• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல் பொழுதுபோக்குகள்

சிறந்த ஆக்டிவிட்டி - குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல் ஏன் முக்கியம்?

Jeeji Naresh
1 முதல் 3 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 18, 2021

"மனிதனின் முதல் எழுத்து வரைதல், எழுதுதல் அல்ல." (மர்ஜேன் சத்ரபி)

குழந்தைகள் பேசுவதற்கு முன்பாகவே தங்கள் திறன்களை வெளிபடுத்த முயற்சிப்பார்கள் அதில் ஒன்று தான் ஓவியம் வரைதல் மற்றும் வண்ணங்களால் தீட்டுதல். உதாரணமாக, ஒரு குழந்தை அவர்களுக்கு பழக்கமான ஒன்றினால் ஈர்க்கும்போது, அவர்களுக்கு என்ன தெரியும், இந்த விலங்கை நோக்கி அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது.

வண்ணங்கள் என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த விஷயம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுவது என்பது அவர்கள் வள்ர்சியில் எவ்வளவு முக்கியமான ஒரு கலை என்று இங்கே பார்க்கலாம்.

குழந்தை பருவத்தில் தங்கள் மோட்டார் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரல்களை பயன்படுத்தி ஓவியம் வரைவது மூலம் தங்கள் திறன்களை வெளிக்கொணர ஒரு சிறந்த வழியாகும். இதன் மூலம் தங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி கொடுக்க உதவுகிறது. குழந்தைகள் தங்களோட பிஞ்சி கைல வண்ணங்களை எடுத்து எங்க வரைரோம், என்ன வரைரோம் என்று தெரியாம கை, கால், முகம் என்று பாக்காம பூசி கொள்வார்கள். அது அவர்களின் உணர்ச்சியை காட்டுவதற்கான ஒரு அற்புதமான வழி. அதனை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் கற்பனை திறனை பார்க்கலாம். மேலும் வளர வளர இது ஒரு ஆர்வமாக மாறும்.

ஏன் ஓவியம் வரைதல் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம்:

Basic shapes

ஒரு அறிவியல் சான்று சொல்லும்போது "வரைதல் ஒரு குழந்தையின் வளர்ச்சியின் இன்றியமையாத பகுதியாகும். வரைதல் மூலம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மட்டுமல்ல தங்கள் யோசனைகளை உருவகிக்க முடியும்" அதற்கான அர்த்தம் என்ன என்றால்!

 • இது அவர்களின் கற்பனையை அதிகரிக்கிறது. கற்பனை ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மூலம் தங்கள் சொந்த காட்சிகளை உருவாக்க முடியும். இது ஒரு புதுமையானதும், முற்றிலும் சுதந்திரமான ஒரு படைப்பாகவும் இருக்கும்.
 •  குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை மறைக்க தெரியாது. அவர்கள் வரைவதற்கு பயன்படுத்தும் வண்ணமும், வரைகிற உருவமும் அவர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான வழியாகும்.
 • அவர்களின் அறிவாற்றல் செயல்முறைகளை அதிகரிக்கின்றது. அறிவாற்றல் என்பது சிந்தனை, அனுபவம் மற்றும் புலன்கள் மூலம் அறிவையும், புரிதலையும் பெறுவதாகவும். எதாவது சிந்தித்து அல்லது உணர்ந்து வரையும்போது பயன்படுத்தும் வடிவமும், சித்தரிக்க முயற்சிக்கும் கதை ஆகியவை அவர்களின் அறிவு மற்றும் காட்சித் திறன்களை உருவாக்க உதவுகின்றது.
 • இது மோட்டார் மற்றும் ஒருங்கிணைப்பு திறன்களை அதிகரிக்கிறது. அவர்கள் ஒழுங்காக பென்சிலைப் பிடித்து வரையும் விதம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சிறிய மூடிய இடத்திற்குள் வண்ணம் தீட்டுவது அவர்களின் பிற்கால வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கு ஒரு முதற்படி ஆகும்.
 •  ஒரு குழந்தைக்கு வரைவதற்கு அளிக்கும் சுதந்திரம் என்பது அவர்கள் விரும்பும் எதையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகும்.
 • அவர்கள் வரையும் போது அவர்களின் மனதில் என்ன ஓடுகின்றது என்பதை அறிய முடியும். அது அவர்களின் தனித்துவத்தில் வளர உதவுகிறது.

இதனை பெற்றோர்கள் ஊக்குவிக்கவும், தங்களது மகிழ்ச்சியையும் வெளிபடுத்த வேண்டும். முக்கியமாக என்ன வரைந்தார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். இது அவர்களின் அறிவு மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டை அதிகரிக்கும்.

ஓவியம் வரைதல் உடல்/மன ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது:

 • மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது:

ஒரு குழந்தை தன்னுடைய சுய சிந்தனை மூலம் ஒரு படம் வரையும் போது அவர்களின் படைப்பாற்றல் வெளிப்படுகிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

 • நினைவுகூரும் (ஞாபக சக்தி) திறன் அதிகரிக்கின்றது:

ஓவியம் மற்றும் வரைபடத்தில் ஈடுபடும் போது கற்பனை மற்றும் சிந்தனை மூலம் அவர்கள் மனதைக் கூர்மை படுத்துகையில் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கின்றது

 • தொடர்பு சார்ந்த திறன் அதிகரிக்கின்றது:

சமூகத்தில் எளிதாக தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிபடுத்தவும்,. மற்றவர்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ளவும் இது உதவுகிறது.

Flowers and butterflys

 • பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உண்டாகிறது:

ஓவியம் மற்றும் வரைதல், விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வளர்ச்சியை தூண்டுகிறது. இது ஒரு தனிநபருக்கு ஒரே பிரச்சனைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்க முடியும் என்பதை உணர உதவுகிறது.

 • மன அழுத்ததிலிருந்து வெளியேற உதவுகிறது:

குழந்தைகளுக்கும் மன அழுத்தம் இருக்கும் என்பதை ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்றுதான். இந்த ஓவியம் வரைதல் மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவும் ஒரு அற்புதமான வழி ஆகும்.

இவற்றை தவிர ஓவியம் வரைதல் உணர்வு பூர்வமான அறிவு திறனை வளர்க்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட நலனை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த சூழ்நலையிலும் உடலும் மனமும் மிகவும் தளர்வாக மாறும் போது நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உணர ஓவியம் வரைதல் பெரிதாக உதவுகின்றது.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}