• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வி மற்றும் ஆயுத வழிபாட்டை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 14, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளுக்கு சரஸ்வதி பூஜை என்றால் விடுமுறை, படிக்க வேண்டாம் என்று எல்லாம் ஒரே கொண்டாட்டம்... எதற்காக இந்த பூஜை என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம்.. நான் எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

ஆயுத பூஜை வரலாறு

நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை. துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9 வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர்.

கலிங்கப்போர் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அந்த போரின் தாக்கத்தால் தான் மாமன்னர் அசோக சக்கரவர்த்தி இனி ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு போதும் உயிர்களை கொல்ல மாட்டேன் மற்றவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று என்று புத்தபிக்கு சத்தியம் செய்தார்.

அன்று இரத்தக்கறை பதிந்த ஆயுதங்களை கழுவி தூய்மை செய்து இனி ஒரு உயிர்களையும் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்ததின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஆயுதங்களை தூய்மைபடுத்தி பூஜை செய்து சத்தியம் செய்வார். அனைவரையும் அவ்வாறு செய்ய சொன்னார் அந்த நாளே ஆயுதபூஜை தினமாக கொண்டாடப்பட்டது. அசோக மன்னன் ஆயுதம் களைதல் என்னும் பெயரால் வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வந்தது என்பது ஒரு வரலாறு.

சிலர் பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான். இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து, ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம். தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுதபூஜை வழிப்பாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது.

ஆயுத பூஜையின் வழிபாடு :

நவராத்திரியின் 8 வது நாளுக்கு பிறகு, 9 வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, அதற்கு குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

 • பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு குங்குமம் பொட்டிட்டு நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிப்படுவார்கள்.
 • வண்ணம் மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் சாமி படங்களுக்கு/விக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். பிறகு பொரி, பழங்கள், இனிப்பு என பல வகை பலகாரங்களை சாமிக்கு படையல் அளிப்பது வழக்கம்.
 • ஆயுதபூஜையன்று, அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கம் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.

சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். எனவே, இது வாகன பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுபட மக்கள் இந்த நாளில் தங்களது ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுத்தப்படுத்தி வழிபாடு நடத்துகிறார்கள்.

ஞானத்தை வழங்கும் தேவி

நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்

சரஸ்வதியின் உருவம்

சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். ஞானம், அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி. அறிவும், ஞானமும் உறுதியானது. நம்முடனே வருவதும் அன்னத்தினை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியினை நாம் பார்க்கின்றோம். அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல் நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள்.

சரஸ்வதி பூஜையன்று அதிகாலையில் படிக்க வேண்டும். சரஸ்வதி பூஜை முடிந்ததும் சிறிது நேரம் இராமாயணத்தின் ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். குழந்தைகள் சரஸ்வதி பூஜையன்று அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் படிக்க வேண்டும். பின்பு பூஜையில் புத்தகங்களை வைக்க வேண்டும்.

வழிபடும் முறை

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.

 

 • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது?
 • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன்? எவ்வாறு வழிபடுவது?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான்.

ஆயுத பூஜை அன்று செய்யும் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஆயுத பூஜை புரட்டாசி 13ம் நாள் 29.09.2017 அன்று கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை 

 • அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.
 • அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.
 • தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.
 • சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.
 • பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேதினமாக படைத்து வழிப்படலாம்.

ஆயுத பூஜை சிறப்பு :

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.

ஆயுத பூஜையன்று, ஆக்கப்பு ர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

சரஸ்வதி பூஜை

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

வழிபாடு முறை :

 • சரஸ்வதி பூஜை அன்று அதிகாலை வீட்டை சுத்தம் செய்து, நீராடுவதை முடித்து விட வேண்டும்.
 • ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.
 • படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.
 • மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
 • அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
 • சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்

துதிக்க வேண்டிய பாடல்

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

நைவேத்தியம் - பால் பாயாசம்

தேவையான பொருட்கள்:

 • பால் - 500 லிட்டர்
 • ஜவ்வரிசி - 100 கிராம்
 • ஏலக்காய் - 5
 • சேமியா - 100 கிராம்
 • சக்கரை - 100 கிராம்
 • நெய் - 2 தேக்கரண்டி
 • முந்திரி - 10
 • திராட்சை - 10
 • நறுக்கிய பாதம் - 5

செய்முறை:

 1. முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து கொதிக்கவைத்து பால் கொதித்த உடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வேகவைக்கவும் ஜவ்வரிசி நன்கு வெந்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வேகவைக்கவும்.
 2. ஜவ்வரிசி வெந்த பிறகு 5 ஏலக்காயை தட்டி சேர்க்கவும். அடுத்ததாக 100 கிராம் சேமியா சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். சேமியா வெந்த பிறகு 100 கிராம் சக்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
 3. அடுத்ததாக ஒரு தாளிப்பு கரண்டியில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 10 திராட்சை மற்றும் 5 நறுக்கிய பாதம் சேர்த்து பொன்னிறமாக வரும்போது பாயாசத்தில் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அவ்வளவுதான் அருமையான மற்றும் சுவையான பால் பாயாசம் தயார்.

பூம்பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்

 • கடலை பருப்பு  - 1/2 கப்
 • எண்ணெய் - 1 டீஸ்பூன்
 • கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் - 2
 • கறிவேப்பில்லை - ஒரு கொத்து
 • துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

 1. முதலில் கடலை பருப்பை  ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதி வர விடவும் .அதில் கடலைப்பருப்பு சேர்க்கவும்.
 2. அடுத்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து கடலை பருப்பை 13-15 நிமிடம் வேகவிடவும்
 3. கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்துகொள்ளவும்.
 4. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும் ,பின்  கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது நேரம் வதக்கி கொள்ளவும்.
 5. அடுத்து அதில் வேகவைத்த கடலை பருப்பு மற்றும் துருவிய தேங்காய்  சேர்க்கவும்.ஒரு 2 நிமிடம் வதங்கிய பின்  அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.

சுவையான கடலை பருப்பு /பூம்பருப்பு சுண்டல் தயார்.

இந்த நாளின் வழிபாட்டில், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}