• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

7 தீபாவளி பட்சணங்கள் மற்றும் லேகியம் - உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 01, 2021

7
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

தீபாவளி என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். புது துணிமணிகள், பட்டாசுகள், பட்சணங்கள். உங்கள் வீட்டிலும் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்திருக்கும் என நம்புகிறேன்.

தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம்

கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும் என்பதே அவ்வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

தீபாவளி என்றாலே அது ஐப்பசி அமாவாசை தான் வரும். இந்த வருடம் ஐப்பசி மாதம் 18 ல் தீபாவளி பண்டிகை வருகிறது.

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

பட்சணங்கள் இல்லாமல் தீபாவளியா? இந்த முறை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பட்சணங்களை செய்முறையோடு குறிப்பிட்டு இருக்கிறேன். 

ராகி மசாலா வேர்க்கடலை

தேவையான பொருட்கள்:

 • வறுத்த வேர்க்கடலை - 1 கப்
 • கடலை மாவு                   - 1/4 கப்
 • ராகி மாவு                         - 1/4 கப்
 • மிளகாய் தூள்               - 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள்                  - 1/4 டீஸ்பூன்
 • எண்ணெய்.                - தேவையான அளவு
 • தண்ணீர்                     - தேவையான அளவு
 • கறிவேப்பிலை சிறிது
 • உப்பு                         -    தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, கடலை மாவு, ராகி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2. பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.

3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலையை உதிர்த்து போடவும்.

4. கரண்டியால் மெதுவாக கடலையை பிரித்து விடவும்.அவ்வப்போது கடலையை கரண்டியால் திருப்பி விடவும்.

5. எண்ணெய்யில் துறைகள் அடங்கும் வரை வேக வைத்து எடுக்கவும்.

6. ஆறியதும் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி மசாலா வேர்க்கடலை..

பனீர் ஜாமூன்

தேவையான பொருட்கள்:

 • பனீர்                         - 1 கப்
 • பால் பவுடர்            - 2 டேபிள்ஸ்பூன்
 • சமையல் சோடா - 2 சிட்டிகை
 • நெய்                        - 2 டீஸ்பூன்
 • பிஸ்தா                    - 10
 • எண்ணெய்           - தேவையான அளவு
 • சீனிப்பாகு செய்ய
 • சீனி                         - 1 கப்
 • தண்ணீர்.              - 1 கப்
 • ஏலக்காய் பொடி  - சிறிது

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் பனீர், பால் பவுடர், சமையல் சோடா சேர்த்து மிருதுவாக பிசைந்து வைக்கவும்.

2. பத்து நிமிடங்கள் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

3. இன்னொரு அடுப்பில் சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.( பாகு பதம் தொட்டு பார்த்தால் பிசு பிசு என இருக்க வேண்டும்)

4. கடாயில்  எண்ணெய் உடன் நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து பனீர் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

5. அதை சீனிப் பாகில் போட்டு ஊற வைக்கவும்.

ம்ம்ம்ம்.. அட்டகாசமான பனீர் ஜாமூன் தயார்.

பீட்ரூட் அல்வா

தேவையான அளவு:

 • பீட்ரூட்          - 1
 • சர்க்கரை.   - 1 கப்
 • பால்             - 3 கப்
 • சோள மாவு - 1 தேக்கரண்டியளவு
 • முந்திரி         - 10
 • நெய்              - 1/4 கப்

செய்முறை

1. பீட்ரூட்டை வேக வைத்து தோல் உரித்து துருவி கொள்ளவும்.

2. துருவிய பீட்ரூட் உடன் பால் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3. 1/4 கப் பாலில் சோள மாவை கரைத்து கொள்ளவும்.

4. 21/2 பாலை 1/2 கப் அளவிற்கு சுண்டக் காய்ச்சி கொள்ளவும்.

5. அடி கனமான பாத்திரத்தில் பீட்ரூட், பால், சோள மாவு கரைசல் சேர்த்து நன்கு கை விடாமல் கிளறவும்.

6. சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து நெய் சேர்த்து நன்கு கை விடாமல் கிளறவும்

7. அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: அல்வா செய்தால் அதை அடி கனமான பாத்திரத்தில் செய்தால் பதம் சரியாக இருக்கும்.

8. பீட்ரூட் அல்வா தயார்.

முந்திரி கொத்து

தேவையான பொருட்கள்:

 • சிறுபருப்பு( அ) பாசி பருப்பு.  - 2 கப்
 • பொடித்த வெல்லம்        - 2 கப்
 • எள்                                        - 1/4 கப்
 • தேங்காய் பூ                       - 1/2 முறி
 • பச்சரிசி மாவு                   - 1 கப்
 • உளுந்து மாவு                  - 1/4 கப்
 • எண்ணெய்                        - தேவையான அளவு
 • ஏலக்காய் பொடி                - 1/4 டீஸ்பூன்

செய்முறை

1. சிறுபருப்பை நன்கு வறுத்து எடுக்கவும். பின்னர் மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்காமல்)

2. எள்ளை வறுத்து எடுக்கவும். தேங்காய் பூ சிவக்க வறுத்து எடுக்கவும்.

3. வெல்லத்தை இளம் பாகாக வைத்து ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி வடிகட்டவும்.

4. சிறுபருப்பு மாவுடன் , வறுத்த எள், வறுத்த தேங்காய் பூ சேர்த்து வெல்லப்பாகு சேர்த்து சிறிது உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

5. காய விடவும்.

6. மறுநாள் பச்சரிசி மாவு உளுந்து மாவு சேர்த்து நீர்க்க கரைத்து உருட்டி வைத்த உருண்டைகளை மூன்று மூன்றாக (ஃபோல)சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மிகவும் ருசியான சத்தான முந்திரி கொத்து தயார்.

சாமை முறுக்கு

தேவையான பொருட்கள்:

 • சாமை மாவு       - 3 கப்
 • வறுத்த உளுந்து மாவு
 • (அ) பொட்டுகடலை மாவு - 1 கப்
 • எள்                     - 1 டேபிள்ஸ்பூன்
 • வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
 • பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயம் , எள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.

3. இடியாப்பம் செய்யும் உழக்கில் ஸ்டார் சில்லு போட்டு எண்ணெய் சூடானதும் பிழிந்த முறுக்குகளை சுட்டு எடுக்கவும்.

வித்தியாசமான சிறு தானிய முறுக்கு.

ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு

தேவையான பொருட்கள்:

 • உலர் அத்திப்பழம்   - 10
 • பேரீட்சை                    - 10
 • பாதாம், முந்திரி,
 • பிஸ்தா                        - தலா 20
 • நெய்                            - 2 டீஸ்பூன்
 • ஏலக்காய் பொடி     - 1/4 டீஸ்பூன்

செய்முறை

1. அத்திப்பழம் கொட்டை நீக்கி , கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

2. தண்ணீரை வடிகட்டி பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3. பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடாக்கி அதில் அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.

5. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது பொடித்த பருப்பு வகைகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்.

6. ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

ரிச்சான மற்றும் சத்தான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு தயார்.

சரி இது எல்லாம் சாப்பிட்டு செரிமானம் ஆகாமல் இருந்தால் என்ன செய்வது???

அதற்கு தீபாவளி லேகியம் சாப்பிட வேண்டும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தீபாவளி லேகியம்

தேவையான பொருட்கள்:

 • சுக்கு – 1 துண்டு
 •  சீரகம் – 2 1/2 டேபிள்ஸ்பூன்
 •  மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
 • தனியா(மல்லி) - 2 1/2 டேபிள்ஸ்பூன்
 • ஓமம் – 1 கப் (சுமார் 25 கிராம்)
 • கிராம்பு - 2
 •  ஏலக்காய் – 2
 • சித்தரத்தை - 10 கிராம்
 • நெய் – ஒரு கப்
 • வெல்லம் – 100 கிராம் (அரைத்த விழுதின் அளவிற்கு சமமாக வெல்லத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்)

செய்முறை:

இந்தப் பொருட்களையெல்லாம் நன்றாக இடித்து நொறுக்கி பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அம்மியில் வைத்து, அந்தத்

தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொண்டு போதிய அளவு கப் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்துக் கொண்டு, சட்டியில் வைத்து, கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளை போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்ட வேண்டும். சுண்டக்காய்ச்சிய பிறகு இறக்கவும்.

தீபாவளியின் போது பாதுகாப்பு

ஊதுபத்தி பற்ற வைக்க விளக்குக்கு பதில் மெழுகுவத்தி பயன்படுத்தலாம். இதன் மூலம் பெரிய தீவிபத்தை ஏற்படாமல் தடுக்க முடியும்.

 1. ராக்கெட் வெடிக்க விரும்பினால் திறந்த வெளியில் சென்று வெடிக்க வேண்டும்.
 2. வாளியில் நீரை நிரப்பி எப்போதும் வைத்திருக்கவேண்டும். ஆடையின் பாக்கெட்டுக்குள் பட்டாசை வைத்துக் கொண்டு வெடிக்க கூடாது. கைகளில் வைத்தும் வெடிக்க கூடாது. பெரியவர் துணையுடன் வெடிக்கலாம். பட்டாசு நேராக முகத்தை வைத்திருக்க கூடாது. தீடிரென்று வெடித்தால் முகத்தில் தான் காயங்கள் ஏற்படும். கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
 3. பட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துக் கொண்டிருந்தால் அவற்றின் மேல் தண்ணீரை ஊற்றிவிட வேண்டும்.
 4. எரிந்து விட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகளை நீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுவிடுங்கள். கீழே எரிவதால் எவரேனும் மிதித்து விட வாய்ப்புள்ளது.
 5. பட்டாசு வெடிக்கும் போது கட்டாயமாக காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தவிர்க்கவும். ஒடி வரும் போது கீழே தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.
 6. வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கண்காணித்தபடியே இருக்கவேண்டும்.
 7. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண்  உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.
 8. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle)  அணிந்து கொள்வது நல்லது.
 9. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
 10. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

இந்த தீபாவளி ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பான தீபாவளியாக இருக்க வாழ்த்துக்கள்....

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}