸ்கட், பரோட்டா ஆகியவை.  அதிகமான செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் முக்கிய உணவுகள் இவை. பாக்கெட்களில் அடைத்து வைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டவே வேண்டாம். ஆசைக்காக கூட இந்த உணவுகளை ருசிக்காமல் இருப்பது சிறந்தது.

எப்போதுமே இந்த பருவநிலைக்கென்று பழங்கள் மற்றும் காய்கறிகள் வருவதுண்டு. அதை சாப்பிடுவதே சிறந்தது. அஜீரணத்தையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதன் மூலம் தாய்-சேய் இருவருமே இந்த குளிர் காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

  • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Sep 03, 2020

3 month eating fruits

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}