உங்கள் பிள்ளையிடம் தினமும் சொல்ல 7 விஷயங்கள்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Jan 17, 2021

நான் அம்மா ஆனவுடனேயே முடிவு செஞ்ச ஒரு விஷயம், என் குழந்தைக்கு சரியான விஷயங்களை சொல்லிக் கொடுத்து, தன்னம்பிக்கையோட ஒரு நல்ல மனிதனா வளர்க்கணும்ங்கிறதை தான். அதற்கான வேலைகள்ல நான் முதல் நாள்ல இருந்தே செய்ய ஆரம்பிச்சுட்டேன். நாம குழந்தைங்க கிட்ட என்ன சொல்லி வளர்க்கிறோமோ அது அவங்களோட வாழ்க்கையில எதிரொலிக்கும். அதனால தான் அம்ம, அப்பாவோட வளர்ப்புல தான் குழந்தைங்களோட எதிர் காலம் இருக்குன்னு சொல்லுவாங்க.
உங்கள் பிள்ளைக்கு தவறாமல் விஷயங்களைச் சொல்ல வேண்டும்
ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகளுக்கு ஏழு விஷயங்களைச் சொல்ல நாங்கள் பரிந்துரைக்கிறோம். இங்கே படியுங்கள்.
ஐ லவ் யூ:
இந்த மூன்று வார்த்தைக்கு மதிப்பு ரொம்ப அதிகம். நாம இயங்கிட்டு இருக்கிற பரபரப்பான சூழல்ல இதை பெரும்பாலும் சொல்றதே இல்லை. குழந்தை கிட்ட நாம இதை சொல்றது, குழந்தைகளுக்கு நீங்க அவங்க மேல வச்சிருக்கிற பாசத்தை உணர்த்தும். இந்த மூணு வார்த்தைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுங்க.
உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்:
குழந்தை ஸ்கூலுக்கு போய்ட்டு வரும் போது அவங்கள பார்த்ததும் உன்னை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்லுங்க. அது அவங்கள ரொம்ப சந்தோஷப்படுத்தும். அம்மா நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. அப்படி இல்லாம வந்ததும் ’சேட்டைய ஆரம்பிச்சுட்டியா’ அப்படில்லாம் எதுவும் சொன்னீங்கன்னா, ஸ்கூல்ல இருந்து டயர்டா வர்ற அவங்கள அது ரொம்ப அப்செட் பண்ணிடும்.
நீ என்னை பெருமைப்படுத்துற:
ஸ்கூல்ல முதல் மார்க் இல்ல ஸ்போர்ட்ஸ்ல முதல்ல வந்தது இப்படி அவங்க ஏதாவது சாதிச்சுட்டு வந்து உங்க கிட்ட சொன்னாங்கன்னா எதுவா இருந்தாலும் உடனே நீ என்னை பெருமைப்படுத்திட்டன்னு சொல்லுங்க. அது அவங்களுக்கு தனி உற்சாகத்தையும், இன்னும் தன்னம்பிக்கையையும் தரும்.
நான் உன்னை நம்புறேன்:
சில சமயங்கள்ல குழந்தைங்க அவங்களால முடிஞ்ச முயற்சி செஞ்சும் அவங்க எதிர்பார்த்த மாதிரியோ இல்ல நாம எதிர் பார்த்த மாதிரியோ அவங்களால அந்த விஷயத்தை பண்ண முடியாம போயிடலாம். ஆனா அதுக்கு நாம கோபப்பட்டா அது அவங்கள காயப்படுத்துமே தவிர அதனால எந்த பயனும் இல்லை. ஏன்னா உண்மையிலேயே அது அவங்களோட தப்பும் கிடையாது. இதுவே நீங்க குழந்தை கிட்ட, கவலைப்படாத நான் உன்னை நம்புறேன்; அடுத்த தடவை நீ சரியா செய்வன்னு சொன்னீங்கன்னா அது அவங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நீ சொல்றதை கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு:
உங்க குழந்தைங்க உங்க கிட்ட ஏதாவது ஆசையா சொல்ல வந்தா அதை நீங்க எந்த வேலையில இருந்தாலும் உடனே நிறுத்திட்டு கேளுங்க. நான் வேலையா இருக்கேன், அப்பறம் பேசலாம்னு சொன்னீங்கன்னா, அவங்கள விட உங்களுக்கு உங்க வேலை தான் முக்கியம் அப்படிங்கிற நினைப்பு வந்துடும். இதே உடனே அவங்க சொல்றத கேட்டுட்டு அவங்களோட பேசினீங்கன்னா குழந்தைங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நீங்க அவங்க மேல ரொம்ப பாசமா இருக்கீங்கன்னு புரிஞ்சுக்குவாங்க.
நீ ரொம்ப தைரியமானவன்/ தைரியமானவள்:
நீங்க உங்க குழந்தை கிட்ட நீ ரொம்ப தைரியமானவன் இல்ல தைரியமானவள் அப்படின்னு சொன்னீங்கன்னா அது அவங்களுக்கு இன்னும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். சரியான விஷயங்களுக்கு தைரியமா குரல் கொடுக்கணும்ங்கிற எண்ணம் சின்ன வயசுலயே அவங்களுக்கு வந்திடும்.
நீ நீயா இருக்கிறது தான் எனக்கு சந்தோஷம்:
வேற யார் மாதிரியும் இல்லாம உங்க குழந்தைகள உங்களுக்கு அவங்களாகவே பிடிக்கும்னு தெரியப்படுத்துறது ரொம்ப அவசியம். நாம சரியா இருக்கோம்ங்கிறது அவங்களுக்கு உத்வேகத்தையும், தப்பு செய்யக் கூடாதுங்கிற எண்ணத்தையும் ஆழமா கொடுக்கும்.
இதே மாதிரி நீங்க உங்க குழந்தைக்கு என்ன சொல்லி வளர்ப்பீங்கங்கிறதை கீழ கமெண்ட்ல சொல்லுங்க.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}