• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சௌசௌ சட்னி – நன்மையும், ருசியும் ஏராளம்

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 02, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பெரும்பாலும் குழந்தைகளுக்கு இட்லி தோசைக்கு என்ன தொட்டுக் கொள்ள கொடுக்கனும் அடிக்கடி அம்மாக்கள் நம்ம யோசிக்கிறதுண்டு. நானும் இது சம்பந்தமா புதுசா ஏதாவது என் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாமான்னு தேடிப் பார்க்கிறதுண்டு. என் பாட்டியும் விதவிதமான சட்னிகள் செய்து கொடுப்பாங்க. அதுல ஒன்னும் தான் இந்த ருசியான செளசெள சட்னி. வாங்க, அதன் செய்முயையையும், நன்மைகளையும் இந்த பதிவுல பார்க்கலாம்

செளசெள சட்னியில் கிடைக்கும் நன்மைகள்

சௌசௌ காயில் புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச் சத்தும் நிறைந்து இருக்கின்றது. சுவையான சமையல் உணவாக மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு நிவாரணியாகவும் திகழ்கின்றன.

கர்ப்பிணிகளுக்கு என்னென்ன நன்மைகள்?

கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் நீர் கோர்த்தது போன்ற வீக்கங்கள் ஏற்படும். இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வீக்கங்கள் வடிந்து விடும்.

மேலும், கருவில் உள்ள குழந்தையையும் வியாதிகளின் தொற்றுக்களில் இருந்து காக்கக் கூடியது சௌ சௌ.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது

சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும். குழந்தைகள் உணவில் சௌ சௌவை சேர்த்து வர, குழந்தைகள் ஊட்டமும், உடல் நலமும் பெறுவர்.

செளசெள சமையல் ரெசிப்பிகள்

 • சௌசௌ உணவில் சேர்க்கும் முறைகள் சயோட் ஸ்குவாஷ் (சௌசௌ) பச்சையாக பரிமாறும்போது, ​​மிருதுவாக்கிகள் மற்றும் சாலட்களுக்கு இது ஒரு சிறந்த கூடுதலாகிறது.
 • சௌசௌ காய் வேக வைத்து கூட்டு செய்து சாப்பிடலாம்.. குழந்தைகள் கூட்டு செய்து கொடுப்பதை விட சட்னி செய்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.  அதனால் என் அம்மா, அவர்கள் அம்மா கற்றுக் கொடுத்த இந்த சட்னியை எனக்கு செய்து கொடுத்தார்.. எனக்கு மிகவும் பிடித்த சட்னி.. நான் என் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கிறேன்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.. இப்போது நான் சௌசௌ சட்னி எவ்வாறு செய்வது என்று சொல்கிறேன்

 தேவையான பொருட்கள்

 • சௌசௌ- 1 முழு காய்கறி (சிறியது)
 • பச்சை மிளகாய். - 2
 • உளுந்து பருப்பு. - 1 டீஸ்பூன்
 • புளி - 1 சிறிய துண்டு
 • எண்ணெய் - 2 டீஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

 1. அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி உழுந்துபருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 2. அதன் பின்னர் சௌசௌ சேர்த்து நன்கு வதக்கவும்.
 3. அடுப்பை அணைக்க ..
 4. மிக்சியில் வதக்கி எடுத்த பொருட்கள் சேர்த்து உப்பு மற்றும் புளி சேர்க்கவும் .
 5. இதை நன்றாக அரைக்கவும்
 6. இறுதியில் வாணலி வைத்து ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளலாம்...

 இப்போது சௌசௌ சட்னி தயார்..

சௌசௌ சூப் செய்து கொடுத்துப் பாருங்கள்

வேக வைத்த சௌ சௌவை, தண்ணீரில் போட்டு சூடாக்கிக் கரைத்து, உப்பு, மிளகு சேர்த்து, சூப் போல தினமும் இரு வேளை பருகி வர, வயிற்றுக் கொழுப்புகள் கரைந்து, உடல் நலமாகும். இந்த சௌ சௌ சூப்பே, உடலுக்கு சிறந்த சக்தி தரும் பானமாகவும், பயன் தரும் இந்த சட்னியை முயற்சிக்கவும்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.  உணவின் சுவை உப்பிலும் உரைப்பிலும் உள்ளதை விட பகிர்வதில் தான் அதிகம் உள்ளது.... அடுத்த பதிவில் உங்களுடன் இணைகிறேன்.... Take Care

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jul 05, 2021

 • Reply | 1 Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}