நீட் விலக்கு மசோதா: மாணவர்களின் மருத்துவ கனவு எப்படி நிறைவேறும்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 08, 2022

நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநரின் செயலை பார்த்து நம்பிக்கை இழக்கின்றனர் மக்கள். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநருக்கு அனுப்பி இருந்தார். குறிப்பாக ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் இந்த நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருந்தனர் தற்கொலைகளும் தொடர்ந்து நடைபெற்றது.
மசோதா குறித்து ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சட்டமன்றத்திற்கு அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரகப்பகுதி மற்றும் கிராமப் பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பது ஏற்க முடியாதது.
பெற்றோர்கள் கருத்து
நீட் தேர்விற்கு எவ்வளவு பயின்றும் முதல் தடவையே வெற்றி பெற முடிவதில்லை. முதல் தடவையில் தேர்ச்சி பெறுவது அரிது. ஏதாவது ஒரு சில மாணவர்கள் தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.. அநேக பிள்ளைகள் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பின்னர் தான் வெற்றி பெற முடிகிறது என்று கருதப்படுகிறது. அதுவும் தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி செய்து தான் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது.
உதாரணமாக எனக்கு தெரிந்த ஒரு பெண் இரண்டு வருடங்கள் நீட் தேர்விற்காக செலவு (நேரம், பணம்) செய்து வெற்றி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கிறாள். பெருமை தான் ஆனால் அவளின் இரண்டு வருடங்கள் நீட் தேர்விற்காக கழிந்ததே....அவள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்..do or die என்று முடிவு செய்து அதையே குறிக்கோளாக கொண்டு வெற்றி பெற்றாள். ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு கவுன்சிலிங் வைத்து படித்து இருந்தால் தற்போது அக்குழந்தை நான்காவது வருடம் படித்து இருந்து இருப்பாள் அல்லவா...
நீட் ஏன் தேவையில்லை என பெற்றோர் கருதுகின்றனர்?
இத்தேர்வில் பலன் ஒரு பக்கம் இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள். தமிழ்நாட்டில் 25 மாணவர்களை பலிகொண்டுள்ளது. கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போகிறது.
நீட் தேர்வு குறித்தும் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்தும் கிராமப்புற மாணவர்களுக்கு யாரும் சொல்லவில்லை. நகரங்களில் வசிக்கும் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றதால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
முன்பெல்லாம் மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இப்போது அப்படியல்ல. இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் (முன்னர் இவர்கள் எண்ணிக்கை 99 சதவீதமாக இருந்தது).
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 37 சதவீதத்தினர் பிற போர்டுகளில் பயின்றவர்கள். தமிழ் நாட்டில் மாநில பாட திட்டம் அல்லாத பிற பாடதிட்டத்தில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் 2 சதவீதம் மட்டுமே. சமூகத்தின் எல்லா மக்களுக்கும் நீட் தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பது ஒரு சார்பின் கருத்தாக உள்ளது.
- நீட் தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதால், பள்ளித்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர். இதனால் கல்வித் தரம் குறையும். அதனால்தான் நீட் வேண்டாம் .
- நீட் தேர்ச்சி பெற்ற எல்லோரும் மருத்துவராக முடியாது .
- அதே சமயம் குறைந்த மதிப்பெண் பெற்றவர் பணம் இருந்தால் இப்போதுகூட மருத்துவராக முடியும்.
- நீட் தேர்வில் சில குறைபாடுகள் இருக்கின்றன.
- நீட் தேர்வு சாதகம், பாதகம் உள்ளது
அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் நான் கேட்டு கொள்வது என்ன என்றால் மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லை. முயற்சி செய்யுங்கள் ஆனால் முடியவில்லை என்றால் தவறான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு பிள்ளைகளை நெருக்க வேண்டாம். பெற்றோர்களும் குழந்தைகளை கடிந்து கொள்வது அவசியம் இல்லை. வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு எல்லா நேரங்களிலும் அவசியம்.
படிப்பதற்கு ஆயிரம் படிப்புகள் இருக்கிறது. அதனால் நம்பிக்கை உடன் படியுங்கள்.
சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs
சிறந்த கல்வி மற்றும் கற்றல் Talks
சிறந்த கல்வி மற்றும் கற்றல் கேள்வி

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}