• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் விளையாட்டு பொம்மைகள் மற்றும் குழந்தைகள் வி

0-3 வயது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் 7 விஷயங்கள்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 01, 2021

0 3 7

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்தில் தொடங்கி, முதுமை வரை தொடர்கிறது. குழந்தை வளரும் போதே நல்ல அறிவாற்றலோடு சிறந்த மூளை வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் எல்லா பெற்றோர்களும் நினைக்கின்றோம். ஒரு கட்டிடத்தைப் போல, அதற்கு வலுவான அடித்தளம் தேவை. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பற்றி நாம் அறியப்படாத தகவல்கள் ஏராளம் உள்ளது.

 • குறிப்பாக பிறந்தது முதல் 1 வயது வரை உள்ள குழந்தையின் வளர்ச்சியில் வலுவான அடித்தளத்திற்கும், ஆரோக்கியமான மூளையை உருவாக்கவும் அன்பான, நிலையான, நேர்மறையான உறவுகள் உதவுகிறது.
 • உங்கள் குழந்தையின் மூளையை மன அழுத்தம் போன்ற எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
 • உங்கள் தினசரி நடைமுறைகள் முதல் உங்கள் குழந்தை தொடர்பு கொள்ளும் நபர்கள் வரை தினசரி அனுபவங்கள் உங்கள் குழந்தையின் மூளையை வடிவமைக்க உதவுகின்றன

குழந்தையின் மூளை எப்படி செயல்படுகிறது?

மூளை என்பது பல்வேறு பகுதிகளால் ஆனது, அவை நாம் கேட்பது, நடப்பது முதல் பிரச்சனை தீர்க்கும் வரை மற்றும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஆளவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் மில்லியன் கணக்கான மூளை செல்கள் அல்லது நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்கள் சினாப்சஸ் எனப்படும் சிறிய இடைவெளிகளில் இரசாயன செய்திகளை அனுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன.

செய்திகள் மீண்டும் மீண்டும் உள்வாங்கப்படுவதால், அதிகமான இணைப்புகள் உருவாக்கப்பட்டு "நரம்பியல் பாதைகள்" உருவாகின்றன. இந்த பாதைகளை மூளையின் "வயரிங்" என்று சொல்கிறார்கள். வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில், இந்த இணைப்புகள் மிக வேகமாக வளர்கின்றன.

எனவே இந்த வளர்ச்சி எப்படி நடக்கிறது? இங்குதான் பெற்றோரின் பங்கு மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது. உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியமான வழிகளில் வளர நீங்கள் உதவலாம். இதற்கு விலை உயர்ந்த பொம்மைகள் அல்லது உபகரணங்கள் தேவையில்லை, நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது!

உங்களுக்கு தெரியுமா…?

உங்கள் குழந்தையின் மூளை வயரிங் பிறந்தவுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை. இது மிகவும் சுறுசுறுப்பானது, அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு பதிலளிக்கும் விதமாக மாறும் மற்றும் வளரும். இது தினசரி அனுபவங்களாகும்- அதாவது விளையாடுவது, படிப்பது, கற்றுக்கொள்வது மற்றும் தொடர்புகொள்வது, மக்களால் பதிலளிப்பது போன்ற செயல்பாடுகள் உங்கள் குழந்தையின் மூளையை வளர்க்க உதவுகிறது.

 • மூளை வயரிங் அமைப்பு எப்படி வடிவமைக்கப்படுகிறது: அதாவது, உங்கள் 0-3 வயது குழந்தையின் மூளை எவ்வாறு வளர்கிறது - அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் பள்ளியில் நன்றாக செய்யும் திறனை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கும். பிற்கால வாழ்க்கையில், அது அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை,  மற்றவர்களுடன் அவர்கள் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் பாதிக்கலாம்.
 • உறவுகள் முக்கியம்:  அன்பான, நிலையான, நேர்மறையான உறவுகள் ஆரோக்கியமான மூளையை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தையின் மூளையை மன அழுத்தம், டென்ஷன் போன்ற எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது. தாய் சேய் பிணைப்பை அதிகரிக்க உதவும் செயல்பாடுகள் அவசியம்.
 • வளரும் சூழல்: மிகவும் சிறிய குழந்தைகள் கூட அவர்கள் வாழும் மற்றும் விளையாடும் இடங்களை பாதுகாப்பற்றதாக உணரும் போது அல்லது பயமுறுத்தும் போது மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். தீவிர கணவன் மனைவி சண்டை, வறுமை, பாலியல் துன்புறுத்தல், புறக்கணிப்பு, வன்முறைக்கு ஆளாகுதல், போதைப்பொருள் அல்லது அதீத மதுப்பழக்கம் போன்ற சூழலில் வாழும் குழந்தைகளுக்கு  வளர்ந்தவுடன் மன அழுத்தம் ஏற்படுகிறது.
 • ஆரோக்கியமான மனநிலை கொண்ட பெற்றோர்: சிகிச்சை அளிக்கப்படாத மனநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரால் உங்கள் குழந்தையின் வளரும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். இது குழந்தை பருவத்தில் உடல், மனம், கற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இந்த பிரச்சனைகள் முதுமை வரை தொடரலாம். உங்கள் வீட்டின் நிலை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவர் அல்லது உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் பேசுங்கள்.

உங்கள் குழந்தையின் வளரும் மூளைக்கு என்னென்ன தேவை:

சிறந்த பாராமரிப்பு, பதிலளிக்கக்கூடிய, நேர்மறையான அனுபவங்கள்: உங்கள் தினசரி நடைமுறைகள் முதல் உங்கள் குழந்தை தொடர்பு கொள்ளும் நபர்கள் வரை அன்றாட அனுபவங்கள் உங்கள் குழந்தையின் மூளையை வடிவமைக்க உதவுகின்றன.  

 • குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவும் ஆரோக்கியமான இடங்களில் வாழவும் விளையாடவும் வேண்டும்.
 • அவர்கள் சோர்வாக அல்லது பசியுடன் அல்லது அழுத்தமாக இருப்பது, உங்களிடமிருந்து ஒரு அரவணைப்பு அல்லது கட்டிப்பிடிப்பதை அவர்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.
 • உங்கள் குழந்தைக்கு அன்பாகவும் கணிக்கத்தக்கதாகவும் பதிலளிப்பது மற்றும் நடைமுறைகளை உருவாக்குவது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உணர உதவுகிறது.
 • குறிப்பாக, நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​வருத்தப்படும்போது அல்லது கஷ்டப்படும் போது அவர்கள் உங்களை நம்பலாம், அணுகலாம் என்பதையும், 0-1 குழந்தைகளின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் இது அவர்களுக்குக் காட்டுகிறது.
 • குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அன்பாக, அக்கறையுடன் மற்றும் நிலையான வழிகளில் பதிலளிக்க வேண்டும்.

வேடிக்கையான செயல்பாடுகள்: உங்கள் குழந்தையுடன் பேசுவது, வாசிப்பது மற்றும் பாடுவது எல்லாமே வேடிக்கையாகவும் எளிதாகவும் வளர உதவும் வழிகள். உங்கள் சிறு குழந்தைக்கு சாப்பாடு நேரத்தில் சிறிய விளையாட்டுகள் அல்லது உங்கள் 5 மாத குழந்தையுடன் பீக்-எ-பூ விளையாடுவது போன்ற எளிய விளையாட்டுகள்.

நல்ல உணவு: நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முடிந்தால், தாய்ப்பால் உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையின் முதல் 6 மாதங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உணவு. நீங்கள் தாய்ப்பால் கொடுத்தாலும் அல்லது ஃபார்முலா பால் பயன்படுத்தினாலும், உணவளிக்கும் நேரத்தை மூளையை உருவாக்கும் நேரமாகவும் கருதுங்கள்:

 • கண் தொடர்பு கொள்வது, புன்னகைப்பது மற்றும் உடல் தொடர்பு கொள்வது அனைத்தும் நேர்மறையான அனுபவங்கள். உங்கள் குழந்தை வளரும்போது, ​​இரும்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை வழங்குவதை தவறாமல் செய்யுங்கள்.

உங்கள் குழந்தைக்கு விலையுயர்ந்த பொம்மைகள் தேவையில்லை: குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பொம்மைகள் வாங்கி கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பெற்றோர் நாம் பெரும்பாலும் நினைப்பதுண்டு. ஆனால் அதை விட அவர்களின் மூளை வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் பெரியவர்களின் அன்பான, சிரிக்கும் முகங்கள் எப்போதும் சிறந்ததாக உள்ளது.

பல எலக்ட்ரானிக் பொம்மைகள் மற்றும் நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு "கல்வி" என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பொருட்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள உதவுகின்றன என்ற  கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை. ஒரு திரையை மட்டுமே பார்ப்பது செயலற்றது.

குழந்தைகள் உங்களுடனும் மற்றவர்களுடனும் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அதிகமாக தொடர்பு கொள்கிறார்களோ அந்த அளவு அவர்களின் உலகம் பெரிதாகும், ஆராயும் திறனும் அதிகரிக்கும்.  

குறிப்பு: 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரை நேரம் பரிந்துரைக்கப்படவில்லை.

நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான 7 டிப்ஸ்

உங்கள் குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் பதிலளிக்கவும். அதாவது உணர்ச்சிகளை புரிந்து உதவவும்.

1. உங்கள் குழந்தை நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​பசியாக, வருத்தப்படும்போது அல்லது சிறிது ஆறுதல் தேவைப்படும்போது இது மிகவும் முக்கியம். ஆனால் குழந்தைகளும் சத்தம் போடுவதன் மூலம், ஒலியை எழுப்புவதன் மூலம் அல்லது சிரிப்பதன் மூலம் எண்ணற்ற நேர்மறையான வழிகளில் உங்களை அணுகுகிறார்கள். நீங்கள் அன்பான மற்றும் சீரான முறையில் பதிலளிக்கும்போது, ​​உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள்.

2. உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான வீட்டை வழங்குங்கள். உங்கள் குழந்தை நம்பக்கூடிய தினசரி நடைமுறைகளை உருவாக்குங்கள். உங்கள் வீட்டை அமைதியாக வைத்திருங்கள்.

3. உங்கள் குழந்தைக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சுற்றுப்புறங்களை ஆராய உதவுங்கள். குழந்தைகள் கற்றுக்கொள்ள விளையாட்டு உதவுகிறது, மேலும் நீங்கள் தான் உங்கள் குழந்தையின் முதல் விளையாட்டு நண்பர். எளிமையான விளையாட்டுகளை விளையாடுவது அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் உலகத்தைப் பற்றி அறிய உதவும். உங்கள் தினசரி நடைமுறைகளை செய்யும்போது உங்கள் குழந்தையுடன் பேச மறக்காதீர்கள். என்ன நடக்கிறது என்று உங்கள் குழந்தைக்கு சொல்லுங்கள், நீங்கள் ஒன்றாகப் பார்க்கும் சுவாரஸ்யமான விஷயங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மற்ற புலன்களான செவிப்புலன், தொடுதல், சுவை மற்றும் வாசனையை வளர்க்க உதவுங்கள். 

4. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அதாவது அவர்களின் வளர்ச்சி மைல்கற்கள், தடுப்பூசிகள், சுகாதாரம் போன்றவை. உங்கள் குழந்தையை ஒரு சுகாதார வழங்குநர் தவறாமல் பார்க்க வேண்டும். உங்கள் மருத்துவரிடம்  குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் படிநிலைகள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி பேசுங்கள்.

5. சமூக இணைப்புகளை உருவாக்குங்கள். உங்கள் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் சேவைகள் மற்றும் திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். பல சமூகங்கள் குடும்பங்களுக்கு சேவை செய்யும் மையங்களைக் கொண்டுள்ளன. மற்ற பெற்றோர்களைச் சந்திக்க விளையாட்டு இடங்கள் மற்றும் Parentune மாதிரி ஆன்லைன் பெற்றோர் கம்யூனிட்டி உங்களின் பல சந்தேகங்களுக்கு பதிலளிப்பதன் மூலம் நீங்கள் பயன் பெற முடியும்.  

6. தரமான குழந்தை பராமரிப்பு தேர்வு செய்யவும். நீங்கள் குழந்தையை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கம் நேரங்களில், ​​உங்கள் குழந்தையை உங்களைப் போலவே கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளரிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் நம்பும் ஒருவரை தேர்ந்தெடுங்கள், உங்கள் குழந்தையின் உணர்ச்சித் தேவைகளுக்குப் பதிலளிப்பார், மேலும் கற்றுக்கொள்ளவும் வளரவும் வாய்ப்புகளுடன் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை வழங்குவார்களா என்பதை கணித்தப் பின் முடிவு செய்யுங்கள்.

7. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அணுகவும். நீங்கள் மன அழுத்தமாக, அதிகமாக, மனச்சோர்வடைந்தால் அல்லது உங்கள் குழந்தையைப் பராமரிக்க சில ஆதரவு தேவைப்பட்டால், உதவி கேட்க தயங்க வேண்டாம். உங்கள் உடல்நலப் பாதுகாப்பு வல்லுநர், உங்கள் குடும்பத்துடன் பேசுங்கள் அல்லது ஹெல்த் கேர் செண்டருக்க்ய் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு காரணிகள் உதவியாக இருக்கின்றது. அடித்தளத்தை சிறப்பாக அமைத்தால் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முன்னேற்றத்தை பார்க்கலாம். இந்த பதிவி உங்களுக்கு உதவியிருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}