கர்ப்பிணிகளுக்கு சாப்பிட பிடிக்கும் 8 உணவு வகைகள்

கர்ப்ப காலத்தில் இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது முக்கியம். உங்கள் குழந்தை வளர வளர தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவது அவசியமாகும். ஆரோக்கியமான உணவுகள் குறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.காய்கறி பழம், முழு தானியங்கள், மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை கொண்டுள்ள உணவை அதிகம் உட்கொள்ளுதல் நல்லது.
கர்ப்ப காலத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள்:
-
பாதாம் சாதம்
-
கொத்தமல்லி துவையல்
-
சுக்கு பால்
-
தக்காளி இஞ்சி சட்னி
-
பூண்டு பால்
-
உப்பு மாங்காய்
-
மாங்காய் சட்னி
-
பயத்தம் உருண்டை
1. பாதாம் சாதம்:
- இஞ்சி - 1 துண்டு
- கிராம்பு - 2
- இலங்கைப் பட்டை-1
- ஏலக்காய் - 2
- குழம்ப பொடி-1 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர், கிராம்பு, இலங்கைப்பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அத்துடன், அரிசி, பட்டாணி, இனிப்பு சோளம், பாதாம் சேர்த்து வேகவிடவும். பின்னர், நெய், உப்பு சேர்த்து இறக்கவும்.
2. கொத்தமல்லி துவையல்:
- கொத்தமல்லி - 1 கட்டு
- தயிர் - 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் - 1
- தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
செய்முறை:
கொத்தமல்லியைக் கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். பின்னர், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்து, அத்துடன் கொத்தமல்லி, தயிர், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும்.
3.சுக்கு பால்:
- சுக்கு - 50கிராம்
- பூண்டு - 1
- தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
- பால் - 1 கிண்ணம்
- தேன் - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- பனை வெல்லம் - 50கிராம்
செய்முறை:
சுக்கு, பூண்டு, இஞ்சி, நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, காய்ச்சிய
பாலில் தேன் மற்றும் பனைவெல்லம் கலந்து குடிக்கவும்.
4. தக்காளி இஞ்சி சட்னி:
- தக்காளி - 4
- இஞ்சி - 2 துண்டு
- மிளகாய் - 2
- தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
- தாளிக்க - கடுகு, எண்ணெய், பெருங்காயம் `
செய்முறை:
நறுக்கிய தக்காளியை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இஞ்சியை தோல் நீக்கி அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
5. பூண்டு பால்:
- பால் - அரை லிட்டர்
- பூண்டு - 1
- சர்க்கரை - 5 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டு தோல் நீக்கம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், பாலில் சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
6. உப்பு மாங்காய்:
- புளிப்பு மாங்காய் - 2
- வினிகர் - 3 தேக்கரண்டி
- சர்க்கரை - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
செய்முறை:
மாங்காய், பச்சை மிளகாய் அரிந்து கொண்டு உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து, வினிகர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு வாரம் கழித்து உண்ணலாம்.
7. மாங்காய் சட்னி:
- மாங்காய் - 4
- இஞ்சி - 2 துண்டு
- மிளகாய் - 2
- தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
- தாளிக்க - கடுகு, எண்ணெய், பெருங்காயம்
செய்முறை:
நறுக்கிய மாங்காய், மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இஞ்சியை தோல் நீக்கி அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
8. பயத்தம் உருண்டை:
- பயத்தம் பருப்பு - 1:2 கிண்ணம்
- சர்க்கரை - 1:2 கிண்ணம்
- நெய் - 1:4 கிண்ணம்
- முந்திரி - 10
- ஏலக்காய் - 1
செய்முறை:
முந்திரியை நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, பயத்தம் பருப்பை வறுத்து அரைத்து கொள்ளவும். பின்னர், ஏலக்காய் சேர்த்து சர்க்கரை உடன் பொடியாக்கி கொள்ள வேண்டும். அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்தால் உண்பதற்கு தயாராகிவிடும்.(கர்ப்ப காலத்தில் டீ/ காபி குடிக்கலாமா - http://www.parentune.com/parent-blog/karppa-klattil-maum-kpi-kuikkalm-kt/4922)
தாய்மையின் கடமை:
தாய்மை! பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம்!
ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம் ஆகும்.
எனவே, ஒவ்வொரு தாயாரும் நல்ல உணவு பழக்க வழக்கங்களைப் பின்பற்றி தனது குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...