கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது May 21, 2021

கோவிட் அதிகமாக பரவிவரும் சூழ்நிழையில் உயிர் காக்கும் மருந்துகளாக ஸ்டீராய்டு மற்றும் ஆண்டிகொகுலன்ஸ் (steroids and anticoagulants) ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றார்கள் மருத்துவர்கள். லாக்டவுன், தடுப்பு மருந்துகள். வீட்டு வைத்தியங்கள் போன்றவை இந்த கொரோனா பரவலை குறைக்கும் என்று நம்பும் சூழ்நிலையில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கருப்பு பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் பற்றிய அறிகுறிகளையும், சிகிச்சை முறைகளையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
பூஞ்சை என்றால் நாம் இருக்க கூடிய சுற்று சூழலில் இயற்கையாக இருக்க கூடிய ஒரு அடிப்படையான நுண் கிருமி. மியூகோர்மிகோசிஸ் (Mucormycosis) எனப்படும் கறுப்புப் பூஞ்சை கோவிட்-19 நுண்கிருமியின் காரணமாக பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. வைரஸ், பாக்டீரியா போல் இது காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றது. அது முதலில் கண்களை பாதிக்கிறது; பார்வை நரம்பு மூலமாக மூளையையும் மற்றும் நுரையீரல், பல் வாய் போன்ற பகுதிகளையும் பாதிக்கிறது. மூளை பாதிக்கப்படும்போது உயிருக்கு ஆபத்து வரும் வாய்ப்பும் இருக்கிறது.
யார் யாருக்கு பூஞ்சைகள் பாதிப்பை ஏற்படுத்தும்?
நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆதாவது
- கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
- எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
- சக்கரை நோய் அதிகமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தும்.
- நுரையீரல் பாதிக்கபட்டவர்களுக்கும் எளிதில் இந்த பூஞ்சைகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
- புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்
- தற்போது கோவிடில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பூஞ்சை நுண்கிருமி உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்த துவங்குகிறது.
கோவிட் நோயாளிகளுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்:
கோவுடில் ஸ்டீராய்டு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இந்த மியூகோர்மிகோசிஸ் நம் உடலின் சைனஸ் பகுதியில் வளர ஆரம்பிக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளை அரித்து மூளையை பாதிக்கின்றது. நுரையீரலை பாதிக்கிறது. சிலருக்கு ரைநோ செரிபரல் மியூகோர்மிகோசிஸ் (rhinocerebral mucormycosis) மற்றும் கண் பகுதிகளில் ஆர்பிடல் மியூகோர்மிகோசிஸ் (orbital mucormycosis) என்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
மியூகோர்மிகோசிஸ் அறிகுறிகள்:
- முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் வீக்கம்.
- கண் இமைகள் வீக்கம், உணர்வின்மை மற்றும் கண் சிவந்து காணப்படுதல்
- மூக்கடைப்பு, அவ்வப்போது மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது, அவ்வப்போது மூக்கிலிருந்து கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் திரவம் வெளியேறுகிறது
- பல், தாடை பகுதிகளில் கருப்பு போன்று படிவு மற்றும் வலி
- பொருள்கள் இரண்டு இரண்டாக தெரிவது
- தீவிர தலைவலி
இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலே கண்டறிந்து மருத்துவரை பார்ப்பது நல்லது.
தடுப்பு மருந்துகள்
- மருத்துவர்கள் ஸ்டீராய்டு டோசேஜை அதிக அளவு பயன்படுத்தாமல் தேவையான அளவு மட்டும் முறைப்படி நோயாளிக்கு அளிக்க வேண்டும்
- சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்
- கோவிட்டிலிருந்து குணமடைந்த பின்னரும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை கண்காணிக்கவும்.
சில எளிய தடுப்பு செய்முறைகளை முயற்சி செய்யலாம்
- நம் உணவு முறையில் மாவுச் சத்து உள்ள உணவுகளை தவிர்த்து புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
- ஆவி பிடிப்பதற்கு சுத்தமான நீரைப் பயன்படுத்தவும்
- சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறைகள்:
அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிந்து மருத்துவரை அணுக வேண்டும்.
ஆம்போடெரிசின் பி எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து இந்த நோய்த் தொற்றுக்கான தேர்வுக்கான சிகிச்சையாகும். இந்தப் பூஞ்சை கண்ணிலிருந்து மூளைக்கு பரவும் ஆபத்து அதிக அளவில் இருப்பதால், கண் ஈடுபடும்போது ஆம்போடெரிசின் லிபோசோமால் முறையில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு மருத்துவரின் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் 4-6 வாரங்களுக்கு மேலாக மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கொரோனா தொற்று போன்று இந்த பூஞ்சை தொற்று எல்லாருக்கும் வருவதில்லை. மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இது வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் இதனை குறித்து பீதி, பதட்டம் அடையாமல் இதனை பற்றின அறிகுறிகளை தெரிந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை முன்னாதாகவே மேற்கொள்வோம்!
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}