• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர்

சந்திர கிரகணத்தைப் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

Parentune Support
3 முதல் 7 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 16, 2019

 7
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

ஒரு விஷயம் நீங்க கவனிச்சீங்கன்னா உங்க பசங்க எல்லா விஷயங்களுக்கும் கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க. அதுவும் தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கிற ஆர்வம் அவங்களுக்கு அதிகமாவே இருக்கும்.

இது ஏன் இப்படி, இதுக்கு அர்த்தம் என்ன, அப்படின்னா  என்னன்னு ஒவ்வொரு புது விஷயத்தைப் பார்க்கும்போதும், அது பத்தின கேள்விகளை அடுக்கிட்டே போவாங்க. இந்த வருஷம் ஜூலை 16 மற்றும் 17 தேதிகள்ல சந்திர கிரகணம் நிகழப் போகுது. கண்டிப்பா இதைப் பத்தியும் வீடுகள்ல நாம பேசுவோம்.

சந்திர கிரகணம்னா என்ன அப்படிங்கிறதை தெரிஞ்சுக்கிற ஆர்வம் குழந்தைங்களுக்கு ரொம்பவே அதிகமா இருக்கும். அப்படி குழந்தைங்க வந்து உங்ககிட்ட கேட்கும் போது அவங்களுக்கு நீங்க சொல்ல வேண்டிய முக்கியமான 7 விஷயங்களை இப்போ நாம பார்க்கலாம்.

 

சந்திர கிரகணம்:

சந்திர கிரகணம் அப்படிங்கிறது சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையில பூமி வரும்போது நடக்கிற ஒரு நிகழ்வு. பூமியோட நிழல் நிலா மேல விழுந்துஅதனாலநிலாவோட  ஒளி குறையுற நிகழ்ச்சியைத் தான் நாம சந்திரகிரகணம்னு சொல்றோம். புரியிற மாதிரி சொல்லணும்னா ஒரு சாயங்கால நேரத்துல நீங்க உங்கஃப்ரெண்டோட மொட்டை மாடிக்குப் போங்க. சூரிய வெளிச்சம் உங்களை நோக்கி விழற மாதிரி நில்லுங்க.

சந்திர கிரகணம் எப்படி நடக்குது அப்படிங்கிறதை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நீங்க கிழக்குப் பார்த்து நில்லுங்க. அப்போ உங்களுக்குப் பின்னாடி சூரியன் இருக்கும். அந்த நேரத்துல உங்களோட நிழல் கிழக்கு திசைல விழறதை நீங்க பார்க்க முடியும். இப்போ உங்க ஃப்ரெண்டை உங்களுக்கு முன்னாடி வந்து நிற்கச் சொல்லுங்க. அப்படி நிற்கும்போது உங்களோட நிழல் உங்க ஃப்ரெண்ட் மேல விழுந்து அவங்கள மறைக்கிறதை நீங்க பார்க்கலாம்.

அதாவது நீங்க பூமி, உங்க ஃப்ரெண்ட் நிலா, அப்படின்னு வச்சுக்கிட்டா சூரியனோட வெளிச்சம் பூமி மேல படும்போது பூமியோட நிழல் உருவாகுது. அது நிலாவை மறைக்குது. இது தான் சந்திர கிரகணம். பூமிசூரியனை சுத்துது. நிலா பூமியை சுத்தி வருது. சூரியன், பூமி, நிலா இது மூணும் ஒரே நேர்க்கோட்டுலவரும்போது தான் சந்திர கிரகணத்தை நாம பார்க்க முடியும்.

 

சந்திர கிரகணம் எப்போது நிகழும்?

முன்னாடியே சொன்ன மாதிரி சந்திரன், பூமி மற்றும் சூரியன் இவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது தான் சந்திர கிரகணம் தோன்றும். சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமி நாட்கள்ல தான் நிகழும். 

 

இந்த ஆண்டு சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது

இந்திய நேரப்படி இந்தியாவில் ஜூலை 17, 2019, நள்ளிரவு 1.32 மணியிலிருந்து ஜுலை 17, 2019 அதிகாலை 4.30 வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

 

சந்திர கிரகணத்தை எல்லா நாடுகளிலும் பார்க்க முடியுமா?

இம்முறை இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படும். இந்தியாவை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் சந்திர கிரகணத்தை காணலாம். கிட்ட தட்ட மூன்று மணி நேரத்திற்கு கிரகணம் நீடிக்கிறது.

 

கிரகணத்தின் போது சந்திரனை பார்க்கலாமா:

சந்திர கிரகணத்தின் போது சந்திரனை வெறும் கண்ணால் பார்ப்பதால் ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால் சூரியகிரகணத்தின் போது கண்டிப்பாக சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. சூரிய கிரகணத்தின் போது கதிர் வீச்சுகள் அதிகம் இருப்பதே இதற்கு காரணம். அதே சமயம் சந்திர கிரகணத்தின் போது கதிர்வீச்சுகள் அவ்வளவாக இருப்பதில்லை. அதனால் சந்திரனை அந்த சமயத்தில் பார்ப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

கிரகணத்தின் போது வெளியில் குழந்தைகள் விளையாடலாமா?

குழந்தைகளுக்கு எப்போழுது நாம் வெளியில் செல்ல கூடாது என்று சொல்கிறோமோ அப்போது தான் அவர்களுக்கு வெளியில் செல்லும் ஆர்வம் அதிகமாக இருக்கும். சந்திர கிரகணத்தின் போது வெளியில் செல்ல கூடாது என்று முன் நாட்களில் சொல்லியிருந்தார்கள். ஆனால் சந்திர கிரகத்தின் போது வெளியில் செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. சூரிய கிரகணத்தின் போதே குழந்தைகள் மற்றும் கர்பினி பெண்கள் வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். இம்முறை நள்ளிரவில் வருவதால் அந்த நேரத்தில் குழந்தைகள் தூங்கி கொண்டிருப்பார்கள். அதனால் இந்த பிரச்னை இல்லை.

 

கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்?

கோவில்களில் அதிகப்படியான பாஸிடிவ் எனர்ஜி இருக்கும். அந்த பாஸிடிவ் எனர்ஜியாலேயே கோவிலுக்கு சென்றால் மன அமைதி கிடைக்கும் என்பார்கள். கோவிலுக்கு செல்லும் அனைவரும் இங்கு சென்று வேண்டி கொண்டால் நன்மை நடக்கும் என்று பாஸிட்டிவ்வாக நினைத்து கொண்டு தான் வருவார்கள். ஆனால் கிரகணத்தின் போது அதிகப்படியான நெகடிவ் எனர்ஜி வரும். அது கோவிலுக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே கிரகணத்தின் போது கோவில்கள் நடை சாத்தப்படுகின்றன.

 

கிரகணத்தின் போது சாப்பிடலாமா?

சந்திர கிரகணத்தின் போது கண்டிப்பாக சாப்பிடலாம். கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்களில் நச்சுத் தன்மை இருக்கும் என்றும், அதனால் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அந்த நச்சு கலந்து அது விஷத் தன்மையாக மாறிவிடும் என்றும் சொல்லப்படுது. ஆனா வயலில் இருக்கிற பயிர்கள், மரத்துல இருக்கிற பழங்கள் இவை எல்லாம் நேரடியாக கிரகணத்தை சந்திக்கும். அவை நச்சுத் தன்மை உடையதாக மாறுவதில்லை. இதனால் அவ்வாறு சொல்லப்படுவது வெறும் மூட நம்பிக்கையே. கிரகணத்தின் போது தாராளமாக சாப்பிடலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}