• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

வீட்டிலேயே கொரோனா சுயபரிசோதனை செய்யலாம் - ஐசிஎம்ஆர் ஒப்புதல்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 22, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொரோனா பரிசோதனைகளுக்காக இனி மருத்துவமனைகளுக்கோ அல்லது லேபுகளுக்கோ அலைய வேண்டியதில்லை. இனி கொரோனா பரிசோதனைகளை வீட்டிலேயே செய்யலாம் என ஐசிஎம்ஆர்(இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) ஓப்புதல் கொடுத்திருக்காங்க. இதற்காக ஒரு புதிய கிட் ஒன்றும் கண்டுபிடிச்சிருக்காங்க.

  • வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்வதற்கான கிட்
  • 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை அறியலாம்
  • 4 நாட்களுக்குள் 7 லட்சம் மருந்துக் கடைகளில் விற்கப்படும்.

முழுவதுமாக தகவல்களை பெற தொடர்ந்து படியுங்கள்.

பேத்தோ கேட்ச் (CoviSelfTM (PathoCatch) கிட்

இந்த கிட்டின் பெயர் CoviSelfTM பேத்தோ கேட்ச் (PathoCatch). இதனை புனேவிலுள்ள மைலேப் டிஸ்கவர் சல்யூஷன்ஸ் நிறுவனம் இந்த உபகரணத்தை கண்டுபிடித்துள்ளது. ரேபிட் ஆன்டிஜன்  டெஸ்ட் (rapid antigen test RAT)   என்ற முறையை பயன்படுத்தி இந்த தொற்றை உறுதி செய்யும்படி வடிவமைத்திருக்கிறாங்க. இதை பயன்படுத்துவதற்கு முன்பு சில வழிகாட்டு நெறிகுறைகளையும் இந்த நிறுவனம் சொல்லியிருக்காங்க. அதையும் என்னனு முழுமையா தெரிஞ்சுக்கலாம்.

COVID home kit

யாரெல்லாம் இந்த கிட்டைப் பயன்படுத்தலாம்

 இந்த உபகரணத்தை அனைவரும் பயன்படுத்தக் கூடாது. கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறையையும் சொல்லியிருக்கின்றது.

இந்த உபகரணத்தை பயன்படுத்தி பாசிட்டிவ் என வந்தால் அதை 100 % உண்மையாக கருதி ஆசிஎமார் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

இதை ஆர்டிபிஆர் பரிசோதனையுடன் ஒப்பிடும் போது நெகட்டிவ் காட்ட்வும் வாய்ப்புள்ளது. ஒருவேலை இந்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் அவர்கள் ஆர்டிபிசிஆர் (RT-PCR) பரிசோதனையை எடுக்கும்படி பரிந்துரை செய்யப்படுகின்றது. ஏனென்றால், எந்த கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளும் விடுபட்டுவிடக்கூடாது என்று இதனை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் தொற்று அதிகமாக இருக்கும் போது உடலில் வைரஸின் தாக்கம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர்கள் மற்றவருக்கும் பரப்ப வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இந்த  பரிசோதனையில் தவறு நேராது என்கிறது ஐசிஎம்ஆர்.

Test results

பேத்தோ கேட்ச் (CoviSelfTM(PathoCatch) கிட்டில் என்னென்ன இருக்கும்? எப்படி பயன்படுத்த வேண்டும் ?

இந்த கிட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஐசிஎமார் ஒரு வீடியோவும் வெளியிட்டுருக்காங்க. இந்த கிட்டுடன் நாசித்துவாரத்திலிருந்து மாதிரியை எடுப்பதற்கான பஞ்சுடன் கூடிய நேசல் ஸ்வேப், அதை சேமிக்க திரவம் நிரப்பப்பட்ட டியூப், சோதனை அட்டை மற்றும் சோதனைக்கு பின் உபகரணத்தை எப்படி அப்புறப்படுத்த பயோ ஹசார்ட் பை என இவை அனைத்தௌம் அந்த கிட்டில் இருக்கும். சந்தேகம் உள்ளவர்கள் அந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பரிசோதனையை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உங்கள் மொபைலில் Mylab Coviself அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ளவும். ஸ்வேபைக் கொண்டு இரண்டு நாசித் துவாரங்களிலும் குறைஞ்சது 5 முறை மெதுவாக, நிதானமாக சுழற்றி மாதிரியை சேமித்துக் கொள்ளுங்கள். அதனை திரவம் நிரப்பப்பட்ட டியூப்பில் செலுத்திவிட்டு, ஸ்வேபின் எஞ்சிய பகுதியை உடைத்து விடுங்கள். பின்னர் சோதனை அட்டையில் உள்ள கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் அந்த திரவத்தில் இரண்டு சொட்டுகளை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளிடவும்.

COVID Positive  

Negative 

நீங்கல் முடிவு தெரிய 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். டெஸ்ட் (T) என்ற துவாரத்தில் பாசிட்டிவ் என்றால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் இன்னொரு அழுத்தமான கோடு உண்டாகும். நெகட்டிவ் என்றால் கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் மட்டுமே கோடு இருக்கும். இந்த பரிசோதனையில் 20 நிமிடங்களுக்கு மேல் காட்டும் எந்த ஒரு முடிவும் ஏற்கத்தக்கதல்ல. அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. சோதனை முடிந்த பிறகு உபகரணத்தின் அனைத்துப் பகுதிகளையும் பயோ ஹசார்ட் பையில் வைத்து அப்புறப்படுத்திவிடவும்.

முடிவு ஏற்கத்தக்கதல்ல

Invalid

பேத்தோ கேட்ச் (PathoCatch) விலை

இந்தக் கிட்டின் விலை வரியையும் சேர்த்து 250ரூபாய் என நிர்ணத்திருக்கிறார்கள்.

எப்போது கிடைக்கும் இந்த கிட்?

இன்னும் ஒரு வாரத்திற்குள் சந்தைக்கு வரவதாக சொல்கிறார்கள்.மொபைல் ஆப் மூலம் விற்பதற்கு சில நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக ஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் நாட்டின் 7 லட்சம் மருந்து கடைகளில் இந்த கிட் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இந்த கிட் பற்றிய வெளியான தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த கிட் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் இதன் உண்மைத்தன்மை பற்றிய நாம் முழுமையாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் எழுத்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். இப்போது உள்ள சூழ்நிலைக்கு இந்த கிட் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}