• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர்

அன்பா அல்லது பயமா: உங்கள் குழந்தையை நீங்க எப்படி கையாள்றீங்க?

Parentune Support
3 முதல் 7 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 15, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

"நீ இப்போது செய்யும் எல்லா வேளையையும் விட்டுவிட்டு உடனே உன்னுடைய  வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும், இல்லையெனில்..." என்று ஆறு வயதான ஜெனியின்  அம்மா  எச்சரித்தார்  - அந்த எச்சரிக்கையை ஜெனி  கண்டுகொள்ளாமல்  அவளுடைய  ஐபேடில் விளையாடி கொண்டிருந்தாள்.. அவளுடைய இந்த செயல் அவளது அம்மாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது, இறுதியில் ஜெனியை அடித்து, அவளை அடுத்த ஒரு மணிநேரம்  முழுவதும் திட்டிக் கொண்டே வீட்டுப்பாடத்தை முடிக்க வைத்தார் அவளது அம்மா. இது ஜெனி வீட்டில் எப்போதும் நடக்கும்  காட்சி!

பெற்றோர் ஒரு ஆசானாக மாறும் போது, அங்கு இரு கதாப்பாத்திரமாக செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதை சரியாக கையாளவில்லை என்றால்  ​​வீடு ஒரு போர்க்களமாக மாறும்.சத்தம் உயரும், இரத்த அழுத்தங்கள் மற்றும் புண்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபப்ட்டு விடுவோம். இறுதியில் இங்கு யாருக்கும் வெற்றி இல்லை.  இது உங்கள் வீடுகளில் அன்றாட சூழ்நிலையாக மாறியிருந்தால், தண்டனைகள் இல்லாமல் உங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்த மாற்று முறையை நாம் தேடியே ஆக வேண்டும். இதுவே சரியான அணுகுமுறை. மேலும் அறிய கீழே படிக்கவும்.

ஒழுக்கத்தை பாஸிட்டிவ்வான வழியில் புரிய வைப்பது

ஒரு குழந்தை ஒழுக்கமாக இருக்க வேண்டுமென்றால் அவர்களை அடித்தோ, திட்டியோ, சத்தம் போட்டோ தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் நம்மை பார்த்து வளர்கின்றனர். அதனால் ஒழுக்கத்தை பொறுமையுடன், அவர்களுக்கு புரியும் வழியில் தான் சொல்லித் தர வேண்டும்.

மூல காரணத்தை புரிந்து கொள்ளுங்கள்:

 • இந்த எளிய அடிப்படை காரணத்தை  நாம் புரிந்துகொண்டால் தான்,  நம் குழந்தையை அந்த கண்ணோட்டத்திலிருந்து  பார்ப்போம்.
 • குழந்தையின் சூழலில் ஏதோ ஒன்று அவர்கள் மோசமாக நடந்து கொள்ள அவர்களை தூண்டுகிறது என்பதை   புரிந்து கொள்ள ,உயற்சி செய்யுங்கள்..
 • தூண்டுதல்கள் பல இருக்கலாம் - குழந்தை பசி, சோர்வு, தூக்கம், வருத்தம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்.
 • தவறான நடத்தையை அகற்றுவதற்கான அடிப்படை தேவையை முதலில் பூர்த்தி செய்யுங்கள்.

தினமும் பிள்ளைகளுடன் இணையுங்கள்:

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக 20 நிமிடங்களை ஒதுக்க உங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேஜெட்களை நிறுத்தி வைக்கவும்.

 • அவர்கள் சொல்வதை கேளுங்கள், நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
 • அவர்களுடன் விளையாடுங்கள், அவர்களை கொஞ்சுங்கள்,  கட்டியணைத்துக் கொள்ளுங்கள், தலையணை சண்டை போடுங்கள், அவர்களுடன் சந்தோஷமாக இருங்கள்.
 •  100% சதவீதம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களுடன் இருங்கள்.
 • பெற்றோருடன் இணைந்திருப்பதாக உணரும் குழந்தைகள் தவறான நடத்தையில் குறைவாக ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

உங்கள் பிள்ளை பின்பற்ற உதவும் விதமான மாதிரி நடத்தைகள்:    

உங்களுக்கு கோபம் வரும்போது அந்த  சூழ்நிலையை விட்டு விலகுங்கள், அல்லது ஆழ்ந்த மூச்சு விடுங்கள் அல்லது அமைதியாக இருக்க 10 வரை எண்ணுங்கள்.

 • நம் குழந்தைகளுக்கு அவர்கள் செய்ய விரும்பாத எதையும் நாம் செய்யக்கூடாது.
 • நீங்கள் விரும்பும் நடத்தைகளுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் நீங்கள் விரும்பாதவற்றை புறக்கணிக்கவும்:
 • குழந்தைகள் சில நேரங்களில் குறும்புகள் செய்கிறார்கள், சிணுங்குகிறார்கள், தரையில் படுத்துக்கொள்வார்கள், அல்லது உங்கள் கவனத்தை ஈர்க்க பல விஷயங்களை செய்வார்கள். இந்த நடத்தையை கையாள்வதற்கும் அல்லது இதை வேறு விதமாக அணுக கொஞ்சம் காலாவகாசம் எடுத்துக் கொண்டு பிறகு அணுகுங்கள்.

‘இல்லை’ என்று சொல்வதற்கு பதிலாக ஒரு வழியை கண்டுபிடிக்கவும்:

ஒவ்வொரு முறையும் இல்லை என்று கேட்கும் குழந்தைகளுக்கு மனக்கசப்பை உண்டாகின்றது. மாறாக என்ன சொல்லலாம்

 • உதாரணமாக, உணவகத்தில் தவறாக நடந்து கொள்ளும் ஒரு குழந்தை, டேபிள் நாப்கின்களை சேகரித்து, இவற்றை போடுவதில் பெற்றோருக்கும் உடன்பிறப்பிற்கும் உதவுமாறு கேட்கப்படலாம்.
 • இந்த விஷயத்தில், குழந்தைக்கு “இல்லை, இதை செய்ய வேண்டாம்” என்று சொல்வதற்கு பதிலாக, தவறான நடத்தையை மாற்றுவதற்கான பாஸிட்டிவ்வான நடத்தையை எடுத்துக் காட்டுகிறோம்.
 • மேலும், குழந்தைகள் வளரும் போது, ​​நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்பதற்கான விளக்கத்தை அவர்களுக்கு வழங்குவது நல்லது. ‘இல்லை’ என்று மட்டும் சொல்வது அதிகாரத்தை காட்டுகிறது.

கருணையும்  மரியாதையும்  காட்டுங்கள்:

குழந்தை ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் மீது  பரிவு காட்டுங்கள்.

 • உதாரணமாக, அவர்களுடன் பொம்மையை பகிர்ந்து கொள்ள மறுக்கும் ஒரு குழந்தையை அவர்கள் அடித்தால், நீங்கள் சொல்லலாம், “நீ உண்மையிலேயே பொம்மையை விரும்புகிறாய் என்பது எனக்கு புரிகிறது, ஆனால் அவர்களை அடிப்பது சரியான முறை அல்ல. அடித்தால் வலிக்கும்,  நண்பர்களை தாக்கக்கூடாது என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள்”
 • அன்பால் திருத்துவதன் மூலம் எல்லா சூழலையும் எளிதாக வென்றுவிடலாம். ஆனால் இந்த மனநிலை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. தொடர்ந்து பெற்றோர் பயிற்சி செய்வதன் மூலம் நம்மை சமநிலையாக வைக்கலாம். அதன் பிறகு பாருங்கள் உங்கள் அணுகுமுறையில் வித்தியாசம் தெரியும். 

• உதாரணமாக- ஒரு குழந்தை ஒரு கண்ணாடியை உடைத்திருந்தால், அடிப்பதற்கு பதிலாக, சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு உதவுமாறு அவர்களிடம் சொன்னால், மீண்டும் அந்த நடத்தைக்கான வாய்ப்பு குறைகிறது. இந்த விஷயத்தில் கவனத்தை தவறின் மீது அதிகம் வைக்காமல், அதை சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு மாற்றப்படுகிறது.

அதே காட்சியை மீண்டும் பார்ப்போம் (அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆனால் நிலைமையை கையாளும் அம்மாவின் அணுகுமுறையில் மாற்றம். அம்மா ஜெனியை  அழைத்து ஒரு கண்ணியமான மற்றும் உறுதியான குரலில் அவளிடம் கேட்டார், “ஜெனி ஐபேட் ஐ  மூடுவதற்கு எவ்வளவு நேரம் தேவை? மூடுவதற்கு நான் பத்து நிமிடங்கள் தருகிறேன், அதன் பிறகு உங்களுடைய வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீ அதை முடித்ததும் உனக்கு பிடித்த செயலை நாம் ஒன்றாக செய்யலாம்." ஜெனி  ஒப்புக் கொள்ளும்போது, ​​அம்மா: “ஜெனி  நீ மிகவும் நல்ல பிள்ளை.  நான் சொன்னதை நீ  கேட்டதற்கு நன்றி” என்று கூறுகிறார்.

நம் குழந்தைகளிடம் இரக்கத்துடனும், புரிதலுடனும் நடந்துகொள்வதன் மூலம், அவர்கள் பொறுப்புடனும் சுய ஒழுக்கத்துடனும் இருக்க கற்றுக்கொடுக்கிறோம். மறுபுறம், நாம் அடிக்கும்போதும், ​​கத்தும்போதும் அல்லது தண்டிக்கும்போது, ​​ஆக்ரோஷமாக செயல்பட அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். நம் குழந்தைகள் பயத்தால் நமக்கு கீழ்ப்படிவதை நாம் விரும்பவில்லை. மரியாதையாக கீழ்ப்படிவதை தான் நாம்  விரும்புகிறோம்.

அன்புள்ள வாசகர்களே, தயவுசெய்து உங்கள் மதிப்புமிக்க கருத்தை தெரிவிக்கவும், உங்கள் குழந்தையை ‘அன்பான அணுகுமுறை’ என்று ஒழுங்குபடுத்தும்போது உங்களுக்கு எது சிறந்தது என்பதை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}