• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

கோடை வெப்பத்தை தணிக்க 8 traditional Summer Drinks - குழந்தைகளுக்கான நம்ம ஊரு பானங்கள்

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 21, 2022

 8 traditional Summer Drinks

கோடை காலம் ஏற்கனவே வந்துவிட்டது, இந்த சீசனில் நம் உடலை ஹைட்ரேட் செய்யவும், தாகத்தைத் தணிக்கவும் சில குளிர் பானங்களை விரும்புகிறோம். மதியம் ஒரு சுவையான கோடைகால பானத்துடன் செலவழிப்பதே கோடைக்காலத்தை சிறப்பாக்கும் என்று நான் நினைக்கிறேன். அது நம்மை குளிர்ச்சியடைய உதவுகிறது. இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கோடைகால பானங்கள் சுவையானவை, செய்வதற்கு எளிதானவை மற்றும் மிகக் குறைந்த பொருட்கள் தேவைப்படுகின்றன.

ஏன் நம்ம ஊரு குளிர் பானங்கள் சிறந்தது?

எப்போதுமே தென்னிந்தியாவில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் இந்த வெப்பத்தை குறைத்து நம் தாகத்தை தணிக்க இயற்கையே நமக்கு பல பானங்களை வழங்குகிறது. நாம் ரசாயனம் கலந்த, சத்துக்கள் இல்லாத கார்பொனேட்டடு டிரிங்க்ஸ் போன்றவற்றை நம் குழந்தைகளுக்கு கொடுக்காமல், இயற்கையாக கிடைப்பதை வைத்து நம் வீட்டில் செய்து கொடுப்பதே அவர்களுக்கு வெப்பத்தை தணிக்க மட்டுமில்லாமல் உடலுக்கும் ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்.

தீங்கில்லாத இந்த பருவத்திற்கேற்ற இயற்கையான குளிர்பானங்கள் குழந்தையின் உடலுக்கு தேவையான சத்துக்களை குறிப்பாக கோடையில் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது. மேலும் வெயில் கால நோய்களிலிருந்தும் அவர்களை காக்கின்றது. அதான் நம்ம ஊரு குளிர்பானங்கள் எப்போதுமே ஸ்பெஷல்

இளநீர்

இயற்கையான கேடோரேட் என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம், மெக்னீசியம் முதல் கால்சியம் வரை எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த மூலமாகும். இளநீரில் அனைத்தும் உள்ளன. தீவிரமாக வியர்வை கொண்டிருந்தால் அதிலும் கோடையில் அதிகமாக வியர்வை இருப்பதால் உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

இளநீர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இளநீர் பொட்டாசியத்தின் நல்ல மூலம். இது செல்களின் திரவ சமநிலைக்கு உதவுகிறது. மேலும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். கோடை வெப்பத்தை எதிர்கொள்ள ஒரு டம்ளர் இளநீர் தேவை. பதப்படுத்தப்பட்டதை வாங்காமல் புதிய இளநீருக்கு செல்லுங்கள்.

கரும்புச் சாறு

கரும்புச்சாறு இல்லாமல் கோடைக்காலம் முழுமையடையாது. இது உடலில் ஆற்றலை அதிகரிக்கும். கரும்புச்சாற்றில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கரும்புச்சாற்றில் இருக்கும் டையூரிடிக் சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

எலுமிச்சை சாறு

அடிக்கடி பயன்படுத்தும் மிக எளிமையான செலவில்லாத சத்தான சாறு. இது சுவையாக இருக்கும். புதினா இலைகள், எலுமிச்சை. சர்க்கரை உப்பு மற்றும் தண்ணீரி மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் பானம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நீரேற்றம் தவிர சரும ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை அளிக்கும்.

மோர்

குளிர்ந்த மோர் கோடைக்காலத்துக்கு இனிமையான பானம். வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலுக்கு தேவையானது ஒரு டம்ளர் மோர். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. மோர் மிகவும் புத்துணர்சியூட்டும் மற்றும் விரைவாக நம் உடலை குளிர்விக்கும்.

சீரகம், புதினா மற்றும் உப்பு சேர்த்த ஒரு டம்ளர் மோர் தாகத்தை தணிக்கு,. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான வெப்பமான கோடை மாதங்களில் இது உடலை குளிர செய்யும். பதப்படுத்தப்பட்ட பானங்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட சாறுகளுக்கு சிறந்த மாற்றாக இவை இருக்கும்.

வெள்ளரிக்காய் சாறு

முதலில் வெள்ளரிக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பிறகு மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும். பிறகு அந்த சாறுடன் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ் தயார்.

பானக்கரம்

இந்து நாட்காட்டியின்படி, ஆறு பருவங்கள் உள்ளன மற்றும் ஆயுர்வேதத்தில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு அமைப்பு உள்ளது. இந்த அறிவுறுத்தல்களில் பருவகால உணவுப் பழக்கங்களும் அடங்கும். கோடை காலத்தில் நீரேற்றம் தேவைப்படுவதால், இயற்கையான குளிர்பானங்கள் தென்னிந்தியாவில் எப்போதும் பிரபலம்.  அத்தகைய கோடைகால பானங்களில் ஒன்று பானக்கரம், வெல்லம் கலந்த நீரில் செய்யப்பட்ட பழங்கால எலுமிச்சைப் பழம். சமஸ்கிருதத்தில் பனகா என்றால் இனிப்பு பானம் என்று பொருள்.

தண்ணீரில் வெல்லத்தை கரைக்கவும். எலுமிச்சம் பழம், பச்சை கற்பூரம், சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து, வடிகட்டவும். இது உடலுக்கு மிகவும் நல்லது.

நுங்கு பதநீர்

தென்னிந்தியாவின் பழமையான மற்றும் சத்துக்கள் நிறைந்தது. மருத்துவ குணம் கொண்டது நுங்கு பதநீர். நீர்ச்சத்து, புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு, வைட்டமின் சி, எ, பி என பல சத்துக்களைக் கொண்டது. வயிற்றுப்புண், நீர்க்கடுப்பை, மலச்சிக்கலை குணப்படுத்தும்

தர்பூசணி வெள்ளரி சாறு

தர்பூசணிகள் மற்றும் வெள்ளரிக்காயின் சரியான கலவையான ஹைட்ரேட்டர். தர்பூசணிகளில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் உள்ளது, எனவே இந்த சாறு கோடை நாட்களில் உங்கள் குழந்தை மற்றும் உங்களையும் நீரேற்றமாக வைக்க ஏற்றது.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}