கர்ப்ப காலத்தில் நீரிழப்பிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Jun 15, 2020

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அப்படி இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும். அதுபோக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒருசில மாற்றங்களும் ஏற்படும்.
நீரிழப்பு காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழம் சாறு அருந்த வேண்டும். சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்தும் கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பிரசவத்தின் போது உடலில் இருக்க வேண்டிய நீர்த்தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும் கருவில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருக்க முடியாமல் விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும் இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். உடலில் உள்ள வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி குழந்தையின் மூளையை பாதித்து மூளைக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டாக்கும். தாய்க்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக்குறைப்பாட்டை ஏற்படுத்தும்.
மார்னிக் சிக்னஸ் காரணமாக உண்டாகும் உடல் நீர்வறட்சி
வாந்தியெடுத்தல், வியர்வை அதிகரித்தல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற காரணங்களால் உடலில் நீர்ச்சத்து மற்றும் சக்தி குறைகிறது. இந்த மாதிரி நேரங்களில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் தண்ணீர், பழச்சாறு, காய்கறி மற்றும் கீரை சூப், மோர், இ:ளநீர் போன்றவற்றில் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்போக்கினால் ஏற்படும் உடல் நீர்வறட்சி
திடீரான உணவில் மாற்றங்கள், அதிகமான ஹார்மோன் உற்பத்தி மற்றும் சில உணவு வகையின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை ஏதாவது ஒரு கட்டத்தில் உண்டாகலாம். வயிற்றுப்போக்கினால் அதிகமாக உடல் வறட்சியாகிறது. அதனால் தண்ணீர் ஆகாரமெ இதற்கான சிறந்த தீர்வு. தொடர்ந்து இஒது போல் அடிக்கடி வயிற்றுப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
கர்ப்பத்தின் போது உடல் வறட்சியின் அறிகுறிகள்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் நீரிழப்பின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு. இங்கே படியுங்கள்
- தொண்டை மற்றும் வாய்ப்பகுதி வறட்சியாக இருப்பது
- உதடு மற்றும் தோல் பகுதி வறண்டு போதல்
- சிறுநீர் குறைவாகவும், அதிக மஞ்சள் நிறத்தில் பிரிதல்
- வெயிலிலும் வேற்காமல் இருப்பது
- உடல் சோர்வாக இருப்பது
- மலச்சிக்கல்
உடல் வறட்சியாகாமல் இருக்க சில வழிகள்:
உங்களையும் உங்கள் குழந்தையையும் எப்போதும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள் இங்கே. இங்கே படியுங்கள்
- தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- படுக்கும் முன் தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாம் நிறைய வேண்டாம்.
- தண்ணீர் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள்.
- எழுமிச்சை பழச்சாற்றில் நாட்டு சர்க்கரை கலந்து அருந்தலாம். சிறிது புதினாவும் சேர்த்துக் கொள்ளலாம்.
- நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்ணுங்கள்.
- எலட்ரோலைட் தண்ணீர் தயாரிக்க, தன்ணீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையும், சிறிது உப்பும் கலந்து அருந்தலாம்.
- தயிர் சேர்ப்பதற்கு பதில் மோராக சேர்த்துக் கொள்வதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக் கொண்டால் தாய், சேய் இரு உயிரும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க, குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுங்க!