குழந்தைக்கு முதல் முறை முடி வெட்டும் போது கவனத்தில் வைக்க வேண்டியது

0 to 1 years

Radha Shri

3.7M பார்வை

4 years ago

குழந்தைக்கு முதல் முறை முடி வெட்டும் போது  கவனத்தில் வைக்க வேண்டியது

என் குழந்தைக்கு முதலில் முடி வெட்டிய தருணம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் எடுத்தது. ஆனால் பிரசவத்தை போல படப்படப்பு இருந்தது. ஏன் இப்படி ஒரு உணர்வு என்று அப்போது புரியவில்லை. ஆனால் அந்த தருணம் நிறைய கற்றுக் கொடுத்தது. முடி தானே வெட்டப் போகின்றோம் என்று சாதரணமாக எண்ணிவிடாதீர்கள் பெற்றோரே…

Advertisement - Continue Reading Below

குழந்தைகளுக்கு என்று  வரும் போது, ​​முதல் முறையாக நடக்கும் அனைத்தும் பெற்றோருக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இதனால் தான் உங்கள் குழந்தையின் தலைமுடியை முதன்முறையாக வெட்டுவது நிச்சயமாக பெற்றோருக்கு மிகவும் உற்சாகமான மற்றும் சவாலான தருணமாக இருக்கும்.  இருப்பினும், நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், உங்கள் குழந்தையிடம் கூர்மையான கத்தரிக்கோல் நெருங்கி வரும் போது எந்த குழந்தையாக இருந்தாலும் அசொளகரியமாக உணர்வார்கள். நிச்சயமாக அவர்களின் அப்போதைய உணர்வுகள் நமக்கு புலப்படாது.

உங்க குழந்தைக்கு முதன் முறை முடி வெட்டும் போது நீங்கள் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள்

இந்த விஷயத்தில் ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். இருந்தாலும், அவர்களின் கூந்தல் அமைப்பு ஒரு முக்கிய காரணம். முதல் முடி வெட்டும் நிகழ்வில் ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் குறிப்புகளை பின்பற்றி சவாலை வென்றயுடன் எங்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

முதல் முடி வெட்டுவதற்கான நேரம்

உங்கள் குழந்தைக்கு முதல் முடி வெட்டுவதற்கு குறிப்பிட்ட வயது இல்லை, அது அவர்களின் தேவையை பொறுத்தது. உங்கள் குழந்தை பிறக்கும் போது நிறைய முடியுடன் பிறந்திருந்தால், அவர் ஓரிரு மாதங்களில் வெட்டுவதற்கு தயாராக வேண்டும், இல்லையெனில், பளபளப்பான வழுக்கை தலை (மற்றும் ஒரு சில முடி, அங்கும் இங்கும்) வரை இருந்தால் அது தேவையில்லை உங்கள் குழந்தையின்  தலை நிற்கும் வரை நீங்கள் காத்திருக்கலாம்.

பெற்றோரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு மேலதிகமாக, முடி கழுத்தில் விழுந்து எரிச்சலூட்டுகிறதா அல்லது அவரது கண்களை மறைக்கும் அளவுக்கு நீளமாக இருக்கிறதா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏன் உங்கள் குழந்தையை முன்பே தயார் செய்ய வேண்டும்

Advertisement - Continue Reading Below

உங்கள் குழந்தையை சலூன் போன்ற புதிய சூழலுக்கு அழைத்து செல்லும் போது குழந்தைக்கு ஆச்சரியங்கள் மற்றும் புதிய உணர்வு இருக்கும். அதாவது நாற்காலியில் கட்டப்படுவது, கத்தரிக்கோல் அவர்களின் காதுகளுக்கு அருகில் வருவது, அதன் சத்தம், இது கண்டிப்பாக குழந்தைக்கு வேடிக்கையாக இருக்காது. எனவே, உங்கள் குழந்தையின் தலைமுடியை அறிமுகம் இல்லாத நபர் வெட்டுவதற்கு முன், குழந்தை நிதானமாகவும் நல்ல மனநிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சலூன் மற்றும் முடி வெட்டும் நபர்

இந்த அனுபவம் எனக்கு நேர்ந்தது. முடி வெட்டும் சலூன் மற்றும் முடி வெட்டும் நபர் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது. என் பொண்ணுக்கு ஒரு இளைஞன் முடி வெட்டினான். ஆனால் பொறுமையே இல்லை. குழந்தைக்கு ஏற்றவாறு அவனுக்கு ஒத்துழைத்து வெட்ட தெரியவில்லை, மனமும் இல்லை. சலூன் பார்க்க அழகாக, குழந்தைக்கு ஏற்ற மாதிரி கார் சீட், பொம்மை என் அலங்கரித்து வைத்துவிட்டு வெட்டும் நபர் பொறுமையாக இல்லை என்றாலும் குழந்தைக்கு முடி வெட்டுவது என்பது போராட்டமாக மாறும். அதனால் சலூன் மற்றும் முடி வெட்டும் நபர் இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு முடி வெட்ட என்னென்ன பின்பற்ற வேண்டும் என்று முதலில் கூறி விடுங்கள்.

உங்கள் செல்லக் குட்டியின் முதல் முடி வெட்டுவதற்கான சில குறிப்புகள் இங்கே:

1. ஒரு பெற்றோராக, நீங்கள் முதலில் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் மன அழுத்தத்திலோ அல்லது கவலையிலோ இருந்தால் உங்கள் குழந்தை உங்கள் மனநிலையை எளிதாக உணர முடியும். கிளிப்பர்களின், கத்திரிகோலின் ஒலியும் உணர்வும் குழந்தைக்கு எரிச்சலூட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் அல்லது ஸ்நாக்ஸ் வைத்து அவர்களை திசை திருப்ப தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த கார்டூன் கதாபாத்திரங்கள் கொண்ட பொருட்களை கொடுக்கலாம்.

2. நினைவில் வைத்து கொள்ளுங்கள், முடி வெட்டும்  போது குழந்தைகள் அசைக்கவும், தடுக்கவும் செய்வார்கள். இதனால்தான், உங்கள் முதல் முன்னுரிமை, அவர்கள் தலையை அசைக்காமல் இருக்க வசதியாக இருக்க வேண்டும். குழந்தை உங்களை பார்க்கும் விதமாக முடிதிருத்தும் நபருடன் சேர்ந்து நிற்கவும். நீங்கள் அவர்களுக்குப் பிடித்த பாடலைப் பாடலாம் அல்லது அவர்களுக்குப் பிடித்த கதையைப் படிக்கலாம்.

3. உங்கள் குழந்தை ரிலாக்ஸ் ஆன நிலையில் மற்றும் சாப்பிட்டு முடித்தவுடன் ஹேர்கட் திட்டமிடவும். குழந்தையின் சாப்பாட்டு நேரம் அல்லது தூக்க நேரத்திற்கு அருகில் அதை திட்டமிடாதீர்கள், ஏனெனில் அது அவர்களை  எரிச்சல்லூட்டும். கட்டுப்படுத்த முடியாது.

4. முடி வெட்டும் போது உங்கள் குழந்தை வசதியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, வெட்டும் போது இடையில் ஒரு சிறிய இடைவெளியை எடுத்து, குழந்தையை ரிலாக்ஸ் செய்து விட்டு  தொடங்கினால் நல்லது. எரிச்சலூட்டும் போது செய்தால் அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். அதனால் முதலில் அவரை சமாதானப்படுத்துங்கள். குறுநடை போடும் குழந்தையின் (1-3 வயது டாட்லர்) முன்னால் நீங்கள் ஹேர்கட் செய்வதை காட்டலாம். இதன் மூலம் பயப்பட ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்குக் புரிய வைக்கலாம்.

5. குழந்தைக்கு மாற்று உடையை எப்போதும் எடுத்துச் செல்லுங்கள.

6. இறுதியில், உங்கள் குழந்தை மிகவும் அசொகரியமாக உணர்ந்தால், அலறல் மற்றும் சிணுங்குவது தொடர்ந்தால், சலூனின் சூழல் பிடிக்காமல் உங்கள் குழந்தை தொடர்ந்து நிராகரித்தால் , அடுத்த முறை முடி வெட்டுவதை தள்ளி வைப்பது நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...