கரோனா சம்மர் கேம்ப் - வீட்டில் உங்கள் குழந்தையை ஈடுபடுத்தும் ஆக்டிவிட்டீஸ் என்னென்ன?

டே கேர், பள்ளி, மால் திரையரங்குகள், பூங்கா என அனைத்தும் கொரோனா பரவலைத் தடுக்க மூடப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை வீட்டில் இருக்க வைப்பது மிகவும் சவாலான நிலை பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கிறது. Parentune 'கொரோனா சம்மர் கேம்ப்' என்ற பெயரில் குழந்தைகளுக்கு பயனுள்ள விஷயங்களையும், அவர்கள் விரும்பத்தக்க வகையில் பெற்றோர்கள் ஈடுபட வைக்க ஒரு சிறப்பு பக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளோம். குழந்தைகளை ஈடுபட வைக்கும் சுவாரசியமான கதைகள், ஆக்டிவிட்டி போன்றவை இந்த பக்கத்திலும் பேரன் டியூன் நெட்வொர்க்கில் உள்ள பெற்றோர்களுக்கும் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
இது முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவர்களது கற்கும் திறன் தடைபடாமல் இருக்க பேருதவியாக இருக்கும். நீங்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்பவராக இருந்தாலும் இந்த ஆக்டிவிட்டீஸ் உங்கள் குழந்தைகளுக்கு பயன்படும்.
1-3 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
1. படித்தல் மற்றும் எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக வெட்டி எடுத்துக்கொண்டு வார்த்தைகளுக்கு ஏற்ப சரியான எழுத்துக்களை ஒன்று சேர்க்கும் ஆக்டிவிட்டி கொடுக்கலாம். உதாரணம்: 'A' on 'Apple' இதுபோல் வயதிற்கேற்ப சவாலான சொற்கள் ஆக்டிவிட்டியைத் தரலாம்.
2. மோட்டார் திறன்கள் மற்றும் எண்களை கண்டுபிடிக்கும் ஆக்டிவிட்டி உங்கள் குழந்தையிடம் பல பொருட்களை கொடுத்து அதை எண்ண சொல்லுங்கள். பிறகு நீங்கள் சொல்லும் எண்ணில் வைக்க சொல்லுங்கள். இதேபோல குறிப்பிட்ட எண்ணிற்கான பொருட்களைக் கொடுத்து அதற்கான சரியான எண்களை கண்டுபிடிக்க செய்யவும்.
3. வடிவங்கள் மற்றும் வண்ணங்கள்
உங்கள் கலெக்க்ஷனில் உள்ள பலதரப்பட்ட வடிவங்களையும் வண்ணங்களையும் அவர்களுக்கு கொடுத்து அதற்கு ஏற்ற சரியான இடத்தில் வைக்க சொல்லலாம்.
4. கதை வாசிப்பு
கதை புத்தகத்தில் இருந்து குழந்தைகளுக்கு ஏற்ப பலவிதமான கதைகளை அவருக்கு சொல்லலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்காக அமையும்.
3-7 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
1.ஒன்றாக புத்தகம் வாசித்தல்
மொழித்திறன் மற்றும் சிந்தனை திறன் மேம்படுவதற்கு புத்தகம் வாசிப்பு சிறந்த முறையாகும் . பல்வேறு புத்தகங்களில் இருந்து தேர்வு செய்து வாசிக்கலாம் அவை கதைப் புத்தகங்களாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை.
2. கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணாமூச்சி விளையாட்டில் நபரை கண்டுபிடிப்பதற்கு பதிலாக பொருட்களை மறைத்து வைத்து கண்டுபிடிப்பது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டும். இதனை புதையல் வேட்டை என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டிலோ அப்பார்ட்மெண்ட் சுற்றிலும் பொருட்களை மறைத்து வைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்கும் ஆக்டிவிட்டி அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளையாட்டு
இந்த விளையாட்டில் பொருட்கள் அல்லது வார்த்தைகளை ஞாபகப்படுத்தும் விதமாக விளையாடலாம். படங்களை காட்டி அதிலிருந்து ஞாபகப் படுத்தும் விளையாட்டு செய்ய வைக்கலாம். உதாரணத்திற்கு இரண்டு படங்களுக்கான வித்தியாசங்களை கண்டுபிடிக்க சொல்லலாம். உங்களது குடும்ப புகைப்படத்தை காண்பித்து அதில் உள்ள குடும்பத்தினரை பற்றி ஞாபகப்படுத்த சொல்லலாம்.
வார்த்தை விளையாட்டுகள்
இந்த விளையாட்டில் பல விதங்கள் இருக்கின்றது. ஒரு வார்த்தையில் இரண்டு மூன்று சொற்களை நீக்கிவிட்டு கண்டுபிடிக்க சொல்வது, நிறைய சொற்களை பரப்பிவிட்டு உள்ளே மறைந்திருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்டுபிடிக்க சொல்லலாம். படங்களை வைத்து வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விளையாட்டை கொடுக்கலாம்.
7-11 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்
சமையலறை விளையாட்டுகள்
தினசரி வீட்டு வேலைகளில் உங்கள் பிள்ளையை ஈடுபடுத்தலாம். மேலும் அவற்றைப் பார்த்துக் கொள்ள நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி குழந்தைக்கு ஒரு புரிதல் வரும். காய்கறி வெட்டுவது, சுத்தம் செய்வது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது என உங்கள் பிள்ளையை சமையலறையில் ஈடுபடுத்துவதன் மூலம் பிணைப்பு மற்றும் நிர்வாக திறன்களை ஊக்கப்படுத்தலாம். அவர்கள் பாதுகாப்பாக செய்யும் வகையில் சமையலறையை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாடகம் - கதைகளை இயற்றுதல்
உங்கள் குழந்தையின் உணர்ச்சிபூர்வமான மேற்கோளுடன், மொழி மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த இது ஒரு வேடிக்கையான வழியாகும். எந்தவொரு கதைப்புத்தகத்திலுள்ள பாத்திரத்தைத் தேர்வுசெய்க, அதை நாடகமாக இயற்றும் விளையாட்டை முயற்சி செய்து பாருங்கள். மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.
கதையை உருவாக்குவது
உங்கள் குழந்தையின் கற்பனை திறனை மேம்படுத்த இது ஒரு சிறந்த பயிற்சியாகும். அவர்களுக்கு 5 - 10 வெவ்வேறு சொற்களைக் கொடுத்து, அவற்றைச் சுற்றி கதைகளை உருவாக்கட்டும். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகும் அதோசு அவர்களின் சொல்வளமும் அதிகரிக்கும்.
நடனம் ஆடுவது
உடல் மற்றும் மனம் இரண்டையும் ஈடுபடுத்த நடனமாடுவது ஒரு சிறந்த வழியாகும், முழு குடும்பமும் சேர்ந்து இதனை செய்யும் போது வேடிக்கையை அளவிட முடியாது.
சித்திரம் தீட்டலாம்
பென்சில்களை மட்டுமே பயன்படுத்தி வரைவதற்கு வழக்கத்திற்கு மாறான பெய்ண்ட் வைத்து பல வண்ண ஓவியம் வரைய சொல்லலாம். தீம் பெயிண்டிங், வீட்டை சுற்றியுள்ள இடங்களை பெயிண்ட் பண்ணலாம். இப்படி அவர்களின் கற்பனைகளை தூண்டக்கூடிய வகையில் ஓவியம் வரையலாம்.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் வலைத்தளம்
கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றல் என்பது ஹைடெக் எதிர்கால உலகிற்கு இன்றியமையாத திறமையாகும். உங்களுக்குத் தேவையானது இணைய இணைப்பு மற்றும் அடிப்படைகளைத் தொடங்க கணினி. HTML ஐப் பயன்படுத்தி வலைத்தளங்களை உருவாக்க உங்கள் பிள்ளையை ஊக்கப்படுத்தலாம்.
விமான வடிவமைப்பு / கட்டிடக்கலை
இந்த மாதிரி ஆக்டிவிட்டி மூலம் திட்ட மேலாண்மை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை கற்றுக்கொள்ளலாம். குழந்தையின் மூளையைப் பயன்படுத்தி விமானம், கட்டிடம் / வீட்டு மாதிரிகள் ஆகியவற்றை உருவாக்குவது என்பது அவர்களது கற்பனையை சக்தியை அதிகரிக்கும் செயலாகும்.
கற்றலுக்கு ஊக்கப்படுத்தும் மற்ற இணையதளங்கள்
- BrainPop
- Curiosity Stream
- Tynker
- Outschool
- Udemy
- iReady
- Beast Academy (Math)
- Khan Academy
- Creative Bug
-Discovery Education
YouTube Channels for Child Education
- Crash Course Kids
- Science Channel
- SciShow Kids
- National Geographic Kids
- Free School
- Geography Focus
- TheBrainScoop
- SciShow
- Kids Learning Tube
- Geeek Gurl Diaries
- Mike Likes Science
- Science Max
- SoulPancake
கற்றலுக்கான இலவச இணையதளங்கள்
- Starfall Education: Kids Games, Movies, & Books K-3
- ABCya! • Learning Games and Apps for Kids
- Funbrain: Games, Videos, and Books for Kids
- SplashLearn - Fun Math Practice Games for Kindergarten to Grade 5
- Storyline Online
- PBS KIDS
- Highlights Kids
- National Geographic Kids
- CoolMath4Kids: Home
- Math Game Time - Free Math Games & Worksheets for Kids & Teachers
- Unite for Literacy
- Literactive - Teaching Children to Read
- Science for Kids - Fun Experiments, Facts, Games & Projects
- Switch Zoo Animal Games
- Seussville: Home
- TurtleDiary: Kids Games - Educational Computer Games Online
- e-learning for kids
கரோனா வைரஸ் பற்றிய விவரங்கள்
நாவல்-கரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பால் வணிகங்களும் சமூகக் கூட்டங்களும் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இவ்வளவு பெரிய அளவில் மாற்றங்களை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த வைரஸ் தொற்று பற்றி இதுவரை நமக்குத் தெரிந்ததைப் பார்த்தால், பீதி அடையத் தேவையில்லை. அதற்கு பதிலாக, நிலைமை குறித்த உங்கள் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும். நம்பகமான மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட இதுபோன்ற எல்லா தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் எப்போதும் தவறக்கூடாது. கோவிட் -19 பற்றிய உங்கள் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பயத்திலிருந்து திசைத்திருப்பவும் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
நாவல்-கரோனா வைரஸைப் பற்றிய தகவல்களை இங்கே படிக்கலாம்: http://www.parentune.com/parent-blog/corona-virus-covid-19-kudumpangal-marrum-kuzathaikalukkaana-paathukaappu-munnechcharikkaikal/5321
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...