• உள்நுழை
  • |
  • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

CBSE வகுப்பு 10, 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு 2022: அதிக மதிப்பெண் பெற 10 தயாரிப்புக் குறிப்புகள்

Radha Shri
11 முதல் 16 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 25, 2022

CBSE 10 12 2022 10

2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அத்துடன் இம்முறை தேர்வு நேரங்கள் காலை 10:30 மணி முதல் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படாது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி தொடங்குகிறது
இதன் கீழ்,  சிபிஎஸ்இ பருவம்-1 தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான இரண்டாம் நிலை தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

CBSE போர்டு தேர்வு 2022 (பருவம் 2) க்கான 10 மிக முக்கியமான தயாரிப்பு உதவிக்குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1. உங்கள் போர்டு தேர்வுகளுக்கு தயாராவதற்கு சரியான நேரத்தை தேர்ந்தெடுக்கவும்

ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு கற்றல் திறன்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு மாணவரும் எப்போது தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இருப்பினும், தேர்வுத் தயாரிப்பில் ஒரு பொதுவான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாதவர்கள் அல்லது இன்னும் தொடங்காதவர்கள், தேர்வு முடிவுகளின் போது ஏற்படும் ஏமாற்றத்தை புறக்கணிக்க இப்போதே மனதை தயார்பப்டுத்த வேண்டும் .

2. நல்ல கால அட்டவணை உங்கள் தேர்வு தயாரிப்புகளை எளிதாக்கும்

சரியான திட்டமிடல் இல்லாமல், உங்கள் இலக்கை அடைவது சாத்தியமற்றது. எனவே, வரவிருக்கும் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளுக்குத் திறம்படத் தயாரிப்பதற்கு, ஒவ்வொரு மாணவரும் முதலில் சரியான படிப்பு அட்டவணையைத் தயாரித்து, அதையே தினமும் கடைப்பிடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

3. சுய பரிசோதனைக்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்

பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு, பள்ளி அல்லது பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்ட தலைப்புகளை பகுப்பாய்வு செய்து பயிற்சி செய்ய ஒவ்வொரு மாணவரும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இதுவரை கற்ற விஷயங்களை ஒருமுறை ரிவைஸ் செய்ய தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த ஆய்வு இலக்குகளை அடைய உதவும்.

4. தேர்வுகளில் சிறந்து விளங்க சிறந்த study habits -களை கடைப்பிடிக்கவும்

தேர்வுகளில் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு மாணவரும் சில முக்கியமான தினசரிப் பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவை அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்போலோனோர் சொன்ன உத்தி இது. ஒரு படிப்புத் திட்டத்தை உருவாக்கி, அதைக் கடைப்பிடிப்பது, நேரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம், கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல் ஆகியவை ஒரு மாணவர் பின்பற்ற வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் சில.

5. தேர்வுக்கான நீண்ட பதில்களைக் கற்க ஒரு உத்தியை உருவாக்கவும்

நீண்ட பதில்களைக் கற்றுக் கொள்ளும்போது மாணவர்கள் பீதி அடைவது மிகவும் பொதுவானது. எனவே, நீண்ட பதில்களைக் கற்கும் பயத்தை போக்க, மாணவர்கள் அவற்றைப் பத்திகளாகப் பிரிப்பது, காகிதத்தில் எழுதுவது மற்றும் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்துவது போன்ற நீண்ட பதில்களுக்கான உத்தியை பயன்படுத்தினால் நீங்கள் நீண்ட நேரம் ஞாபகத்தில் வைத்திருக்க உதவும்.

6. முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்வது, வரவிருக்கும் சவாலுக்கு உங்களை தயார்படுத்துகிறது

மாணவர்கள் எப்பொழுதும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை, குறிப்பாக முழுப் பாடத் திட்டத்தையும் படித்த பின், அவற்றைத் தீர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வினாத் தாள்களைப் பயிற்சி செய்வது, உங்கள் தயாரிப்பு நிலையைக் கண்காணிக்கவும், நீங்கள் எங்கே குறைவாக இருக்கிறீர்கள் அல்லது வலுவாக இருக்கிறீர்கள் என்பதை அறியவும் உதவுகிறது.

7. CBSE மாதிரித் தாள்களை தீர்க்கவும்:

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப் பாடங்களுக்கும் CBSE மாதிரித் தாள்கள் வாரியத் தேர்வுகள் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படுகின்றன. சிபிஎஸ்இ மாதிரி தாள்களுடன் பயிற்சி செய்வது உங்கள் தேர்வுத் தயாரிப்புகளை தொடங்க சரியானது என்று ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர். வாரியத் தேர்வுகளில் அவர்களின் பதில்கள் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வாரியத்தால் வெளியிடப்பட்ட மதிப்பெண் திட்டங்களைப் படிக்கவும் அவர்கள் மாணவர்களுக்கு பரிந்திரைக்கிறார்கள்.

8. படிப்பின் இடையே உங்களுக்கு தேவையான இடைவெளிகளை எடுங்கள்

தொடர்ந்து நீண்ட நேரம் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, ஒவ்வொரு 50-60 நிமிடங்களுக்கும் வழக்கமான இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இடைவெளிகள் உங்கள் மூளையை ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த ஆய்வு அமர்வுக்குத் தயாராக உங்கள் ஆற்றலைப் பெறவும் முக்கியம். அவை உங்கள் மூளையை ஒருமுகப்படுத்தவும் விழிப்புணர்வோடும் இருக்க உதவுகின்றன.

9. தேர்வு பயத்தை தூக்கி எறிந்துவிட்டு நிதானமாக இருங்கள்

பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை உங்கள் தயாரிப்புகளுக்கு இடையூறாக இருக்கும் மற்றும் இறுதியில் தேர்வுகளில் உங்கள் செயல்திறனைப் பாதிக்கும். எனவே, டென்ஷன் ஆகாமல், நிதானமான மனதுடன் தேர்வுக்குத் தயாராகுங்கள். நீங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டால், இதன் விளைவாக தானாகவே சிறந்ததாக அமையும். யோகா, நடைப்பயிற்சி, சுவாசப்பயிற்சி என மனதை ரிலாக்ஸ் செய்யவும், பதட்டத்தை குறைக்கவும் சில பயிற்சிகள் உதவும்.

10. உங்கள் போர்டு தேர்வை சரியான முறையில் எழுதுங்கள்

போர்டு தேர்வுக்கு கடினமாக முயற்சி செய்திருக்கிறீர்கள். உங்கள் விடைத்தாளில்  உங்கள் கடின உழைப்பைப் பிரதிபலிக்க வேண்டிய நேரம் இது. 5 முறை ஆழந்த சுவாசம் எடுத்துக் கொண்டு விடைத்தாளைப் பாருங்கள். பதில்களை சிறந்த முறையில் எழுதவும், சரியான நேரத்தில் தேர்வை முடிக்கவும் சரியான நுட்பங்களையும் உத்திகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். தேர்வு எழுதத் தொடங்கும் முன் ஒதுக்கப்பட்ட 15 நிமிட வாசிப்பு நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும்.

வாரியத் தேர்வுகள் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இது எதிர்காலத்தில் அவரது / அவள் தொழில் வாய்ப்புகளை பாதிக்கிறது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றால், அடுத்த கட்டத்தில் உங்களுக்குப் பிடித்தமான படிப்பை எடுத்து உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடர உதவுகிறது. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்பு உதவிக்குறிப்புகளும் உங்கள் CBSE போர்டு தேர்வு 2022 ஐ மிகவும் பொருத்தமான முறையில் எழுதவும், உகந்த மதிப்பெண்களைப் பெறவும் உதவும்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}