• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

கரோனா லாக்டவுன் - குழந்தைகளுக்குள் ஏற்படும் தாக்கங்கள்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 19, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.  அது  குடும்பங்களுக்கு மிக சவாலான ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வீடியோ மூலம் பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலை பார்ப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட சமூக தொடர்பு கிடைத்துவிடுகிறது.  ஆனால் குழந்தைகளுக்கு இது மிகவும் புதுமையான ஒரு அனுபவமாக இருக்கிறது. மழலையர் பள்ளி கள், டே கேர், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில், குழந்தைகளை வெளியே சென்று விளையாடவும் அனுமதிக்கப்படுவதில்லை. இது ஆரம்பகட்டத்தில் இது பெரிய விஷயமாக தெரியாது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு இருக்கும் சூழல் குறிப்பாக, இரண்டிலிருந்து 11 வயது உடைய குழந்தைகளுக்கு மிகக் கடினமான தருணமாக அமைகிறது.

  1. இந்த சமூகத் தனிமை உங்கள் குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது?  
  2. பெற்றோர் இந்த சூழலுக்கு ஏற்ப உங்கள் குழந்தையை மாற்றியமைத்து அவர்களது நலனை பேணுவது பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.                     

குழந்தைகளின் சமூகத் தொடர்பு      

         குழந்தைகள் அவர்களது சுற்றத்தாருடன் பழகுவது என்பது வெறும்  வாய்மொழி தொடர்பு மட்டுமல்லை.  உடல்மொழி,  அசைவுகள்,  ஒன்றுகூடி விளையாடுவது, பகிர்தல் , ஒன்றாக சேர்ந்து ஒரு செயலை செய்வது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. இதுவே குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும்  தொடர்பு.                           

  குழந்தைகளுக்கு சமூக தொடர்பு ஏன் முக்கியம்            

      சமூகத் திறன்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த திறன்கள்  அவர்கள் குழந்தைகளாகவும் பின்னர் பெரியவர்கள் ஆன பிறகு  மற்றவருடன் எவ்வாறு தொடர்பு கொள்வார்கள் என்பதை நிர்ணயக்கின்றது. நல்ல சமூகத் தொடர்பு கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி அவர்களது அறிவாற்றல், மன ஆரோக்கியம், தொடர்பு கொள்ளும் திறன், அவர்களது சுதந்திரம் என அவர்களது வளர்ச்சியில் பல்வேறு விதங்களில் நலம் பெறுகிறார்கள். நல்ல சமூகத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடனான உறவு வலுப்பெறும், அர்த்தமுள்ள உரையாடல், அனுதாபம், குழுவில் நட்புறவு என பல விஷயங்கள் மேம்படும்.  ஆரம்ப காலத்தில் இந்த சமூக திறன்களை அவர்கள் கற்றுக் கொள்வதால் மொழித்திறன் அறிவாற்றல் தன்னம்பிக்கை போன்ற வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்தத் நன்மை தரும் திறன்களை மேம்படுத்தவே மழலையர் பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் செயல்படுத்துகின்றன. இது கல்வி கற்பதையும் தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது.

சமூகத் திறன் களுக்கான மைல்கற்கள்                    

2-3 வயது உடையவர்கள்  : மற்றவர்களிடமிருந்து கவனத்தை பெறுவது. வணக்கம், ஹலோ, ஹாய், பாய் என தொடர்பை தொடங்க முடியும். ஒருவர் பேசும் போது அந்த நபரை பார்த்து கவனித்த பிறகு அவருக்கு பதிலளிப்பது.

3-4 வயதுடையவர்கள்: நண்பர்களோடு விளையாடும் போது, பொம்மைகளுடன் விளையாடுவது, வாய்மொழி சொற்கள் மூலமாக மற்றவர்களுடன் பேச தொடங்குவது மற்றும் சொற்களை கலவையாக பயன்படுத்துவது.

4-5 வயதுடையவர்கள்: சக நண்பர் குழுக்களுடன் ஒருங்கினைந்து இருப்பது. ‘நிறுத்து’,‘வேண்டாம்’, ‘தயவுசெய்து’ போன்ற கோரிக்கைகளை உபயோகப்படுத்துவது.  இந்த கட்டத்தில் நிறைய பேசவும் அரட்டையடிக்கவும், பாசாங்கு செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள்.

5-6 வயதுடையவர்கள்: உணர்வுகளை வெளிப்படுத்தவும், ‘நான் வருந்துகிறேன்’, ‘தயவுசெய்து’, ‘நன்றி’ என்று சொல்லவும், பகுத்தாய்வு மற்றும் பேரம் பேச ஆரம்பிக்கும் அறிகுறிகளைக் காட்டுவார்கள். அறிவாற்றல் தொடர்பான விளையாட்டுகளை விளையாடுவார்கள். உண்மையான மற்றும் பொய்யான விளையாட்டை புரிந்து கொள்ள முடியும்.

சமூக தனிமை ஒரு குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது

ஒரு குழந்தை சமூக தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும்போது, அது அவர்களின் மன, உடலியல் மற்றும் சமூக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும். ஒரு குழந்தைக்கு தனிமையின் தாக்கம் குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என்பதைப் பொறுத்து பாதிக்கிறது. நீண்ட கால சமூக தனிமை ஒரு குழந்தைக்கு நல்லதல்ல என்றாலும், குறுகிய கால சமூக தனிமையின் தாக்கத்தை தங்கள் குழந்தை புரிந்துகொள்வதற்கும் சமாளிப்பதற்கும் பெற்றோர்கள் உதவ முடியும்.

சமூக தனிமைப்படுத்தலால் குழந்தைக்கு ஏற்படும் குறுகிய கால தாக்கம்

 மன அழுத்தம்: குறுகிய கால (ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட)  சமூக தனிமைக்கு ஒரு குழந்தையின் உடல், மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டலாம், இது அவர்களின் ஆரோக்கியத்தையும் பசியையும் பாதிக்கலாம்.

மூளை வளர்ச்சி: ஒரு குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் குறிப்பாக, 1 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைக்கு சமூகத்தோடு உள்ள  தொடர்பு துண்டிக்கப்படுவதால் மூளையின் சீரான வளர்ச்சிக்கு தேவையான சீழல் கிடைக்காமல் போகின்றது. குழந்தையால் இதை எளிதில் வெளிப்படுத்த முடியாததால் பெற்றோர் புரிந்து கொள்வதில் சவால்கள் இருக்கும்.

சமூக ஆதரவு: ஒரு குழந்தைக்கு சமூகத்தோடு தொடர்பு குறையும் போது அவர்களின் சுறுசுறுப்பு குறைந்து உடல் மற்றும் மனதளவில் ஒருவித அழுத்தம் உண்டாகின்றது. மேலும் அவர்கள் நண்பர்களோடு பேச  மற்றும் சமூக ஆதரவுக்காக ஏங்கக்கூடும். இத்தகைய ஆதரவு கிடைக்கும் போது ஒரு குழந்தை நன்றாக உணர்வார்கள்.

உடலியல்: சமூக தனிமையனது ஒருவர் தனித்து விளையாடுவதைக் குறிக்கிறது, மேலும் இது குழந்தையின் இயக்கம் மற்றும் உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, குழந்தை சுறுசுறுப்பான நேரத்தை இழக்கிறது மற்றும் விளையாட்டு நேரமும் குறைந்து போகின்றது.

கரோனா நேரம் - பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சமூக நலனுக்காக என்ன செய்ய வேண்டும்?

1.அடிக்கடி சமூக தொடர்புகளைத் திட்டமிடுங்கள்:  இந்த மாதிரி அவசர நேரங்களில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அவர்கலீன் வளர்ச்சிக்கு தேவையான சமூக நலனுக்காக பெற்றோர் பல திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு 3 மணி நேரமும் ஏதாவது ஒரு வகையில் உங்கள் குழந்தை சமூக தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்புகளை ஊவாக்கிக் கொடுங்கள். பெற்றோர் வீட்டில் இருந்தால், டிவி, மொபைல் போனில் நேரத்தை செலவிட வைப்பதை காட்டிலும் அவர்களோடு விளையாடுவது, பேசுவது என தொடர்பில் இருங்கள்.

2.பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் விளையாட்டு: உங்கள் கட்டிட நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்களுடன் ஒன்றாக சேர்ந்து இவற்றை திட்டமிடுங்கள். நீங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்த விளையாட்டு நேரத்தை உருவாக்க ஒருவருக்கொருவர் வீடுகளில் திட்டமிடலாம். இதை ஒழுங்கமைக்க உங்களுக்கு பெரிய குழந்தைகள் குழு தேவையில்லை. உங்கள் குழந்தையின் சக நண்பர் குழுக்களில் ஒருவருடன் விளையாட்டு நேரத்தை திட்டமிடலாம். ஒரு நேரத்தில் குழுவில் 4 க்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.

3.கதைசொல்லல் மற்றும் கதை வாசிப்பு நேரம்: தினசரி உங்கள் குழந்தையுடன் கதை சொல்லல் மற்றும் கதை வாசிப்பை நிர்ணயிக்கும் நேரத்தை உருவாக்கவும். இதில் நாடகம், படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டு வந்து உங்கள் குழந்தையின் படைப்பாற்றல் திறனை ஊக்கப்படுத்தவும். கதை சொல்லில் புத்தகம் மட்டுமில்லாமல் விரலில் மாட்டில் பொம்மைகளை மாட்டி (Finger Puppets) போன்றவற்றை கொண்டும் கதை நேரத்தை சுவாரஸ்யமாக மாற்றலாம். (http://www.parentune.com/parent-blog/ungal-kuzhanthaiku-suvarasiyamaha-kathai-sollum-tips/4803) இந்த வலைப்பதிவில் சில சுவாரஸ்யமான உதவிக்குறிப்புகள் உள்ளன.

4.சிறிய குழுக்களோடு குறுகிய நேர வெளிப்புற விளையாட்டு: செய்து முடிப்பதை விட சொல்வது எளிதானது. உங்கள் வீட்டருகில் சக பெற்றோர்களில் சிலருடன் நீங்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் வெளிப்புற விளையாட்டு நேரத்தை கண்காணிக்க ஒருவர் நிச்சயமாக வேண்டும். நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சில விஷயங்களாக இருந்தால் இதை எளிதாக உருவாக்கலாம்.

  • வெளிப்புற விளையாட்டை குறைந்த நேரம் மற்றும் சிறிய குழுக்களாக வைத்திருங்கள். அதை 5 அல்லது அதற்கும் குறைவான குழுவாக இருக்க வேண்டும்.
  • விளையாடுவதற்கு முன்பும் பின்பும் கையை சுத்தப்படுத்துதல் மற்றும் விளையாட்டு நேரத்தில் அவர்களின் முகத்தைத் தொடாதது போன்றவற்றில் விளையாட்டின் விதிகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
  • விளையாட்டு நேரத்தை கண்காணிப்பவரிடம் ஒரு சானிடைஸ்ரை  எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு தேவைப்படும் போது அதை வழங்க வேண்டும்
  • உங்கள் பிள்ளைக்கு சளி அல்லது இருமல் இருந்தால், உங்கள் குழந்தையை விளையாட அனுப்ப வேண்டாம் என்று முன்பே ஒப்புக் கொள்ளுங்கள்.

5. நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடனான வீடியோ அழைப்புகள்: உங்கள் பிள்ளைகள் தினமும் தங்கள் நண்பர்களுடன் சில நேரத்தை இந்த மாதிரி செலவு செய்ய அறிவுறுத்துவேன், அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடவும் பேசவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரைம் பாடுவது போன்ற வீடியோ தொடர்புகளுக்கு நீங்கள் தீம் கொண்டு வரலாம்.

6. உங்கள் குழந்தைக்கு சமூக தொடர்புகளை கொண்ட தினசரி நேர அட்டவணையை உருவாக்குங்கள்: உங்கள் குழந்தையின் அன்றாட வழக்கத்திற்கான ஒரு அட்டவணையை ஒரு தாளில் உருவாக்கி ஒட்டவும் அல்லது ஒயிட் போர்டில் எழுதி வைக்கவும். உங்கள் குழந்தைக்கு ஒவ்வொரு 3-4 மணிநேரத்திற்கும் குறைந்தது ஒரு சமூக தொடர்பு (நேரில் அல்லது வீடியோ அழைப்பு அல்லது தொலைபேசி அழைப்பு மூலம்) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்தகைய சமூக தொடர்புகள் காலம் 5 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம்.

நீண்ட கால சமூக தனிமை ஒரு குழந்தையின் சமூக வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கொரோனா வைரஸ் காரணமாக குறுகிய கால சமூக தனிமை சவால்களை நீங்கள் சமாளிக்க வேண்டிய தருணம் இது. மேலே செல்லுங்கள், உங்கள் அக்கம் பக்கத்து வீட்டார்களுடன், சக பெற்றோருடன் இணைந்து கலந்துரையாடி பாதுகாப்பான சமூக தொடர்புகளை உருவாக்குங்கள். தயவுசெய்து எங்கள் Parentune குழுவை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மேலும் இந்த கொரோனா காலங்களில் உங்கள் குழந்தையின் மன, உடல் மற்றும் சமூக நல்வாழ்வை உறுதி செய்ய உதவிக்குறிப்புகள் உதவும் என நான் நம்புகிறேன்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}