• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

அறுவைசிகிச்சைக்கு பிறகு என்ன செய்ய கூடாது ?

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 13, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பிறகு புது அம்மாக்களுக்கு உடலில் அதன் விளைவுகள் நிச்சயமாக எதிரொலிக்கும். முக்கியமாக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பின் அவர்களுடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றது. இதி அறுவைசிகிச்சை செய்து கொண்ட பிறகு என்னென்ன செய்ய கூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கான ஆலோசனைகளை இங்கே நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

 1. வளைந்து குனிவதை தவிர்க்க வேண்டும். தையல் போட்ட இடங்கள் ஆறுவதற்கான செயல்முறையில் இருக்கும் போது இந்த மாதிரி குனிவதை தவிர்ப்பது நல்லது.
 2. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் அழுத்தம் அதிகமாகி தையல் போட்ட இடத்தில் வலி மற்றும் அசொளகரியம் ஏற்படும்.
 3. அறுவைசிகிச்சை செய்த இடம் ஆறும் வரை, வலி நிவாரணம் அடையும் வரை உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உடல் அசைவுகள்  அதிகம் இருந்தால் தையல் பிரிந்து வலி வர வாய்ப்புள்ளது. அறுவைசிகிச்சை செய்த பின் குறைந்தது 6 வாரத்திற்கு உடலுறவு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
 4. இறுக்கமாக ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். புண் ஆறும் வரை தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியவும். அதே போல் சிகிச்சை செய்த இடத்தில் ஆடை அடிக்கடி உரசாமல் பார்த்துக் கொள்ளவும்.
 5. சிரிக்கும் போது கவனம் தேவை. கடினமாக சிரிக்கும் போது உங்களுடைய செயல்பாட்டின் மூலம் அழுத்தம் வயிற்றில் தான் ஏற்படும். இதனால் அடிவயிற்றிற்கும், அறுவை சிகிச்சை செய்த இடத்திற்கும் அசொளகரியம் ஏற்படலாம்.
 6. இருமல் மற்றும் தும்மல் பிரச்சனையை உண்டாக்கலாம். இருமலோ, தும்மலோ வரும் போது கட்டுப்படுத்த முடியாது. முடிந்த வரையில் ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படியே இருமலோ தும்மலோ வரும் போது அடிவயிற்றில் கை வைத்து விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் செய்யவும்.
 7. சிகிச்சை செய்த இடத்தை தொடுவது அல்லது அதன் மீது ஏதாவது படுவதை தவிர்க்கவும். குளித்து முடித்து பின்னும் உடனே காய வைத்து விடுங்கள். அதிக நேரம் ஈரத்தில் இருப்பதை தவிர்க்கவும். மேலும் அதன் மீது சோப் மற்றும் ஸ்க்ரப் போடாதீர்கள்.
 8. உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் தேவை. அதிக வாயுவை ஏற்படுத்தாத மற்றும் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியமாக நார்ச்சத்து உள்ள காய்கறி மற்றும் பழங்களை தேர்வு செய்து சாப்பிடவும்.
 9. உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவை உடல் இயக்கத்தை அதிகரிக்கும். புண் ஆறும் வரை மருத்துவர் பரிந்துரைக்கும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
 10. மாடிப்படிகள் ஏறுவதை தவிர்க்கவும். இதற்கான ஆலோசனைகளை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
 11. வீட்டு வேளைகளை அதிகமாக செய்யக்கூடாது. உதவிக்கு நபர்கள் இருப்பது நல்லது.
 12. நீச்சல் குளத்தில் மற்றும் ஹாட் டப்பில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

அறுவைசிகிச்சை செய்தபின் பழைய ஆரோக்கியத்திற்கு வருவதற்காக சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதற்கு பிறகு அம்மாக்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை கண்டு கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வது மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 11
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| May 17, 2019

last month 15 may my period day this month not come period. I m a progeny women aa

 • Reply
 • அறிக்கை

| May 17, 2019

sorry April 15

 • Reply
 • அறிக்கை

| May 17, 2019

போன மாதம் period தேதியிலிருந்து 40 to 45 நாட்கள் கழித்து pregnancy test வாங்கி பரிசோதித்து பாருங்கள். இன்னும் ஒரு வாரம் காத்திருந்து பாருங்கள்

 • Reply
 • அறிக்கை

| May 21, 2019

hi en 2 year sonku heav ya cough iruku .he is not able to good sleep plz suggest my problems

 • Reply
 • அறிக்கை

| Jun 03, 2019

nice tips

 • Reply
 • அறிக்கை

| Jun 29, 2019

iiipooo

 • Reply
 • அறிக்கை

| Jun 29, 2019

mmmmweewwwweeewqqw war wwewrrr 7 you can 998

 • Reply
 • அறிக்கை

| Jul 19, 2019

hello mam, en baby ku bcg potanga porantha apo after 3month left hand keezha neri Katti vanthu iruku lite ah koranchithu ipo 10month aguthu analum innum full ah pola ena pannalam mam

 • Reply
 • அறிக்கை

| Jul 21, 2019

enaku operation panni 2 months aguthu. steps epa eralam mam,dress washing lam panalama.

 • Reply
 • அறிக்கை

| Aug 11, 2019

operation senji evlo month kaliche excuses seyalam mam

 • Reply
 • அறிக்கை

| Jan 25, 2020

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}