• உள்நுழை
  • |
  • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

CBSE 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து- தமிழக +2 பொதுத்தேர்வு பற்றி இந்த எண்ணில் கருத்துக்களை சொல்லலாம்

Radha Shri
11 முதல் 16 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 02, 2021

CBSE 12 2
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இவ்வளவு நாட்கள் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் இருந்த மாணவர்கள் இப்போது இந்த முடிவினால் பெரு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.  

 

Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2

— Narendra Modi (@narendramodi) June 1, 2021

 

ஏன் இந்த முடிவு

ஏற்கனவே 10ஆம் வகுப்பு சிபிஎஸ் இ தேர்வு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்புக்கு தேர்வுகள் மே 4ஆம் தேதிமுதல் ஜூன்11ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் "மாணவர்களின் நலனுக்காகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள கவலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதனால் ட்வீட்டர் பக்கத்தில் மாணவர்கள் தங்களது கொண்டாட்டங்களையும், பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

 

I am glad 12th exams have been cancelled. All of us were very worried abt the health of our children. A big relief

— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 1, 2021

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிறைவேறியது

இதற்கிடையில், கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களின் கடந்த கால செயல்திறனின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய பரிந்துரைத்தார். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

மாணவர்களின் பாதுகாப்பு நலன் காரணமாக இந்த முடிவு எடுத்திருக்காங்க. 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதின் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். எங்களுடைய கேள்வி எந்த செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் கொடுக்கப்போறாங்க என்பது தெளிவாக தெரிய வேண்டும். 10 ஆம் வகுப்பு போல் இதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்போகிறார்கள் என்பதை பொருத்தே மாணவர்களின் உயர் கல்வி குறித்து திட்டமிட முடியும்.

 

#JustNow | தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும்

2நாட்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் #TNEducation | #PlusTwo

லைவ் அப்டேட்ஸ் ????https://t.co/5CKYWxL5k5

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 2, 2021

 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்தாகுமா?

+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & toll free number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். இது தொடர்பான பெற்றோர், ஆசிரியர் கருத்துக்களை அறிய ஏற்பாடு செய்திருக்கிறது அரசு. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களை tnschooledu21@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது 14417 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொண்டோ கருத்துக்களை தெரிவிக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தெரிந்துவிடும். இந்த முடிவை பொறுத்து தான் மாணவர்களின் உயர் கல்வி, நீட் மற்றும் பிற கல்வி தொடர்பான முடிவுகள் உறுதிசெய்யப்படும். இந்த முடிவானது வந்த பின் தான் இதன் தாக்கம் எப்படி இருக்க போகின்றது என்பதுன் தெளிவாக தெரியும். ஏற்கனவே பெற்றோர்களும், மாணவர்களும் உயர் கல்வி தொடர்பான திட்டங்களை பற்றி ஆலோசிக்க தொடங்கிவிட்ட நிலையில் இந்த தேர்வு ரத்து முடிவு என்ன மாதிரியான விளைவுகளை தரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}