• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கான 8 ஈஸி & ஹெல்தி ப்ரேக் ஃபாஸ்ட்(Breakfast) ஐடியாஸ்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 04, 2021

 8 Breakfast
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளுக்கான உணவு என்றாலே நிச்சயமாக அதில் சில வண்ணங்களும், புதுமைகளும், சத்துகளும்  தேவைப்படுகிறது. நாம் ஒரு உணவை சமைத்து வைத்துவிட்டு அவர்கள் பின்னால் அழைவதை விட அவர்களுக்கு ஏற்ற மாதிரி அதுவும், ஈஸி & ஹெல்தி ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்தால் நாம் நம் குழந்தைகள் சாப்பிடுவதை எண்ணி கவலை அடைய தேவையில்லை. இன்று எவ்வளவோ ஐடியாக்காள் இணையதளம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. அதில் என் குழந்தை எந்த உணவை விரும்பி சாப்பிடும் என்று கண்டுப்பிடித்து சமைத்துக் கொடுப்பது தான் சவாலே. இந்த சவாலை சமாளித்த சில ஹெல்தி உணவு வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் குழந்தைக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். 

குழந்தைகளுக்கான ஈஸி & ஹெல்தி ப்ரேக் ஃபாஸ்ட் ஐடியாஸ்

அவுல் சென்னா உப்புமா          

பொதுவாக காலை நேர அவசரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் செய்து கொடுப்பதற்கு பதிலாக  ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த  இந்த அவுல் சென்னா உப்புமாவை செய்து கொடுக்கலாம். இந்த உணவை தயாரிப்பதும் எளிது. நேரமும் குறைவு.

இரும்பு மற்றும் புரதச் சத்து நிறைந்த  இந்த உப்புமாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சென்னாவுக்கு பதில் வேர்கடலை, உருளை என உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கேற செய்து கொடுக்கலாம்.

ராகி உலர் பழ பொரிட்ஜ்

காலை வேலையில் எளிதாக தயார் செய்யக்கூடிய உணவு இது. கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த உணவு என்பதால் குழந்தைகளின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கும் சிறந்த உணவு. ராகி பவுடருடன் வறுத்த பாதாம் பொடி, அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆப்பிள்  கலந்து பரிமாறலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பையும், கவனத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.

கோதுமை வெல்லம் தோசை

கோதுமை மாவுடன் நெய், வெல்லம் கலந்து ஊத்தப்பமாகவோ, தோசையாகவோ செய்து கொடுக்கலாம். பரிமாறும் போது தோசையின் மேலே முந்திரி அல்லது பாதாமை தூவி அலங்கரித்துக் கொடுக்கலாம். ருசியான மற்றும் சீக்கிரம் தயாரிக்கக்கூடிய உணவு வகை இது. இந்த உணவில் நார், புரதம் மற்றும் தாதுக்கள் சத்து நிறைந்திருக்கின்றது. ருசியும் மணமும் கலந்திருக்கும் குயிக் ப்ரேக் ஃபாஸ்ட்.

வெஜ் பன்னீர் சாண்ட்வெஜ்

குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சாண்ட்வெஜுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. மைதா ப்ரெட்டுக்கு பதிலாக கோதுமை ப்ரெட்டை தோசைக் கல்லில் போட்டு எடுத்து, அதனுடன் கேரட் துறுவல், வெங்காயம், தக்காளி, சிறுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் வறுத்த பன்னீரை சேர்த்து கொடுத்துப்பாருங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் சீக்கிரம் செய்யக்கூடிய ஹெல்தி ப்ரேக் ஃபாஸ்ட் இது.

வெஜிடபிள் மசாலா இட்லி

இட்லியாக மட்டும் கொடுக்காமல் அதையே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கலர்புல்  இட்லியாக தயாரித்துக் கொடுக்கலாம். பொடியாக நறுக்கிய பீன்ஸ், துறுவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவைகளை தனியாக வேகவைத்து இட்லி மாவுடன் சேர்த்து அவித்துக் கொடுக்கலாம். இட்லி ஒரு நல்ல ப்ரேக் ஃபாஸ்ட், ஆனால் அதை புதுமையாக விதத்தில் பரிமாறும் போது குழந்தைகளுக்கு பிடிக்கும்.

வேர்க்கடலைக் கூழ்

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்

வெல்லம் - 1 கப்

வாழைப்பழம் – 2

செய்முறை

வேர்க்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த கடலையை நன்கு கழுவி அதனுடன் வெல்லம், வாழைப்பழம் சேர்த்து மூன்றையும் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுத்தால் நிலக்கடலை கூழ் தயார். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.  காலை நேர உணவாக சத்து நிறைந்த இந்த சுவையான கூழைக் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும் சிறாந்த உணாவாகும்.

மிக்ஸ்டு வெஜ் சப்பாத்தி

கேரட், உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிஃப்ளவர், பட்டாணி ஆகிய காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும், அதன்பிறகு அதனை நன்கு மசித்துவிட்டு சிறிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி மாவுடன் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள். தோசைக் கல்லில் சப்பாத்தி வார்ப்பது போல் இதையும் போட்டு வேக விடுங்கள். கூடவே சிறிது நெய் ஊற்றினால் ருசி அமோகமாக இருக்கும். உங்கள் குழந்தை ஒரு சப்பாத்தி சாப்பிட்டால் கூட  திருப்தியாக இருக்கும். அவ்வளவு ருசியான, ஹெல்தியான காலை உணவு இது.

கிரீன் வெஜிடபுள் கிரேவி

தேவையானவை :
லெமன் கிராஸ் தண்டு - 3, 
வேக வைத்த கேரட், உருளைக்கிழங்கு, 
காலிஃப்ளவர் - 1 கப், 
தேங்காய்ப் பால் - 1 கப், 
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன், 
நறுக்கிய சிவப்பு, பச்சை, மஞ்சள் குடை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
தண்ணீர் - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

கிரீன் பேஸ்ட்க்கு
லெமன் கிராஸ் - 5, 
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், 
தனியா - 1 டீஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
துருவிய எலுமிச்சைப்பழத் தோல் - 1 டீஸ்பூன்,  சின்ன வெங்காயம் - 6, 
கொத்தமல்லித்தழை (தண்டோடு) - 1 கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் - 6. 

செய்முறை
கிரீன் பேஸ்ட்டுக்கு சொன்ன அனைத்தையும் விழுதாக அரைக்கவும். சிறிது தண்ணீரில் (காய்களை வேக வைத்த தண்ணீராகவும் இருக்கலாம்) லெமன் கிராஸ் தண்டை போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.  அத்துடன் காய்களைச் சேர்த்து மூடி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.அத்துடன் உப்பும் காய்கறிகள் வைத்துள்ள தண்ணீருடன்  காய்கறிகளையும் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் சேர்க்கவும். சிம்மில் 5 நிமிடம் வைத்து இறுதியாக குடைமிளகாய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது ஆறியதும் லெமன் ஜூஸ் சேர்க்கவும். சுடச்சுட கீரின் கிராவி தயார்..

இந்த உணவு வகைகளை உங்கள் குழந்தைக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். அப்படியே உங்களுக்கு தெரிந்த காலை உணவு வகைகளை எங்களுக்கு பதிவாக நீங்கள் எழுதலாம். நாங்கள் போஸ்ட் செய்வோம்.  இதன் மூலம் மற்ற குழந்தைகள் பயனடைவது என்பது உங்களுக்கு திருப்தியை கொடுக்கும் தானே! தவறாமல் கீழ் உள்ள கமெண்டில் கருத்துக்களை எழுதுங்கள். இந்தப் பதிவை மற்றவருடன் பகிருங்கள். 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}