• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

என் குழந்தைக்கு குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்யலாமா ?

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 30, 2022

0-1 வயது குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சீரான ரத்த ஓட்டமும் எலும்புகளுக்கு வலிமையும், சரியான செரிமான செயல்முறை நிகழவதும் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பலன் அளிக்கின்றது. மேலும் உடம்பிலுள்ள அசதியை நீக்கி நிம்மதியான தூக்கத்தை அவர்களுக்கு இயல்பாகவே தருகின்றது. நம்முடைய பாரம்பரியமான ஆயுர்வேதமும் ஆயில் மசாஜின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. மிருதுவாக மற்றும் மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவையானதை உடல் பெறுகின்றது.

ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. எந்த பருவநிலையில் என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் எண்ணெய் பயன்படுத்துவதில் வித்தியாசம் இருக்கின்றது. சில எண்ணெய் எல்லா பருவநிலைக்கும் ஏற்றதாக இருக்கலாம். இப்போது குளிர் காலம் என்பதால் பல பேருக்கு இருக்கும் சந்தேகம் குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்தால் குளிர்ச்சியாகிவிடுமோ என்று தான். ஆனால் குளிர் காலத்திலும் எண்ணெய் மசாஜ் செய்யலாம். ஆனால் எந்த நேரம், எவ்வளவு நேரம் மற்றும் எந்த எண்ணெய் போன்ற இந்த மூன்று விஷயத்திலும் கவனம் தேவை.

குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்யும் போது என்னென்ன விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான யோசனையை இந்த பதிவு உங்களுக்கு தரும்.

குளிர்காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்யலாமா ?

எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் பொதுவான சந்தேகம் இது. இந்த குளிர்காலத்தில் மசாஜ் செய்தால் குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று அம்மாக்கள் யோசிப்பது தவறில்லை. எப்போதுமே ஒரு வயது வரைக்கும் குழந்தையை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் தாராளமாக செய்யலாம். ஏனென்றால், குளிர் காலத்தில் குழந்தையின் சருமம் சீக்கிரமே வறண்டுவிடும். மற்றும் செரிமான கோளாறும் ஏற்படும். சூரிய வெளிச்சம் கிடைக்காததால்  அவர்களுடைய சருமத்திற்கு கண்டிப்பாக அதிக கவனம் தேவைப்படும். அதனால் இந்த குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை இந்த எண்ணெய் மசாஜ் மூலம் பாதுகாக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன

உங்கள் குழந்தையை குளிரில் மசாஜ் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே. கீழே உள்ளதை படிக்கவும்...

 • மசாஜ் செய்யும் முன் உங்கள் இரு கைகளையும் நன்றாக தேய்த்து சூடாக்கிய பின் குழந்தையின் உடம்பில் தேய்க்க ஆரம்பிய்யுங்கள். அப்போது தான் உங்கள் குழந்தை குளிர்ச்சியை உணராமல் இருக்கும்.
 • மசாஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயை சிறிது சூடாக்கி கொள்ளுங்கள். அதிகம் வெப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெப்பத்தை சோதிக்க  உங்கள் முழங்கையால் அல்லது உங்கள் மணிக்கட்டில் தொடுவதன் மூலம் இதை உறுதிப்படுத்தலாம்.
 • நீங்கள் மசாஜ் செய்யும் அறையில் குளிர் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏன்னென்றால் குழந்தை ஆடையில்லாமல் இருப்பதால் குளிர்காற்று அசொளகரியத்தை ஏற்படுத்தும்.
 • 5 மதல் 10 நிமிடம் வரை தொடர்ந்து மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் தோல் எண்ணெய்யை உறிஞ்சும் வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
 • நேரம் தாழ்த்தாமல் உடனே குழந்தையை குளிக்க வைக்கவும்.
 • குழந்தையை குளிப்பாட்டும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மிதமான குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற சூடான தண்ணீரில் குளிப்பாட்டுங்கள். அதிக நேரம் எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைக்கு அதீத குளிர்ச்சியாகிவிட வாய்ப்புகள் அதிகம். அதே போல் குளிக்கும் நேரத்தில் தொடர்ந்து குழந்தை வெப்பத்தை உணரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது சோப் போட, தண்ணீர் நிரப்ப என அதிக இடைவெளி விடாதீர்கள்.

குளிர்ந்த பருவத்தில் மசாஜ் செய்யும்போது

குளிர் காலத்தில் மசாஜ் செய்ய சிறந்த நேரம் பிற்பகல் அல்லது சாயங்காலம் தொடங்கும் முன். குழந்தை தூங்கும் நேரத்தை தேர்ந்தெடுக்காதீர்கள். சாயங்காலம் தொடங்கும் முன் செய்வதால் குழந்தை இரவில் நல்ல தூங்கும். அதே போல் குழந்தை பசியோடு இருக்கும் போதோ அல்லது முழு வயிறோடு இருக்கும் பொழுதோ குளிப்பாட்டாதீர்கள்.

குளிர்காலத்தில் எந்தெந்த எண்ணெய்கள் பயன்படுத்தலாம் ?

தேங்காய் எண்ணெய்:

எல்லா பருவநிலைக்கும் ஏற்றது தேங்காய் எண்ணெய். இந்த எண்ணெய்யை குழந்தையின் உடல் சீக்கிரமே உறிஞ்சிவிடும். எல்லா வித நோய் தொற்றிலிருந்தும் குழந்தையின் சருமத்தையும் பாதுகாக்கும். அவர்களின் தலைமுடிக்கும் சிறந்த எண்ணெய் இது.

பாதாம் எண்ணெய்:

வைட்டமின் ஈ மிகவும் அதிகமாக உள்ளது. இது குழந்தைக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும். மேலும் இது வைட்டமின்கள் A, B1, B2 மற்றும் B6 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குழந்தையின் சருமத்தில் எளிதாக உறிஞ்சப்படுவதால் குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும். வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பாதாம் எண்ணெய்யை வாங்காமல் சுத்தமான பாதாம் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

கடுகு எண்ணெய்:

வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் இது. குளிர் காலத்தில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கின்றது. குளிர்காலத்தில் தோல் வறட்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஆண்டி-பேக்டீரியல் மற்றும் ஆண்டி- ஃபங்கல் பண்புகளை கொண்டது. இதனால் சருமத்தை நோய் தொற்ரிலிருந்து பாதுகாக்கின்றது.

நெய்:

குளிர் காலத்தில் சுத்தமான பசு நெய்யில் குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். பசு நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. குழந்தையின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கதகதப்பை தக்க வைக்கும். குழந்தையின் தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகின்றது.

ஆலிவ் எண்ணெய்:

குழந்தையின் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். சென்ஸிடிவ் சருமம் இருந்தால் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம். இந்த எண்ணெய் குழந்தைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தையின் சருமம் வேகமாக உறிஞ்சப்பட்டு, எப்போதும் வறட்சியடையாமல் பாதுகாக்கின்றது. மற்றும் இந்த ஆலிவ் எண்ணெய் குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் தருகின்றது.

குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்வதன் அவசியமும் நன்மைகளும் அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். இந்த வலைப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க.. நன்றி

 

 • 13
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jan 14, 2019

ll

 • Reply
 • அறிக்கை

| May 12, 2019

நன்றி

 • Reply
 • அறிக்கை

| Oct 21, 2019

g

 • Reply
 • அறிக்கை

| Nov 08, 2019

thank yo let me lygylkjkhldd

 • Reply
 • அறிக்கை

| Dec 30, 2019

Thanks mam

 • Reply
 • அறிக்கை

| Jan 03, 2020

Nice

 • Reply
 • அறிக்கை

| Jan 31, 2020

Thank you

 • Reply
 • அறிக்கை

| Nov 15, 2020

Thanks for your help

 • Reply
 • அறிக்கை

| Jan 03, 2021

 • Reply
 • அறிக்கை

| Feb 22, 2021

ஆலிவ் ஆயில் பயன்படுத்தி என் குழந்தைக்கு தோல் கருப்பு நிறத்தில் மாறிவிட்டது என் குழந்தைக்கு பழைய நிறம் பெற என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லுங்கள் ப்ளீஷ்

 • Reply | 1 Reply
 • அறிக்கை

| Aug 21, 2021

 • Reply
 • அறிக்கை

| May 02, 2022

Thank you so much for the wonderful explanation 🙂

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}