• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

8 வழிகளில் குழந்தைகளுக்கு தண்ணீரை சேமிக்க கற்றுக் கொடுக்கலாம்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 31, 2022

8

இந்த வருடம் வெயில் காலம் தொடங்குவதற்கு முன்னரே தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டது. ஒவ்வொரு துளியின் அருமையும் இப்போது தான் அதிமகாக புரிய ஆரம்ப்பிக்கிறது. இப்போதும் நாம் தண்ணீரை சேமிக்க தவறினால் நாளைய தலைமுறை நம் குழந்தைகள் தான் கஷ்டப்படுவார்கள். பெரியவங்க நமக்கு சரி, குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு பற்றி சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லாமல் பழக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த விஷயத்தில் குழந்தைகள் பார்த்து புரிந்து கொள்ளும் சூழல் வீட்டில் இருந்தால் அவர்கள் எளிதாக தண்ணீரின் அருமையை புரிந்து கொள்வார்கள்.

எளிய முறையில் குழந்தைங்களுக்கு தண்ணீரை சேமிக்க கற்றுக் கொடுக்கும் 8 வழிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 1. குழந்தைங்க குளிக்கும் போது அதிகமாக தண்ணீர் வீணாகும். ஷவர்க்கு பதிலாக வாளியில் தண்ணீர் ஊற்றி எடுத்து குளிக்க வைக்கலாம்.
 2. கை கழுவும் போது, பல் துலக்கும் போது டேப்பை அடைத்து வைத்து பயன்படுத்த பழக்கலாம்.
 3. தாகத்திற்கு குழந்தைகள் தண்ணீர் எடுக்கும் போது ஒரு டம்ளரை பயன்படுத்துமாறு சொல்லிக் கொடுக்கவும். இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் புதிய டம்ளரை எடுப்பதை குறைப்பது மூலம் ஒவ்வொரு முறையும் கழுவ அவசியமிருக்காது.
 4. வீட்டில் தண்ணீர் லீக் ஆகும் குழாய்களை சரி செய்வது அவசியம், தண்ணீர் நிரம்பி வழிவதை தவிர்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரை சேகரிக்க கற்றுக் கொடுக்கும். மேலும் குறைவாக வரும் குழாய் ஃபில்டெர்களை மாட்டி தண்ணீரை சேமிக்கலாம்.
 5. பேபி பூல், பாத் டப் தண்ணீரை டாய்லெட் சுத்தம் செய்ய மற்றும் வீட்டை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம்.
 6. கார், பை மற்றும் குழந்தைகளின் சைக்கிள் போன்றவற்றை ஹோர்ஸ் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்வதற்கு பதில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு ஸ்பாஞ்சை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். குழந்தைகளை அவர்களின் சைக்கிள் மற்றும் பொருள்களை குறைவான தண்ணீரில் சுத்தம் செய்ய பழக்கலாம்.
 7. ஹோட்டல்களுக்கு செல்லும் போதும் கூட தேவையான போது மட்டும் தண்ணீர் கேட்டு குடிப்பதே நல்லது. எல்லா கிளாஸிலும் தண்ணீர் நிரப்பி வீணாடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்,
 8. வாசிங் மெஷினில் இருந்து வரும் தண்ணீரை கால்மிதியணிகளை, வாஷிங் மாப்பை, பால்கனியை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம்.

குழந்தைளுக்கு அறிவுரை கூறி தண்ணீரை சேமிக்க கற்றுக் கொடுப்பதற்கு பதில் அவர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ளும் போது அவர்களும் பின்பற்ற எளிதாக இருக்கும். மேலும், இந்த மாதிரி வேலைகளில் குழந்தைகலை நேரடியாக ஈடுபடுத்தும் போது அவர்கள் சலிப்போடு இல்லாமல் ஒரு கடமையாக கற்றுக் கொள்வார்கள்.

இதே போல் உங்கள் வீட்டு குழந்தைகள் தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கிறார்கள், நீங்கள் சேமிக்க கற்றுக் கொடுக்கும் வழிகளை இங்கெ பகிர்ந்து கொள்ளலாம். நன்றி

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 27, 2019

hi k

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}